ஸ்டாசென் தேநீர் வியன்னாவில் அறிமுகப்படுத்தப்பட்டது

ஸ்டாசென் தேநீர் வியன்னாவில் அறிமுகப்படுத்தப்பட்டது

வியன்னாவில் உள்ள இலங்கைத் தூதரகம் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, வியன்னாவில்  உள்ள புகழ்பெற்ற தேயிலை இல்லமான ஹாஸ் அண்ட் ஹாஸில், ஸ்டாசென் என்பவரால் சிலோன் டீயை அறிமுகப்படுத்தியது.

ஒஸ்ட்ரிய அரசாங்கத்தின் அதிகாரிகள், வியன்னாவை தளமாகக் கொண்ட தூதுவர்கள் மற்றும்  நிரந்தரப் பிரதிநிதிகள், வியன்னாவில் உள்ள தேயிலை சங்கத்தின் உறுப்பினர்கள், அச்சு மற்றும் மின்னணு ஊடகங்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் வியன்னாவில் உள்ள ஸ்டீபன்ஸ்பிளட்ஸில் உள்ள ஹாஸ் அண்ட் ஹாஸ் கொலனியல் டீ ஹவுஸில் 2023 பிப்ரவரி 14ஆந் திகதி இடம்பெற்ற வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டனர்.

குடும்பத்திற்குச் சொந்தமான ஹாஸ் அண்ட் ஹாஸ் கொலனியல் டீ ஹவுஸ் உலகம்  முழுவதிலுமிருந்து ஏராளமான வாசனைத் தேயிலைகளை வழங்குகின்றது. கால் நூற்றாண்டுக்கு முன்னர் இலங்கைக்கு விஜயம் செய்த ஈவா ஹாஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் ஸ்டாசென் குழுமத்தின் அழைப்பின் பேரில் கிர்கோஸ்வால்ட் தோட்டத்தில் மறக்கமுடியாத நேரத்தை கழித்தனர். இந்த விஜயம் ஒஸ்ட்ரியாவில் புகழ்பெற்ற ஸ்டாசென் தேயிலையை விளம்பரப்படுத்த வழி வகுத்தது.

இந்த விழாவில் இலங்கையின் உலகப் புகழ்பெற்ற சன்னா-உபுலி  கலைநிகழ்ச்சிகள் அறக்கட்டளையின்  தாளமும் நடனமும் இடம்பெற்ற அதே நேரத்தில், பாரம்பரிய உணவு பரிமாறப்பட்டதுடன், இது உண்மையிலேயே இலங்கையின் சூழ்நிலையை உருவாக்கியது.

இலங்கைத் தூதரகம் மற்றும் நிரந்தரப் பணிமனை,

வியன்னா

2023 பிப்ரவரி 27

 

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close