வொஷிங்டன் டி.சி.யில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் 2023ஆம் ஆண்டிற்கான பணிகள் ஆரம்பம்

வொஷிங்டன் டி.சி.யில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் 2023ஆம் ஆண்டிற்கான பணிகள் ஆரம்பம்

வொஷிங்டன் டி.சி.யில் உள்ள இலங்கைத் தூதரகம் தூதுவர் மகிந்த சமரசிங்க அவர்களின் தலைமையில் தனது பணிகளை 2023ஆம் ஆண்டு ஜனவரி 02ஆம் திகதி தொடங்கியது.

பாரம்பரியத்திற்கு அமைவாக, தேசியக் கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன் முதல் நாள் பணிகள் ஆரம்பமாகி, தாய்நாட்டிற்காக உயிர்த் தியாகம் செய்த வீரர்களை நினைவுகூரும் வகையில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து அரச அலுவலர்களுக்கான உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது.

தூதரகத்தினால் 2023ஆம் ஆண்டில் எட்டப்பட வேண்டிய விடயங்கள் குறித்த வழிகாட்டல்களை வகுத்து, ஊக்கமளிக்கும் வார்த்தைகளுடன் தனது ஊழியர்களுக்கு மத்தியில் தூதுவர் மகிந்த சமரசிங்க உரையாற்றினார். புத்தாண்டை முன்னிட்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களுக்கு வழங்கிய செய்தியை தூதுவர் மீண்டும் வலியுறுத்தினார். தேசத்தின் மீட்சிக்காக உழைப்பதில் இலங்கையர்கள் அனைவரும் கைகோர்க்க வேண்டும் என்ற ஜனாதிபதியின் உணர்வை அவர் எதிரொலித்தார்.

இலங்கையின் பன்முகத்தன்மை பாரிய பலத்தின் ஊற்றுமூலமாக இருப்பதால் அது பாதுகாக்கப்பட்டு வளர்க்கப்பட வேண்டும் என தூதுவர் சமரசிங்க தெரிவித்தார். நமது வளமான பன்முகத்தன்மையை அரவணைத்துக் கொண்டாடும் உண்மையான இலங்கை அடையாளத்தை வளர்க்க வேண்டும் என அவர் அழைப்பு விடுத்தார். 2022 இல் பெற்ற வெற்றிகளை விடவும் கூடுதலான பலன்களை அடைவதற்காக தூதரக ஊழியர்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.

இலங்கைத் தூதரகம்,

வொஷிங்டன் டிசி.

 

2022 ஜனவரி 03

Please follow and like us:

Close