வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வொன்றில், மியன்மாரில் மோச்சா சூறாவளியால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு இலங்கை அரசாங்கம் 1 மெட்ரிக் தொன் சிலோன் தேயிலையை கையளித்தது.
இந்த சிலோன் தேயிலை நன்கொடையை கொழும்பில் உள்ள மியன்மார் தூதுவர் ஹான் து வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரியிடமிருந்து 2023 ஜூலை 27ஆந் திகதி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வைத்து பெற்றுக்கொண்டார்.
ஒற்றுமையை வெளிப்படுத்தும் இலங்கை அரசாங்கத்தின் இந்த அடையாளத்திற்காக மியன்மார் அரசாங்கத்தின் உண்மையான பாராட்டுக்களைத் தெரிவித்த தூதுவர் ஹான் து, இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு நட்புறவுகளை மீண்டும் வலியுறுத்தினார்.
இந்நிகழ்வில் மேலதிக செயலாளர் யசோஜா குணசேகர, பணிப்பாளர் நாயகம் வருண வில்பத்த, பணிப்பாளர் நாயகம் ஓ.எல். அமீர் அஜ்வத் மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,
கொழும்பு
2023 ஜூலை 27