சவூதி அரேபியாவின் பசுமை சவூதி மற்றும் பசுமை மத்திய கிழக்கு முன்முயற்சிகள் தொடர்பான அறிக்கை

சவூதி அரேபியாவின் பசுமை சவூதி மற்றும் பசுமை மத்திய கிழக்கு முன்முயற்சிகள் தொடர்பான அறிக்கை

சவூதி அரேபியா மற்றும் அதனுடனான பரந்த பிராந்தியம் எதிர்கொள்ளும் சுற்றுச்சூழல் சார்ந்த சவால்களை எதிர்கொள்வதற்காக பிராந்திய ஒத்துழைப்பைக் கோரும் வகையிலான சவூதி அரேபியாவின் பசுமை சவூதி மற்றும் பசுமை மத்திய கிழக்கு முன்முயற்சிகளுக்கு இலங்கை வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றது.

பிராந்தியத்தில் கார்பன் உமிழ்வை 60 சதவிகிதமாகக் குறைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இலட்சியத் திட்டங்களை இலங்கை பின்பற்றும் அதே வேளை, இந்த முயற்சிகள் கடல் மற்றும் கடலோர சூழல்களைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளமையினால், இந்த முயற்சி ஒரு தீவு தேசமாக எமது இதயத்திற்கு மிகவும் நெருக்கமானதாக உள்ளது.

உலகளாவிய காலநிலை மாற்றத்தினால் வளர்ச்சியடைந்து வரும் கடுமையான யதார்த்தங்களை இலங்கையும் தற்போது அனுபவித்து வருகின்றது. எனவே அனைத்து மனிதகுலத்தையும் பாதிக்கும் காலநிலை மாற்றத்தின் முயற்சியைக் கையாள்வதில் முன்னிலை வகிக்கும் ஒரு நாடாக சவூதி அரேபிய இராச்சியம் உருவாகி வருவதானது மனதுக்கு இதமானதாக அமைகின்றது.

சவூதி அரேபியாவிற்கு இலங்கை தனது ஆதரவை வெளிப்படுத்துவதுடன், காலநிலை மாற்றத்தை சமாளிப்பதற்காக எமது பொதுவான அணுகுமுறைகளில் சவூதி இராச்சியத்துடன் இணைந்து பணியாற்றுவதற்கும் எதிர்பார்க்கின்றோம்.

வெளிநாட்டு அமைச்சு
கொழும்பு

2021 மே 07

Please follow and like us:

Close