வொஷிங்டன் டி.சி. யில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் 2022 கிறிஸ்மஸ் கொண்டாட்டம்

வொஷிங்டன் டி.சி. யில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் 2022 கிறிஸ்மஸ் கொண்டாட்டம்

வொஷிங்டன் டி.சி. யில் உள்ள இலங்கைத் தூதரகம் 2022 டிசம்பர் 17ஆந் திகதி சான்சரி வளாகத்தில் கிறிஸ்மஸ் நிகழ்வைக் கொண்டாடிய அதே நேரத்தில் ஸூம் மற்றும் முகப்புத்தகம் வாயிலாக அது நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.

தூதரகத்துடன் ஒருங்கிணைந்து அமெரிக்காவில் உள்ள சர்வதேச அரச சாரா நிறுவனங்களால் வழங்கப்பட்ட உள்ளக உதவியை ஒப்புக்கொண்ட தூதுவர் மகிந்த சமரசிங்க, வருகை தந்திருந்த மற்றும் இணைய வாயிலான அனைத்து பார்வையாளர்களுக்கும் தனது பருவகால வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன், 2022 ஆம் ஆண்டில் இலங்கைத் தூதரகம் அடைந்த சாதனைகளை நினைவு கூர்ந்தார். பல மத, பல மொழி மற்றும் பல்லின சமூகத்தைக் கொண்ட இலங்கையின் நல்லெண்ணம், அமைதி மற்றும் நல்லிணக்கத்தை விட வேறு எதுவும் இந்த பன்முகக் கலாச்சாரப் பன்முகத்தன்மையை எடுத்துக்காட்டுவதில்லை எனக் குறிப்பிட்டார்.

வொஷிங்டன் டி.சி.யில் உள்ள அப்போஸ்தலிக்க நன்சியேச்சரைப் பிரதிநிதித்துவப்படுத்திய மான்சிக்னர் ஜோன் போல் பெட்ரேரா, பார்வையாளர்களுக்கு ஆசீர்வாதங்களை வழங்கியதைத் தொடர்ந்து உலக மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருப்பது கிறிஸ்மஸ் செய்தியின் உலகளாவிய தன்மையாகும் என வலியுறுத்தினார்.

இலங்கையின் இரண்டு உத்தியோகபூர்வ மொழிகளான சிங்களம் மற்றும் தமிழ் மற்றும் இணைப்பு மொழியான ஆங்கிலம் ஆகியவற்றில் தூதரக ஊழியர்கள் மற்றும் இலங்கை சமூகத்தைச் சேர்ந்த ஒருவரால் பைபிள் வாசிக்கப்பட்டது. தூதரக ஊழியர்கள் மற்றும் அவர்களது பிள்ளைகள் கிறிஸ்மஸ் பாடல்களை இசைத்தனர். கிறிஸ்மஸ் தாத்தாவும் இந்தக் கொண்டாட்டத்திற்கு வருகை தந்ததுடன், தூதுவர் சமரசிங்க பிள்ளைகளுக்கு பரிசுகளை வழங்கினார்.

தூதரக ஊழியர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். அமெரிக்காவில் உள்ள இலங்கை சமூகமும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டது.

இலங்கைத் தூதரகம்,

வொஷிங்டன் டிசி.

2023 ஜனவரி 02

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close