கராச்சியில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் பாகிஸ்தானுக்கு 25,000 கருவிழிகளை நன்கொடையாக வழங்கியதைக் குறிக்கும் நிகழ்வையும் இரத்ததான முகாமிற்குமான  ஏற்பாடு

கராச்சியில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் பாகிஸ்தானுக்கு 25,000 கருவிழிகளை நன்கொடையாக வழங்கியதைக் குறிக்கும் நிகழ்வையும் இரத்ததான முகாமிற்குமான  ஏற்பாடு

கராச்சியிலுள்ள இலங்கை துணைத் தூதரகம், 2023 செப்டம்பர் 09 அன்று, கராச்சியில் உள்ள அவரி டவர்ஸில் இலங்கையில் இருந்து பாகிஸ்தானுக்கு 25,000 கருவிழிகள் நன்கொடையாக வழங்கும் நிகழ்வு மற்றும் இரத்த தானம் வழங்கும் நிகழ்வை ஏற்பாடு செய்தது. பாகிஸ்தானின் கண் வங்கிச் சங்கம் மற்றும் இலங்கையின் கண் தானச் சங்கம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இலங்கை கண்தான அறக்கட்டளை சங்கத்தின் செயலாளர் எம்.ஜி.நந்தலால் பிரேமரத்ன தலைமையிலான குழுவினர், இந்த நிகழ்வில் இத்தானங்களில் தங்களது பங்களிப்பைக் குறிக்கும் வண்ணம், பாகிஸ்தான் கண் வங்கியின் தலைவர் காசி சஜித் அலிக்கு,  10 வெண்படலங்களை வழங்கினர்.

பாகிஸ்தானின் சிந்த் மாகாணத்தின் சுற்றுலா மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் சையத் ஜுனைத் அலி, இந்நிகழ்ச்சியில் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.

அதே நேரத்தில், இலங்கைத் துணைத் தூதரகம், பாகிஸ்தானின் தலசீமியா சங்கத்துடன் இணைந்து  அதே இடத்தில் இரத்த தான முகாமை ஏற்பாடு செய்தது. கராச்சியில் வசிக்கும் இலங்கையர்களும் பாகிஸ்தானிய பிரஜைகளும் பாகிஸ்தானின் தலசீமியா சங்கத்தின் பராமரிப்பில் உள்ள குழந்தைகளுக்கு ஆதரவாக இரத்த தானத்தில் பங்கு கொண்டனர்.

இந்த நிகழ்வுகள் இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான பிணைப்பை பிரதிபலித்ததுடன், பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 75 வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகும். இது இலங்கை- பாகிஸ்தானுக்கிடையிலான உறவுகளை வலுப்படுத்துவதை இலக்காகக் கொண்ட, மனிதாபிமான மற்றும் இராஜதந்திர முயற்சியாக அமைந்ததுடன், பாகிஸ்தானில் நடைபெற்ற சுகாதார நலன்சார் நிகழ்வுக்கு இலங்கை சாதகமான ஒத்துழைப்பை மற்றும் சமூக நலன்சார் முன்னெடுப்பை மேற்கொள்வதற்கான தனது பங்களிப்பை வழங்க சிறந்தவொரு வாய்ப்பாகவும் அமைந்தது.

பாகிஸ்தானில் உள்ள அனைத்து முக்கிய ஊடகங்களும் இந்த நிகழ்வுக்கு விரிவான விளம்பர அனுசரணை வழங்கியிருந்தன.

இலங்கை துணைத் தூதரகம்

கராச்சி

27 செப்டம்பர் 2023

 

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close