வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தனவுடன் பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் வெளிநாட்டு  அமைச்சில் வைத்து சந்திப்பு

வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தனவுடன் பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் வெளிநாட்டு  அமைச்சில் வைத்து சந்திப்பு

விஜயம் செய்த பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் மக்தூம் ஷா மெஹ்மூத் குரேஷி 2021 பெப்ரவரி 24ஆந் திகதி வெளிநாட்டு அமைச்சில் வைத்து வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தனவை சந்தித்தார்.

பிரதமர் இம்ரான் கானின் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தில் இணைந்திருந்த வெளிவிவகார அமைச்சர் குரேஷி, நிலையான அபிவிருத்தி, பொருளாதார அபிவிருத்தி, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்பு ஆகியவற்றை அடைவதற்கான இலங்கையின் முயற்சிகளுக்குக்கான பாகிஸ்தானின் தொடர்ச்சியான ஒற்றுமையையும் ஆதரவையும் உறுதிப்படுத்தினார். பரஸ்பர நலனுக்காக நெருக்கமான பொருளாதார உறவுகளை நோக்கிய பரிமாற்றம் அவசியம் என்ற கருத்தை இரு அமைச்சர்களும் ஒப்புக் கொண்டனர்.

பாகிஸ்தான் இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின் கீழ் 1 பில்லியன் அமெரிக்க டொலர் வருடாந்த இருவழி வர்த்தக இலக்கை அடைந்து கொள்வதற்காக, தற்போதைய வர்த்தக நடவடிக்கைகள் மூலம் பன்முக இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கு இரு அமைச்சர்களும் ஒப்புக்கொண்டனர். பாகிஸ்தான் இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின் கீழ் தற்போதைய நடவடிக்கைகளின் எல்லைக்கு அப்பால் முதலீடுகள், சேவைகள் மற்றும் நிதி போன்ற புதிய களங்களுக்கு இருதரப்பு வர்த்தக உறவை விரிவுபடுத்துவதற்கு இரு தரப்பினரும் முனைந்து வருகின்றனர்.

ஏற்றுமதியை மேம்படுத்துவதற்காக உற்பத்தித் துறையில் பாகிஸ்தான் முதலீடுகள் அதிகரித்திருப்பதைக் காண்பதற்கான இலங்கையின் விருப்பத்தை வெளிநாட்டு அமைச்சர் குணவர்தன தெரிவித்தார். பிரதமர் இம்ரான் கானுடன் பாகிஸ்தானில் இருந்து விஜயம் செய்த உயர் சக்திவாய்ந்த வணிகக் குழுவொன்றை அவர் வரவேற்றார்.

பரஸ்பர அக்கறை கொண்ட விடயங்களில் பல்தரப்பு அரங்குகளில் நெருக்கமாகப் பணியாற்றுவதற்கு இரு அமைச்சர்களும் ஒப்புக்கொண்டனர். அபிவிருத்தியடைந்து நாடுகளுக்கு கடன் நிவாரணம் வழங்குமாறு சர்வதேச நிதி நிறுவனங்கள் மற்றும் ஏனைய கடன் வழங்குநர்களுக்கு முதலாவதாக அழைப்பு விடுத்தமைக்காக பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு இலங்கையின் பாராட்டுக்களை வெளிநாட்டு அமைச்சர் குணவர்தன தெரிவித்ததுடன், அவர் இதனை 'உலகளாவிய தெற்கிற்கான ஒரு முக்கியமான திறப்பு' எனக் குறிப்பிட்டார்.

பாகிஸ்தானுக்கு ஒரு பரஸ்பர விஜயத்தை மேற்கொள்ளுமாறு வெளிநாட்டு அமைச்சர் குணவர்தனவுக்கு வெளிவிவகார அமைச்சர் குரேஷி அழைப்பு விடுத்தார்.

வெளிநாட்டு அமைச்சு
கொழும்பு

2021 பெப்ரவரி 24

 

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close