மாலைதீவை பொதுநலவாயத்தில் மீள அனுமதிப்பதற்கான முன்மொழிவை வெளிவிவகார செயலாளர் ஆரியசிங்க வரவேற்றார்

மாலைதீவை பொதுநலவாயத்தில் மீள அனுமதிப்பதற்கான முன்மொழிவை வெளிவிவகார செயலாளர் ஆரியசிங்க வரவேற்றார்

 

Photo

வெளிவிவகார செயலாளர் ரவீநாத ஆரியசிங்க அவர்களின் தலைமையிலான தூதுக்குழுவினர், ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 74 வது அமர்வின் பக்க நிகழ்வுகளில் ஒன்றாக, 2019 செப்டம்பர் 26 ஆந் திகதி நியூயோர்க்கில் நடைபெற்ற பொதுநலவாய வெளிவிவகார அமைச்சர்கள் கூட்டத்தில் பங்குபற்றினர்.

 

 

மாலைதீவை பொதுநலவாய குடும்பத்தில் மீள அனுமதிப்பதற்கான முன்மொழிவை வெளிவிவகார செயலாளர் ரவீநாத ஆரியசிங்க கடந்த வியாழக்கிழமைவரவேற்றதுடன்,  ருவாண்டாவில் நடைபெறவிருக்கும் பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாடு 2020 இல் மாலைதீவு முழுமையாக பங்கேற்பதனைஅனுமதிப்பதற்காக, காம்பியாவை மீள அனுமதிப்பதற்கான நடைமுறையில் முன்னர் பயன்படுத்தப்பட்ட விரைவான பாதையை பிரயோகிப்பதற்கானஇலங்கையின் முழுமையாக ஆதரவினை மீண்டும் வலியுறுத்தினார்.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 74 வது அமர்வின் பக்க நிகழ்வுகளில் ஒன்றாக, பொதுநலவாயம் மற்றும் ஐக்கிய நாடுகளுக்கான இராஜாங்க அமைச்சர்விம்பிள்டன் பிரபு அஹ்மத் அவர்களின் தலைமையில் 2019 செப்டம்பர் 26 ஆந் திகதி நியூயோர்க்கில் நடைபெற்ற பொதுநலவாய வெளிவிவகார அமைச்சர்கள்கூட்டத்தில், அவர் இந்த அவதானிப்பை மேற்கொண்டார். 'நெருங்கிய அண்டை நாடாகவும், சக தெற்காசிய நாடுகளில் ஒன்றாகவும் விளங்கும் மாலைதீவுடன்வலுவான இருதரப்பு உறவுகளை இலங்கை அனுபவித்து வருவதுடன், கடந்த வருடத்தில் மாலைதீவின் புதிய நிர்வாகத்தினால் மேற்கொள்ளப்பட்ட முதன்மைமுயற்சிகளில் ஒன்றான, பொதுநலவாயத்தில் மீண்டும் இணைவதற்கான தனது நோக்கத்தை தெரியப்படுத்தியமை மகிழ்ச்சிகரமானதொன்றாகும்' என ஆரியசிங்கதெரிவித்தார்.

குறிப்பாக 2019 ஜனவரியில் பொதுநலவாய செயலகத்தினால் மாலைதீவில் மேற்கொள்ளப்பட்ட ஒரு விரிவான மதிப்பீட்டுப் பணியானது, நேர்மறையானதீர்மானத்திற்கு வழிவகுத்ததுடன், அதன் மீள் நுழைவுக்கு எதிரான எந்தவொரு தடைகளும் அவ்வப்போது அனைத்து நாடுகளையும் பாதிக்கும் வெறும்குறைபாடுகளாகவே கருதப்பட வேண்டும் என வெளிவிவகார செயலாளர் சுட்டிக்காட்டினார். குறைவான ஊக்குவித்தல்களுக்கு வழிவகுக்கும் மேலதிக தடைகள்அவர்களின் பாதையில் வைக்கப்படக்கூடாது என அவர் வலியுறுத்தினார்.

2019 செப்டம்பர் 27ஆந் திகதி வெள்ளிக்கிழமை நியூயோர்க்கில் நடைபெற்ற குழு 77 (ஜி 77) வெளிவிவகார அமைச்சர்கள் கூட்டத்திலும் வெளிவிவகார செயலாளர்கலந்து கொண்டார். குறை விருத்தி நாடுகள், நிலத்தால் சூழப்பட்ட வளர்ந்து வரும் நாடுகள் மற்றும் வளர்ந்து வரும் சிறிய தீவு நாடுகள் போன்ற சிறப்புசூழ்நிலைகளில் உள்ள நாடுகளின் பல்வேறு தேவைகளை நிவர்த்தி செய்வதற்கான உலகளாவிய நடவடிக்கைகளுக்கு அழைப்பு விடுப்பதற்காக ஜீ 77 தனித்துவமாகநிலைநிறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடப்பட்டது. இந்த பிரச்சினைகள் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியை மோசமாக பாதிப்படையச் செய்வதுடன்,நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கான அவர்களது திறனை பாதிக்கின்றன. பாதிக்கப்படக்கூடிய மற்றும் ஓரங்கட்டப்பட்ட நாடுகளுக்கு, குறிப்பாகநிதி மற்றும் திறன் மேம்பாட்டிற்கான அதிகமான சர்வதேச உதவி மற்றும் ஆதரவைக் கோருவதற்கானதொரு கூட்டுக் குரலாக இந்த அமைப்பு செயற்படல்வேண்டும்.

மேலும், 'அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு' குறித்த தூணின் இணைப் பிரதம செயற்பாட்டாளராக இலங்கை விளங்கும் வெளிவிவகார அமைச்சர்கள்கூட்டத்தின் ஆசிய ஒத்துழைப்பு கலந்துரையாடலின் போது வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், ஆசிய ஒத்துழைப்பு கலந்துரையாடல் பிராந்தியமானது,சுற்றுலாத்துறையில், நிலையான சமூக, கலாச்சார மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்கினை வகிப்பதாக வெளிவிவகார செயலாளர் ஆரியசிங்ககுறிப்பிட்டார். பிராந்தியத்தில் பொருளாதார போட்டித்தன்மையை மேம்படுத்துவதில் ஆசிய ஒத்துழைப்புக் கலந்துரையாடல் எடுத்துக் கொள்ளும் மத்தியநிலையானது, உலக சந்தையில் சமமான நிலையில் போட்டியிடுவதற்கு ஆசிய நாடுகளுக்கு உதவுகின்றது.

ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர தூதரகம்

நியூயோர்க்

 

27 செப்டம்பர் 2019

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close