நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கிக்கு இலங்கையால் தேயிலை நன்கொடை

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கிக்கு இலங்கையால் தேயிலை நன்கொடை

இலங்கை தேயிலை ஏற்றுமதியாளர்களின் ஆதரவுடன் இலங்கை அரசாங்கம் 2023 பெப்ரவரி 10ஆந் திகதி கொழும்பில் உள்ள துருக்கித் தூதுவரிடம் ஒரு தொகை 'சிலோன் டீ' ஐ நன்கொடையாக வழங்கியது.

கொழும்பில் உள்ள துருக்கித் தூதரகத்தில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் அவசரகால பதிலளிப்புப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் ஓ.எல். அமீர் அஜ்வத் அவர்களால் துருக்கித் தூதுவர் டிமெட் சேகர்சியோகுலுவிடம் இந்த நன்கொடை கையளிக்கப்பட்டது.

இந்த நன்கொடையை பிரதமர் அலுவலகம், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு மற்றும் இலங்கை தேயிலை சபை ஆகியன ஒருங்கிணைத்தன.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் ஐரோப்பா பிரிவிற்கான பணிப்பாளர் நாயகம் பிரியங்கிகா தர்மசேன, இலங்கை தேயிலை சபையின் தலைவர் நிராஜ் டி மெல் மற்றும் இலங்கை தேயிலை சபையின் ஊக்குவிப்புப் பணிப்பாளர் பவித்ரி பீரிஸ் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,
கொழும்பு

2023 பிப்ரவரி 14

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close