ஜேர்மனிக்கான இலங்கையின் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வருணி முத்துக்குமாரன 2023 பெப்ரவரி 02ஆந் திகதி பேர்லினில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.
2000ஆம் ஆண்டு இலங்கை வெளிநாட்டு சேவை உறுப்பினரான நியமனம் செய்யப்பட்ட தூதுவர் முத்துக்குமாரன, கொழும்பில் உள்ள வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு மற்றும் வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களில் 23 ஆண்டுகளுக்கும் மேலாக இருதரப்பு மற்றும் பலதரப்பு அனுபவத்தைக் கொண்டுள்ளார். ஐரோப்பா, மத்திய ஆசியா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பொதுநலவாயப் பிரிவு ஆகியவற்றின் பணிப்பாளர் நாயகமாகவும் அவர் அமைச்சில் பணியாற்றியுள்ளார்.
நியமனம் செய்யப்பட்ட தூதுவர் முத்துக்குமாரனவின் வெளிநாட்டு பதவிகளில் காத்மாண்டுவில் உள்ள சார்க் செயலகம் மற்றும் நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தரத் தூதரகம் ஆகியவை அடங்கும்.
முத்துக்குமாரன, கொழும்பு பல்கலைக்கழகத்தில் விஞ்ஞான இளமாணிப் பட்டமும், வொஷிங்டன் டி.சி., ஜோர்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு சேவையில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார்.
இலங்கைத் தூதரகம்,
பேர்லின்
2023 பிப்ரவரி 06