வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சானது ராஜ்ய சேவய கமட கெனயன ஜனதா சேவய நிகழ்ச்சித்திட்டத்தில் பங்கேற்கின்றது.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சானது ராஜ்ய சேவய கமட கெனயன ஜனதா சேவய நிகழ்ச்சித்திட்டத்தில் பங்கேற்கின்றது.

Photo 1

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சானது மாத்தலையில் 2019 ஜூன் 01ஆம் திகதி இடம்பெற்ற முதலாவது  “ராஜ்ய சேவய கமட கெனயன ஜனதா சேவய”  தேசிய நிகழ்ச்சித்திட்டத்தில் பங்கேற்றதுடன் ஒரு நடமாடும் கொன்சியூலர் சேவையை மாத்தலை ஸ்ரீ சங்கமித்தா பாலிகா தேசிய பாடசாலை வளாகத்தில் நடாத்தியது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் இடம்பெற்ற இந்த “ராஜ்ய சேவய கமட கெனயன ஜனதா சேவய”  நிகழ்ச்சித்திட்டமானது அமைச்சர் கௌரவ வஜிர அபேவர்தன அவர்களின் வழிகாட்டலின் கீழ் உள்ளக, உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சால் ஒருங்கிணைக்கப்பட்டது. நடமாடும் கொன்சியூலர் சேவைiயானது இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஒத்துழைப்புடன் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சால் நடாத்தப்பட்டது.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சால் மாத்தலை மாவட்ட பொது மக்களுக்கு வழங்கப்பட்ட சேவைகளானது, வெளிநாட்டு அமைப்புகளுக்கு சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்களை உறுதிசெய்தல், வெளிநாடுகளில் தனிமைப்பட்ட இலங்கையர்களை நாடுதிரும்புவதற்கான உதவியளித்தல், வெளிநாட்டிலுள்ள இலங்கை தூதரகங்களில்  வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களின் பிறப்பு, திருமனம் மற்றும் இறப்பு ஆகியவற்றை பதிவுசெய்தல் பற்றிய தகவல்கள்,  புலம்பெயரந்;துள்ள இலங்கையர்களுக்கு உரித்தான சம்பள நிலுவைகள், இழப்பீடுகள்,  மற்றும் காப்புறுதிகள் ஆகியவற்றை பெற்றுக்கொள்வதற்கான உதவிகள், மற்றும் வெளிநாடுகளில் உயிரிழந்தவர்களின் பூதவுடல்களை வரவழைத்துக்கொள்வதற்கான செயன்முறைகள் ஆகியவற்றை உள்ளடக்கியது.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு

கொழும்பு

2019 ஜூன் 14

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close