எத்தியோப்பியாவிற்கான இலங்கைத் தூதுவர் கடமைகளைப் பொறுப்பேற்பு

எத்தியோப்பியாவிற்கான இலங்கைத் தூதுவர் கடமைகளைப் பொறுப்பேற்பு

எத்தியோப்பியக் கூட்டாட்சி ஜனநாயகக் குடியரசிற்கான இலங்கைத் தூதுவராக  நியமிக்கப்பட்டுள்ள கே.கே. தெஷாந்த குமாரசிறி 2023 ஜனவரி 18 ஆந் திகதி அடிஸ் அபாபாவில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

கடமைகளைப் பொறுப்பேற்றவுடன் தூதுவராலய ஊழியர்களிடம் உரையாற்றிய தூதுவர்,  ஆபிரிக்கக் கண்டத்தின் நாடுகளுடனான இலங்கையின் உறவுகளை விரிவுபடுத்துவதில் புதுப்பிக்கப்பட்ட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இது சம்பந்தமாக, அரசியல் மற்றும் பொருளாதாரக் கண்ணோட்டத்தில் எத்தியோப்பியா ஒரு முக்கிய பங்காளியாக இருப்பதுடன், ஆபிரிக்க ஒன்றியத்தின் தலைமையகமாக அதன் முக்கிய பங்கைக் கொண்டு ஏனைய ஆபிரிக்க நாடுகளைச் சென்றடைகின்றது.

தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள கே.கே. தெஷாந்த குமாரசிறி, பிரேசில், தென் கொரியா, பிரான்ஸ்  ஆகிய நாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகம் மற்றும் பாரிஸில் உள்ள யுனெஸ்கோவிற்கான இலங்கையின் நிரந்தரப் பனிமனை ஆகியவற்றில் பணியாற்றியுள்ளதுடன், 20 வருடங்களாக இலங்கை வெளிநாட்டு சேவையில் பணியாற்றியுள்ளார்.

அவர் களனி பல்கலைக்கழகத்தில் தனது பட்டப்படிப்பை பூர்த்தி செய்துள்ளதுடன், கொழும்பு  பல்கலைக்கழகத்தில் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகமயமாக்கலில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார்.

இலங்கைத் தூதரகம்,

அடிஸ் அபாபா

2023 ஜனவரி 23

Please follow and like us:

Close