“பயண ஆலோசனைகளை மாற்றுவதற்கு எவ்வித நியாயங்களும் இல்லை” என வெளிநாட்டமைச்சர் அமுணுகம தெரிவிக்கின்றார்

“பயண ஆலோசனைகளை மாற்றுவதற்கு எவ்வித நியாயங்களும் இல்லை” என வெளிநாட்டமைச்சர் அமுணுகம தெரிவிக்கின்றார்

????????????????????????????????????

சமகால நிகழ்வுகளைத் தொடர்ந்து நாட்டில் எவ்வித வன்முறைகளோ தடங்கல்களோ இல்லாததனால் சில நாடுகளால் வெளியிடப்பட்ட பயண ஆலோசனைகளுக்கு எவ்வித நியாயங்களும் இல்லை என வெளிநாட்டமைச்சர் கலாநிதி. சரத் அமுணுகம தெரிவித்தார். சுற்றுலாத் துறை எவ்வித சிரமத்திற்கும் உட்படவில்லை.

அண்மையில் வெளியிடப்பட்ட பயண ஆலோசனைகளை பற்றி கலந்தாலோசிப்பதற்காக தலைசிறந்த உள்நாட்டு சுற்றுலா இயக்குணர்கள், இலங்கை சுற்றுலா மேம்பாட்டுச் சபையின், சிரேஷ்ட உத்தியோகத்தர்கள், சிறீலங்கா எயார்லைன்ஸ் மற்றும் ஏனைய வெளிநாட்டு பயண முகவர்களின் பிரதிநிதிகளை சந்தித்த போதே இந்த அவதானங்களை அமைச்சர் முன்வைத்தார். சுற்றுலாத்துறையின் பாதுகாப்பிற்கும் அதனை மேம்படுத்துவதற்கும் இலங்கை அரசு மிகவும் அர்ப்பணத்துடன் காணப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.

வழக்கமான விமானங்களுக்கு அப்பால், உலகின் தலைசிறந்த சுற்றுலா இயக்குணர்களில் ஒன்றான ரி.யு.ஐ தற்போது வார அடிப்படையில் கொழும்புக்கு 03 பட்டய விமானங்களை செயற்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ள அதேவேளை பயணியர் கப்பல் உயர் காலங்களில் இலங்கையை அழைப்பு துறையாக பயன்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளது எனவும் தொழில் அதிபர்கள் அமைச்சருக்கு சுட்டிக்காட்டினார். மேலும் 2018 ஒக்டோபர் 28 முதல் மொஸ்கோவிலிருந்து கொழும்புக்கு இடையராத நேரடி விமான சேவையை செயற்படுத்துவதாக ஏரோ விமானம் அறிவித்துள்ளது என்றும்  2018 நவம்பர் 04 முதல் சுரிச் - கொழும்பு நேரடி விமானத்தினை சுவிஸ் ஆரம்பிக்கும் எனவும் தொழில் அதிபர்கள் குறிப்பிட்டனர். அதேநேரம் தலைசிறந்த சர்வதேச பயண வெளியீட்டாளர்களில் ஒருவரான “லோன்லி பிலனட்” சமீபத்தில் இலங்கையை உலகின் முதல்தர சுற்றுலாத்தளமாக பெயரிட்டிருந்தது. இங்கிலாந்து கிரிக்கட் அணியின் தற்போதைய சுற்றுப்பயணத்தினை கண்டு மகிழ்வதற்காக சுமார் 4000 கிரிகட் இரசிகர்கள் ஐக்கிய இராச்சியத்திலிருந்து வருகை தருவதாக சுட்டிக்காட்டப்பட்டது. இது இலங்கையின் அமைதி நிறைந்த சூழல் நிலவுவதற்கான சான்றாகவும் சுற்றுலாப்பயணிகள் தடைகளின்றி சுற்றுலாத்தளங்களை தரிசிப்பது மற்றும் இலங்கை முழுவதிலும் வசதிகளை அனுபவிக்கிறார்கள் என்பதற்கும் சாட்சியமாகவும் உள்ளது.

தான் கருமங்களைப் பொறுப்பேற்ற நாள் முதல் வெளிநாடுகளிலுள்ள இலங்கையின் அனைத்து தூதுவராலயங்களினதும் தலைவர்களுக்கும் தான் சார்ந்திருக்கின்ற நாடுகளில் இலங்கையின் நில உண்மைகளுக்கேற்ப பயண ஆலோசனைகளை நீக்குவதற்காக அதிகார சபைகளுக்கு தனிப்பட்ட முறையில் செல்லுமாறு அறிவுறுத்தி வருவதாகவும் அமைச்சர் தெரிவத்தார். மேலும் குடிவரவினை மேம்படுத்துவதற்காக இலங்கையில் நிலவுகின்ற அமைதியான நிலைமையை விளங்கப்படுத்துவதற்காக தலைசிறந்த பயண முகாமையாளர்கள் அல்லது வெளிநாட்டு பயண இயக்குணர்களுடன் தொடர்ந்தேர்ச்சையான தொடர்புகளை அவர்கள் வைத்திருப்பர். மேலும் அமைச்சர் குறிப்பிடுகையில் சுற்றுலா மேம்பாட்டினை வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் செயற்பாடுகளின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக ஆக்குவதற்கு அவர் திட்டமிட்டமிருப்பதாகவும் தெரிவித்தார்.

வெளிநாட்டு செயலாளர் ரவிநாத ஆர்யசிங்க மற்றும் அமைச்சின் சிரேஷ்ட உத்தியோகத்தர்களும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு

கொழும்பு

02 நவம்பர் 2018

Please follow and like us:

Close