பாதுகாப்பு சபையின் உத்தியோகப்பற்றற்ற கூட்டம் 'உதாரணங்கள் மூலம் வழிநடத்துவதற்கான அழைப்பு: ஐ.நா. தலைமையிலான சமாதான செயன்முறைகளில் பெண்களின் முழுமையான, சமமான மற்றும் அர்த்தமுள்ள பங்கேற்பை உறுதி செய்தல்'  

பாதுகாப்பு சபையின் உத்தியோகப்பற்றற்ற கூட்டம் ‘உதாரணங்கள் மூலம் வழிநடத்துவதற்கான அழைப்பு: ஐ.நா. தலைமையிலான சமாதான செயன்முறைகளில் பெண்களின் முழுமையான, சமமான மற்றும் அர்த்தமுள்ள பங்கேற்பை உறுதி செய்தல்’  

ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி மாண்புமிகு மொஹான் பீரிஸ் அவர்களின் அறிக்கை

08 மார்ச் 2021 (மெய்நிகர்)

கௌரவ தலைவி அவர்களே, 'சர்வதேச மகளிர் தினத்தை' நாம் கொண்டாடும் மிக முக்கியமான நாளில், ஐ.நா. தலைமையிலான சமாதான செயன்முறைகளில் பெண்கள் பங்கேற்பது குறித்து கலந்துரையாடுவதற்காக இந்த முயற்சியை மேற்கொண்ட மெக்ஸிகோ மற்றும் அயர்லாந்தின் இணைத் தலைவர்களுக்கு முதலில் நன்றி மற்றும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

பெரும்பாலான மோதல்களில் பாதிக்கப்பட்ட சமூகங்களில் மனித உரிமை மீறல்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளை விகிதாசாரமாக பாதிக்கின்றன என்பதை நாம் அனைவரும் பலமுறை கேள்விப்பட்டிருக்கின்றோம். வன்முறை மற்றும் பாதுகாப்பின்மை ஆகிய சூழ்நிலைகளில், மக்கள் தொகையில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய பிரிவுகளில் ஒன்றாக பெண்கள் விளங்குவதுடன், சமூகத்தில் தற்போதுள்ள பாகுபாடுகளுக்கும் மேலதிகமாக, குடும்பத்தினரிடமிருந்தும் இதுபோன்ற மீறல்களை அவர்கள் அனுபவிக்கின்றனர். இது தொற்றுநோய் சூழ்நிலைகளால் அதிகரித்துள்ளது என்பதை நாங்கள் அறிவோம்.

கடந்த ஆண்டு, பாலின சமத்துவத்தை முன்னேற்றுவதற்கான ஒரு முக்கிய ஆண்டாக இருந்ததுடன், அதில் பெண்களின் உரிமைகளை முன்னேற்றுவதற்கான மிக முற்போக்கான வரைபடமாகக் கருதப்பட்ட பீஜிங் பிரகடனம் மற்றும் செயற்பாட்டுக்கான தளத்தின் 25வது ஆண்டு நிறைவு, பெண்கள் மீதான ஐ.நா. பாதுகாப்பு சபைத் தீர்மானம் 1325 இன் 20வது ஆண்டு நிறைவு, அமைதி மற்றும் பாதுகாப்பு மற்றும் நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கான பாதையில் 5 ஆண்டு மைல்கல் ஆகியவற்றை நினைவுகூர்ந்தோம். பாலின சமத்துவத்தை அடைவதற்கும் பெண்கள் மற்றும் சிறுமிகளை மேம்படுத்துவதற்கும் உலகளாவிய சமூகம் முக்கிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளமையை அங்கீகரிக்கும் அதே வேளையில், பெண்களின் சமூகப் பொருளாதார மற்றும் அரசியல் அபிவிருத்தியைத் தடுக்கும் சவால்களும் தடைகளும் உள்ளன என்பதை நாங்கள் அறிவோம்.

எவ்வாறாயினும், எமது மனித உரிமைகள் ஆணையாளர் பச்சலெட் அம்மையாரின் ஆரம்ப உரையில் குறிப்பிட்ட, 'பீஜிங் நடவடிக்கைக்கான தளமானது புரட்சிகரத்திற்கு குறைவே இல்லாததாகும். நாம் எப்போதும் அதைக் கொண்டாட வேண்டும், ஆனால் பீஜிங் நிகழ்ச்சி நிரல் நிறைவு செய்யப்படவில்லை என்பதை நாம் எமக்கு நினைவூட்டிக் கொள்ள வேண்டும். பின்னடைவுகளுக்கான ஆபத்து உண்மையானது என்பதுடன், அது வளர்ச்சியடைந்து வருகின்றது' என்ற கருத்தை நினைவூட்ட விரும்புகின்றேன். 'எங்களுக்குத் தெரிந்ததை கடினமாக வென்றதற்கு நாங்கள் சவால்களை எதிர்க்க வேண்டும். பெண்களின் உரிமைகள் மனித உரிமைகளாவதுடன், அவை சமரசத்திற்கு உட்பட்டவை அல்ல. மனித கௌரவத்தைப் பிரிக்கவோ, பாராதீனப்படுத்தவோ, சமரசம் செய்யவோ முடியாது - அது ஒரு சிலரின் சலுகையாகவும் இருக்க முடியாது' என அவர் மேலுத் தெரிவித்தார்.

'நான் சத்தமாகக் கத்த முடியும் என்பதற்காக நான் குரல் எழுப்பவில்லை, ஆனால் குரல் இல்லாதவர்களைக் கேட்க முடியும் என்பதற்காகவே குரல் எழுப்புகின்றேன். எம்மில் அரைவாசியினர் தடுக்கப்படும் போது எங்களால் வெற்றிபெற முடியாது' என மலாலா யூசுப்சாயின் கூறிய வார்த்தைகளும் எனக்கு நினைவுக்கு வருகின்றன. பெண்கள், அமைதி மற்றும் பாதுகாப்பு நிகழ்ச்சி நிரல் ஏற்றுக்கொள்ளப்பட்டு 20 வருடங்கள் ஆனாலும் பெண்கள் பின்வாங்கப்படுவதாக நாங்கள் இன்னும் உணர இதுவே காரணமாக இருக்க வேண்டும். இந்த செயன்முறையை துரிதப்படுத்த நாம் என்ன செய்ய முடியும்? சமாதான முன்னெடுப்புக்கள் மற்றும் அரசியல் ஈடுபாடுகளில் பெண்களின் மேம்பட்ட தலைமை மற்றும் பங்களிப்பை எவ்வாறு உறுதிப்படுத்துவது?

ஐ.நா. வில், குறிப்பாக சிரேஷ்ட தலைவர்கள் மட்டத்திலும், ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளர்களிடையேயும் பாலின சமத்துவத்தை மேம்படுத்துவதற்காக முன்னெடுக்கப்பட்ட தலைமைக்கு பொதுச்செயலாளரைப் பாராட்டுகின்றோம். ஐ.நா. களப்பணிகளில், பெண்களின் தலைமைத்துவம் 41% ஆக உள்ளது. அனைத்து மட்டங்களிலும் பாலின சமத்துவத்தை முன்னெடுப்பதற்கான முயற்சிகளில் செயலாளர் நாயகத்திற்கு இலங்கை தொடர்ந்தும் ஆதரவளிக்கும்.

கௌரவ தலைவி அவர்களே, சுயஸ் நெருக்கடியின் போது பயன்படுத்தப்பட்ட முதல் 'பாரம்பரிய' அமைதி காக்கும் பணி - யு.என்.எஃப். 1 ஐ நிறுவுவதற்கு வழிவகுத்த 1956 ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக பணியாற்றியது முதல், 1960 இல் கொங்கோ ஜனநாயகக் குடியரசிலான ஐ.நா. பணிக்காக ஐ.நா. அமைதி காப்பாளர்களாக நிறுத்தப்பட்டமை வரை, இலங்கை ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் நடவடிக்கைகளுடன் நீண்டகாலமாக தொடர்புகளைப் பேணி வருவதை முன்னிட்டு பெருமிதம் கொள்கின்றது. மனிதக் கேடயங்கள், தற்கொலைக் குண்டுதாரிகள் மற்றும் சிறுவர் படையினரைப் பயன்படுத்திய ஒரு பயங்கரவாத அமைப்புடன் மனிதாபிமானப் போராட்டத்தில் ஈடுபட்டதன் பின்னர், உலகின் கடினமான பகுதிகளில், மனிதாபிமான ஈடுபாட்டுத் துறையின் கடினமான மற்றும் சிக்கலான நிலப்பரப்புகளைக் கையாள்வதிலான நிபுணத்துவத்தை இலங்கையின் ஆயுதப்படைகள் மற்றும் பொலிஸார் பகிர்ந்துகொண்டுள்ளனர்.

அப்போதிருந்து, 20,000 இலங்கை அமைதி காக்கும் படையினருடன் மிகவும் கடினமான மற்றும் ஆபத்தான நிலப்பரப்புக்களில் மோதலால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு முக்கியமான சேவைகளை வழங்கும் உலகெங்கிலும் உள்ள ஐ.நா. அமைதி காக்கும் பணிகளில் பணியாற்றிய அவர்கள், தமது வீரம் மற்றும் திறன்களுக்காக பரவலாக அங்கீகரிக்கப்பட்டு, அவர்கள் சேவையாற்றிய ஐ.நா. அமைதி காக்கும் பணிகளால் பாராட்டப்படுகின்றார்கள். பல ஆண்டுகளாக, பெண் அமைதி காக்கும் படையினரை ஊக்குவிப்பதற்காக இலங்கை தொடர்ந்தும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதுடன், தற்போது தென் சூடானில் 12 பெண் அமைதி காக்கும் படையினர் பணியாற்றி வருகின்றனர். ஒட்டுமொத்த அமைதி காக்கும் செயற்றிறனை மேம்படுத்தும் பெண் அமைதி காக்கும் படையினர், சமூகங்களுக்கு அதிகமான அணுகலைக் கொண்டுள்ளதுடன், மனித உரிமைகள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதில் உதவிகளை வழங்கி, அமைதி மற்றும் அரசியல் செயன்முறைகளின் அர்த்தமுள்ள பகுதியாக மாறுவதற்காக பெண்களை ஊக்குவிக்கின்றார்கள் என நாங்கள் நம்புகின்றோம்.

ஐ.நா. நிதி அறக்கட்டளையின் முன்னாள் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான கேத்தி கெல்வின் குறிப்பிட்டது போல, 'ஒவ்வொரு பெண்ணும் படித்தவர்களாகவும், ஆரோக்கியமானவர்களாகவும், திறமையானவர்களாகவும், அதிகாரம் பெற்றவர்களாகவும் இருப்பதை உறுதி செய்வதற்கு நாம் எம்மை அர்ப்பணிக்க வேண்டும். அவர்களின் இன்றைய முதலீடு எமது நாளைக்கான முதலீடாக அமைகின்றது'. இந்த அனைத்து இலட்சியங்களுக்கும் வார்த்தைகளால் மாத்திரம் சேவை வழங்குவதை விட, மனிதகுலத்தின் தொடர்ச்சியான இருப்புக்கு நாம் கடன்பட்டிருக்க வேண்டிய உலகப் பெண்களுக்கான உண்மையான மாற்றத்தை நோக்கி செயற்படுவதற்காக, அதிகமானதை செயற்பாட்டு ரீதியாக மேற்கொள்வோம் என இன்று உறுதிமொழி பூணுவோம்.

பெண்கள் எதிர்கொள்ளும் தடைகள் மற்றும் இதுபோன்ற பின்னடைவுகளிலிருந்து விடுபடத் தேவையானவை குறித்து சர்வதேச சமூகத்தினரிடையே அனுபவத்தைப் பகிர்ந்து கொள்வது பயனுள்ளதாக இருக்கும் எனினும், முன்மொழியப்பட்ட திட்டங்கள் மற்றும் உத்திகள் செயற்படுத்தப்பட வேண்டிய பல்வேறு சூழ்நிலைகள் மற்றும் சந்தர்ப்பங்கள் குறித்து நாம் உணர வேண்டும். சமுதாயத்தில் பெண்களின் வகிபாகமானது, மாறுபட்ட கலாச்சாரங்களில் வேறுபட்டதாவதுடன், இது ஒரு அளவு பொருந்துவதால் அவர்களின் கொள்கைகளைப் பின்பற்றுவதில் அனைத்து கொள்கையையும் பயன்படுத்த முடியாது. உள்நாட்டு நிர்ப்பந்தங்கள் மற்றும் தேவைகளுக்கு இணங்க, இது தொடர்பான கொள்கைகள் வகுக்கப்படுவது கட்டாயமாகும்.

கௌரவ தலைவி அவர்களே, நாடுகளின் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் அபிவிருத்திக்கு பெண்களின் விலைமதிப்பற்ற பங்களிப்பை தொடர்ந்தும் அறிந்துகொள்ளும் அதே வேளை, உள்ளூர் சூழல்களுக்கு உகந்த பெண்களுக்கான நிலையான மற்றும் உறுதியான சமத்துவச் சார் மற்றும் அதிகாரமளித்தல் சார் கொள்கைகளுக்கான எமது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துவோம். உலகளாவிய சமூகமாக நாம் இந்த பாதையிலிருந்து பின்வாங்கக்கூடாது என்பதுடன், ஒரு முறை கேட்காத குரல்கள் சத்தமாகவும் தெளிவாகவும் கேட்கப்படும் என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

நன்றி.

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close