21/4 இற்கு பின்னரான காலப்பகுதி பயங்கரவாதத்திற்கு எதிராக போராடும் போது மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் இலங்கைக்கு ஒரு 'லிட்மஸ் சோதனை' என வெளிவிவகார செயலாளர் ஆர்யசிங்க குறிப்பிட்டார்

21/4 இற்கு பின்னரான காலப்பகுதி பயங்கரவாதத்திற்கு எதிராக போராடும் போது மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் இலங்கைக்கு ஒரு ‘லிட்மஸ் சோதனை’ என வெளிவிவகார செயலாளர் ஆர்யசிங்க குறிப்பிட்டார்

 

 

Final Pic SFA

21/4 இற்கு பின்னரான காலப்பகுதியானது, பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுகையில் மனித உரிமையின் தரங்களை கடைப்பிடிப்பது இலங்கைக்கு ஒரு 'லிட்மஸ் சோதனை' ஆகும் என்பதுடன், அது அண்மைய ஆண்டுகளில் பலப்படுத்தப்பட்ட ஜனநாயக நிறுவனங்களின் வலிமை மற்றும் குறைபாடுகளை தீர்மானிப்பதாக வெளிவிவகார செயலாளர் ரவிநாத ஆர்யசிங்க தெரிவித்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை (30 ஆகஸ்ட் 2019) பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற 9 வது கொழும்பு பாதுகாப்பு கருத்தரங்கு - 2019 இன் இறுதி நிகழ்வில் '21/4 க்குப் பின்னர் இலங்கை எதிர்கொள்ளும் சவால்களைக் கையாள்வதில் கற்றுக்கொண்ட பாடங்கள்' என்ற தலைப்பில் உரையாற்றுகையில் வெளிவிவகார செயலாளர் இதனைத் தெரிவித்தார். இந்த இரண்டு நாள் கருத்தரங்கில் 40 நாடுகளைச் சேர்ந்த பிரபல தொழில்வாண்மையாளர்கள் மற்றும் அறிஞர்கள், இலங்கையிலுள்ள ஆயுதப்படைகளின் பிரதிநிதிகள், இராஜதந்திரிகள் மற்றும் பாதுகாப்பு ஆய்வாளர்கள் உட்பட கிட்டத்தட்ட 800 பேர் கலந்து கொண்டனர். அறிவார்ந்த பரிமாற்றத்திற்கான சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டதும்,  தேசிய, பிராந்திய மற்றும் சர்வதேச அளவில் சமகால முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள், குறிப்பாக மூலோபாய பிரச்சினைகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பாக விவாதிக்கப்படுவதற்கான முக்கியமான மன்றமாக மாறியுள்ள இந்த வருடாந்த நிகழ்வை ஏற்பாடு செய்ததற்காக, இலங்கை இராணுவத்தை வெளிவிவகார செயலாளர் பாராட்டினார்.

ஈஸ்டர் ஞாயிறு தின பயங்கரவாத தாக்குதல்களின் பின்னணியில், 'தற்கால பாதுகாப்பு நிலப்பரப்பில் இராணுவத்தின் சிறப்பாண்மையை உருவாக்குதல்' என்ற தலைப்பில் இடம்பெற்ற இந்த வருடத்திற்கான கொழும்பு பாதுகாப்பு கருத்தரங்கில், பயங்கரவாதத்தால் சவாலுக்குட்படுத்தப்பட்ட நாடுகள், 'பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடும்' அதே வேளை 'மனித உரிமைகளைப் பாதுகாத்தல் வேண்டும்' என்பதுடன், ஒன்றுக்காக மற்றொன்றை தியாகம் செய்யக்கூடாது' என திரு. ஆர்யசிங்க தெரிவித்தார். இதேபோன்ற சூழ்நிலைகளுக்கு இரட்டைத் தரங்களைப் பயன்படுத்தி, தீவிரமான அல்லது மற்றொன்றை நோக்கிச் செல்லும் அரசுகள் பெரும்பாலும் இந்த பிரச்சினைகளை அரசியல்மயமாக்குவதனால், இந்த மிக நுணுக்கமான சமநிலை பெரும்பாலும் காணக்கிடைக்காதவையாக உள்ளதாக அவர் குறிப்பிட்டார். கடந்த 4 மாதங்களில், முன்னர் ஒருபோதுமில்லாத அளவுக்கு 'முழுமையான அரசாங்க அணுகுமுறை' ஒன்றை பின்பற்றியதாகவும், அதில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு மிகவும் ஒன்றித்து செயற்பட்டதாகவும் மேலும் தெரிவித்த அவர், தனது உரையில் இலங்கையை இயல்புநிலைக்கு கொண்டுவருவதற்கும், பொருளாதார மீட்சியை ஏற்படுத்துவதற்குமாக, 21/4 வரை நாட்டில் காணப்பட்ட முன்னேற்றங்களின் தொடரில் கவனம் செலுத்தினார்.

 ஆகஸ்ட் மாத நிலவரப்படி, அவசரகால நிலையை நீக்குவதனை சாத்தியமாக்கிய விதத்திலான 21/4 க்குப் பின்னர் வலுவான பாதுகாப்பினை ஏற்படுத்தியதற்காக இலங்கை பாதுகாப்புப் படையினரின் திறனை வெளிவிவகார செயலாளர் வலியுறுத்தினார். ஈஸ்டர் ஞாயிறு தின தாக்குதல்களில் முக்கிய பங்கு வகித்த தேசிய தௌஹீத் ஜாம்அத், ஜமாதே மில்லத்து இப்ராஹிம் மற்றும் வில்ஸ்யாத் அஸ்ஸெய்லானி (வாஸ்) ஆகிய மூன்று குழுக்களையும் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் மற்றும் பயங்கரவாத நிதியுதவி தொடர்பான யு.என்.எஸ்.சி.ஆர். 1373 இன் கீழ் பட்டியலிட சட்டமன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அத்துடன், கடுமையான எல்லைப் பாதுகாப்பு, வன்முறை தீவிரவாதத்தை எதிர்கொள்ளுதல், ஐ.எஸ்.ஐ.எஸ். உடன் இணைவதற்காக பயணிக்கும் இலங்கைப் பிரஜைகள், உலகில் உள்ள மோதல் வலயங்களிலிருந்து திரும்பி வரும் வெளிநாட்டு பயங்கரவாதப் போராளிகள் அல்லது இலங்கையை ஒரு போக்குவரத்து இடமாக பயன்படுத்துதல் போன்றவற்றில், இலங்கையின் உள்நாட்டுச் சட்டங்களில் இயற்றப்படாத, ஐ.நா.வின் அனைத்து உறுப்பு நாடுகளும் இணங்க வேண்டிய ஐ.நா. பாதுகாப்புக் தீர்மானங்களை இலங்கை தற்போது கடைப்பிடித்து வருகின்றது. முஸ்லிம் சமூகத்தின் உணர்திறனைக் கருத்திற் கொண்டு, பாதுகாப்பு நடவடிக்கைகளை செயல்படுத்துகையில், அரசாங்கத்தின் சுய பிரதிபலிப்பு, சுயவிமர்சனம் மற்றும் ஆக்கபூர்வமான ஈடுபாட்டை வெளிப்படுத்தும் அடிப்படையில், முழுமையான முகத்தை மறைக்கும் ஆடைகளை அணிவதற்கான தடையின் போது காதுகளை வெளிக்காட்டுவதற்கு வற்புறுத்தாமலிருப்பதற்கான சீர்படுத்துகை மேற்கொள்ளப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார். தடுப்புக்காவலில் உள்ள நபர்களை முழுமையாக ஐ.சி.ஆர்.சி. அணுகிக் கொள்வது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், தடுப்புக்காவல்கள் குறித்த தவறான நடத்தைகள் தொடர்பான எந்தவொரு முறைப்பாடும் உடனடியாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் அது குறித்து ஏற்கனவே விசாரணைகளைத் தொடங்கி வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளனர்.

21/4 க்கு பின்னரான 'செயற்பாட்டில் உள்ள' சில அம்சங்கள் குறித்து விவரித்த திரு. ஆர்யசிங்க, அதிகமான தகவல்களை வழங்குவதாகவும், அவசரமானதாகவுமான இரண்டு வகையிலும் அமையும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தின் வரைவைப் பெற்றுக்கொள்வது சரியானதாக இருக்கும் என தெரிவித்தார். மூலோபாய அடிப்படையில், குறுகிய காலம் சமூக ஊடகங்களை தடை செய்து நிறுத்தி வைப்பது, தேவையற்ற விதத்திலான தொடர்பாடல்களை தவிர்த்து, இந்த சில விடயங்கள் முக்கியமாக கவனம் செலுத்தப்பட வழிவகுத்தது. வன்முறையைத் தூண்டுவதற்காக பயங்கரவாதிகள் இணையத்தை துஷ்பிரயோகம் செய்வதை இலங்கையால் மட்டும் தடுக்க முடியாது என்பதைப் புரிந்துகொண்ட இலங்கை, பிரான்ஸ் மற்றும் நியூசிலாந்து தலைமையிலான 'செயற்பாட்டுக்கான க்றைஸ்ட்சேர்ச் அழைப்பு' போன்ற உலகளாவிய முயற்சிகளில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளது. இலங்கை பாதுகாப்பு அமைப்புகளுக்கும் வெளிநாடுகளில் உள்ள பாதுகாப்பு அமைப்புக்களுக்குமிடையில் உளவுத்துறை, குற்றவியல் விசாரணை மற்றும் குற்றவியல் நீதி ஒத்துழைப்பு ஆகியவற்றில் ஒத்துழைப்பை பூர்த்தி செய்யும் நோக்கில், வெளிவிவகார அமைச்சு பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் வன்முறை தீவிரவாதத்தை எதிர்ப்பதற்கான வாய்ப்புகளை ஆராய்ந்து, தொடர்புடைய பயிற்சி மற்றும் சர்வதேச நிபுணர்களின் விஜயங்கள் வாயிலாக அரசாங்கத்திற்கு உதவியது. வன்முறையான தீவிரவாதத்தைத் தடுப்பதில் அரசாங்கத்தின் தேசிய திட்டங்கள் மற்றும் குறிக்கோள்களை ஆதரிப்பதற்காக இதேபோன்ற பல பாதிக்கப்பட்ட நாடுகளில் பணியாற்றிய அனுபவமுள்ள நிபுணர் ஒருவர் இலங்கையில் இருந்தார்.

பணிகளை வளப்படுத்தவும், ஆதரிக்கவும், விரிவுபடுத்தவும் இலங்கை அதிகாரிகளாலும், அனைத்து தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்ட உதவிகளை சுட்டிக்காட்டிய செயலாளர் ஆர்யசிங்க,  இந்த பிரச்சினைகள் தொடர்பாக ஏனைய நாடுகள் பின்பற்றும் நடைமுறையை, இலங்கையின் அடிப்படையில் முன்னெடுக்க வேண்டியதுடன், போலியான முயற்சிகளை முன்னெடுப்பதை தவிர்த்து, அவை பெறுபேறுகளைத் தருவதை உறுதிப்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.

21/4 அன்று பயங்கரவாத தாக்குதல்களை அடுத்து பொருளாதாரத்தில் ஏற்பட்ட பின்னடைவுகளை சமாளிப்பது கணிசமான சவாலாக இருந்தது, எனினும், விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத்திற்கு எதிரான 30 ஆண்டுகால போராட்டம் முழுவதும் செயற்பட்டதைப் போலவே, நாடு அதன் சிறப்பியல்பு மற்றும் நெகிழ்ச்சியை இதன் போதும் காட்டியது என வெளிவிவகார செயலாளர் ஆர்யசிங்க குறிப்பிட்டார். ஈஸ்டர் தின குண்டுவெடிப்புகள் இடம்பெற்ற ஆரம்பத்தில் அதிர்ச்சியான நிலைமை காணப்பட்ட போதிலும், முக்கியமாக உலகளாவிய விநியோகச் சங்கிலிகளில் இலங்கை கொண்டிருந்த நம்பகமான வணிகப் பங்காண்மை, அதன் பொருளாதாரத்தை அதி வேகமாக மீட்டெடுத்ததுடன், நான்கு மாதங்களின் பின்னர், இலங்கையின் பொருளாதாரம் ஒட்டுமொத்தமாக 2019 இல் சுமார் 3.2% ஆக உயரட்வடைந்துள்ளது. அனைத்து குறிப்பிடத்தக்க சுற்றுலா மைய நாடுகளும், நாட்டின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பை பராமரிப்பதில் இலங்கை அரசாங்கத்தின் திறனை உறுதிப்படுத்தி, தமது பயண ஆலோசனைகளை தளர்த்தியுள்ளன.

இலங்கை தொடர்பான எண்ணக்கருவை மீள கட்டமைப்பதில் முக்கிய அரசாங்க பங்குதாரர்கள் மற்றும் தனியார் துறையினர் மேற்கொண்ட முயற்சிகள் சாதகமான முடிவுகளைத் தந்துள்ளதுடன், இலங்கை சுற்றுலா மேம்பாட்டு அதிகாரசபையின் கருத்தின் பிரகாரம், 2019 ஆம் ஆண்டிற்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை குறித்த திருத்தப்பட்ட திட்டம், 10% ஆனதொரு சரிவை மட்டுமே கொண்டுள்ளதுடன், முந்தைய 30% வீழ்ச்சியுடன் ஒப்பிடுகையில், இது மிகக் குறைவானதாகும். 'இந்த புள்ளிவிவரங்கள் அனைத்தும் ஒன்றை சுட்டிக்காட்டுகின்றன - இலங்கை பாதிப்புற்றது, எனினும் நாங்கள் நெகிழ்ச்சியுடன் மீண்டு வருகின்றோம்' என்று அவர் தெரிவித்தார்.

இது சமகால இலங்கையின் ஒரு வழக்கு ஆய்வாக இருக்கும் என வலியுறுத்துகையில், சமகாலத்தில் பயங்கரவாதத்தால் ஏற்படும் அச்சுறுத்தல்களால் பாதிக்கப்படக்கூடிய அனைத்து நாடுகளுக்கும் படிப்பினைகள் உள்ளன என வெளிவிவகார செயலாளர் ஆர்யசிங்க குறிப்பிட்டார். இந்த சவாலை உண்மையிலேயே சமாளிக்க வேண்டுமானால், 'ஒரு முழுமையான அரசாங்கத்திலிருந்து' 'முழுமையான சமூகத்தின்' அணுகுமுறைக்கு நகர வேண்டும் என அவர் அழைப்பு விடுத்தார்.

 

 

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு
கொழும்பு
 
31 ஆகஸ்ட் 2019

 

Full text  of the speech can be accessed via :https://www.mfa.gov.lk/valedictory-address-by-sfa/

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close