இந்திய-இலங்கை இராஜதந்திர உறவுகளின் 75 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், புது டில்லியிலுள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயம்  ராமாயண தளங்கள் பற்றிய வெளியீடு

 இந்திய-இலங்கை இராஜதந்திர உறவுகளின் 75 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், புது டில்லியிலுள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயம்  ராமாயண தளங்கள் பற்றிய வெளியீடு

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உத்தியோகபூர்வ இராஜதந்திர உறவுகளை நிறுவியதன் 75வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், புது டில்லியில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம்,  சர்வதேச அளவில் புகழ்பெற்ற வெளியீட்டாளர் Dorling Kindersley Publishing Private Limited (DK) India உடன் இணைந்து, ராமாயணத் தளங்கள் குறித்த புத்தக வெளியீட்டுச் செயற்றிட்டத்தைத் தொடங்கியுள்ளது.

"ராமரின் அடிச்சுவடுகளில்; இந்தியா மற்றும் இலங்கையூடான ஒரு கலாச்சார பயணம்”, எனும் பெயரில் முன்மொழியப்பட்ட இப்புத்தகமானது, இராமாயணத்துடன் தொடர்புபட்ட இந்தியா மற்றும் இலங்கையிலுள்ள தளங்களின் வரலாறு, தொல்பொருளியல் மதிப்பு மற்றும் புராண அம்சங்களைக் கொண்டுள்ளது.

உயர்தர விளக்கப்பட குறிப்பு புத்தகங்களை வெளியிடும் DK வெளியீட்டு நிறுவனமானது, அடுத்த ஆண்டு ஜூலைக்குள் இப்புத்தகத்தின் இறுதி தயாரிப்பை வெளியிட திட்டமிட்டுள்ளது.

இப்புத்தகப் பிரசுரம் தொடர்பான உடன்படிக்கை, DK நிறுவனத்தின், இந்தியாவுக்கான முகாமைத்துவ பணிப்பாளர் அபர்ணா ஷர்மா, நிதி மற்றும் செயற்பாடுகளின் தலைவர் அல்கா குமார், இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட, பிரதி உயர்ஸ்தானிகர் நிலுகா கதுருகமுவ, உயர்ஸ்தானிகராலயத்தின் அமைச்சர் உபுல் புஷ்பகுமார மற்றும் அமைச்சர் ஆலோசகர் காமினி சரத் கொடகந்த ஆகியோரின் கையெழுத்துக்களுடன்,  புதுடில்லியில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் திங்கட்கிழமை (25) கைச்சாத்திடப்பட்டது.

இலங்கை உயர் ஸ்தானிகராலயம்

புது டில்லி

27 செப்டம்பர் 2023

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close