நியமனம் செய்யப்பட்டுள்ள தூதுவர் கபில ஜயவீர லெபனான் வெளிவிவகார மற்றும் புலம்பெயர்ந்தோர் அமைச்சருடன் சந்திப்பு

 நியமனம் செய்யப்பட்டுள்ள தூதுவர் கபில ஜயவீர லெபனான் வெளிவிவகார மற்றும் புலம்பெயர்ந்தோர் அமைச்சருடன் சந்திப்பு

லெபனானுக்கான இலங்கைக்கான தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள கபில ஜயவீர 2023 பெப்ரவரி 01ஆந் திகதி லெபனான் வெளிவிவகார அமைச்சில் வைத்து வெளிவிவகார அமைச்சர் அப்துல்லா பௌ ஹபீப்பை முதல் முறையாக மரியாதை நிமித்தம் சந்தித்தார்.

நியமனம் செய்யப்பட்டுள்ள தூதுவர் ஜயவீர, ஜனாதிபதி விக்கிரமசிங்க மற்றும் இலங்கை அரசாங்கத்தின் வாழ்த்துக்களை லெபனான் அரசாங்கத்திற்கும் அதன் மக்களுக்கும் தெரிவித்ததுடன், இலங்கையின் பொருளாதாரத்தின் தற்போதைய மீள்தன்மை, சர்வதேச அரங்கில் வலுவான இருதரப்பு உறவுகள் மற்றும் பரஸ்பர பங்காளித்துவத்தைப் பேணுவதன் முக்கியத்துவம் குறித்து விளக்கினார். பல தசாப்தங்களாக லெபனானில் இலங்கையர்களின் வேலைவாய்ப்பை எளிதாக்கியமைக்காக லெபனான் அரசாங்கத்திற்கு அவர் நன்றிகளைத் தெரிவித்தார்.

நியமனம் செய்யப்பட்டுள்ள தூதுவரை அன்புடன் வரவேற்ற வெளிவிவகார அமைச்சர், இலங்கை அரசாங்கத்திற்கும் அதன் மக்களுக்கும் தனது முழுமையான ஆதரவையும் உறுதியளித்தார். லெபனானில் இலங்கை சமூகத்தின் பங்களிப்பைப் பாராட்டிய அவர், இலங்கையின் 75வது சுதந்திர தினத்திற்கான வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து, நியமனம் செய்யப்பட்டுள்ள தூதுவர் ஜயவீர, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் நாயகம் தூதுவர் ஹனி செமய்டெல்லியைச் சந்தித்து, இருதரப்பு நலன்கள் குறித்து கலந்துரையாடினார். செயலாளர் நாயகம் இலங்கைக்கும் லெபனானுக்கும் இடையில் நிலவும் நட்புறவை பாராட்டியதுடன் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான தனது அர்ப்பணிப்பையும் உறுதியளித்தார்.

இலங்கைத் தூதரகம்,

பெய்ரூட்

2023 பிப்ரவரி 06

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close