வெளிநாட்டமைச்சர் மாரபன வொஷிங்டனுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டார்.

வெளிநாட்டமைச்சர் மாரபன வொஷிங்டனுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டார்.

Hon. MFA with U.S. Secretary of State Michael R Pompeo

மே 15 முதல் 17 வரை ஐக்கிய அமெரிக்காவுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்ட வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் திலக் மாரபன அவர்கள் ஐக்கிய அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மைக்கல் ஆர். போம்போ அவர்களை மே 16 அன்று சந்தித்தார்.

ஏப்ரல் 21 இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலை அடுத்து ஐக்கிய அமெரிக்காவின் உதவிகளுக்கும் பயங்கரவாதத்திற்கெதிரான இலங்கையின் போராட்டத்திற்கான தொடர்ந்தேர்சியான அதன் ஒத்தாசைகளுக்கும் இலங்கையின் பாராட்டுக்களை அமைச்சர் தெரிவித்துக்கொண்டார்.

இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு பங்களிப்புச் செய்யக் கூடிய 480 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கான புத்தாயிரம் சவால் உடன்படிக்கையொன்றிற்கான அனுமதியினை அமைச்சர் மாரபன மற்றும் செயலாளர் பொம்போ ஆகியோர் கண்டுகொண்டனர். மேலும் இலங்கை-அமெரிக்க உறவுகள் மற்றும் எதிர்கால ஒத்துழைப்பு சம்பந்தமாகவும் அவர்கள் கலந்துரையாடினர்.

பின்னர், அமைச்சர் மாரபன அவர்கள் மூன்றாவது அமெரிக்க-இலங்கை பங்காண்மை உரையாடலுக்காக இலங்கை தூதுக்குழுவினை வழிநடாத்தினார்கள். இப் பங்காண்மை உரையாடலானது இருபக்க உறவுகளை மீள்பார்வை செய்வதற்கும் பலப்படுத்துவதற்குமான ஒழுங்கான கட்டமைக்கப்பட்ட ஈடுபாட்டினை வழங்குகிறது. பங்காண்மை உரையாடலின் கூட்டறிக்கை இணைக்கப்பட்டிருக்கின்றது.

விஜயத்தின்போது, வெளிநாட்டமைச்சர் மாரபன ஐக்கிய அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் போல்டன் அவர்களையும் சந்தித்தார்.

அமைச்சர் மாரபன அவர்கள் தலைமை தாங்கிய தூதுக் குழுவானது, வெளிநாட்டு செயலாளர் ரவிநாத ஆர்யசிங்க, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் லக்ஸம்பேர்கிற்கான தூதுவர் ரொட்னி பெரேரா, ஐக்கிய அமெரிக்காவிலுள்ள இலங்கை தூதரகத்தின் துணை நிலைத் தூதர் சரத் திஸாநாயக, வட அமெரிக்கா,லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியனுக்கான வெளிநாட்டமைச்சின் பணிப்பாளர் நாயகம் ஷானிகா திஸாநாயக, ஐ.நா மற்றும் சட்ட அலுவல்களுக்கான பணிப்பாளர் நாயகம் ஷோபினி குணசேகர, தகவல் மற்றும் தொடர்பாடல் தொழினுபட்ப முகவர் நியைத்தின் சட்ட ஆலோசகர் ஜயந்த பெர்னான்டோ, மத்திய வங்கியின் நிதியியல் புலனாய்வுத் துறையின் பணிப்பாளர் டி.எம். ரூபசிங்க, அபிவிருத்தி மூலோபாயங்கள் மற்றும் சர்வதேச வர்தக அமைச்சரின் ஆலோசகர் அனுஷ்கா விஜேசிங்க, தூதரகத்தின் அரசியல் விவகாரங்களுக்கான பொறுப்பதிகாரி பிரியங்க விக்ரமசிங்க, வணிக விவகாரங்களுக்கான பொறுப்பதிகாரி சுமேதா பொன்னம்பெறும, மற்றும் அரசியல் விவகாரங்களுக்கான கவுன்சலர் சதுர பெரேரா ஆகியோரை உள்ளடக்கியிருந்தது.

இலங்கை தூதரகம்

வொஷிங்டன் டி.சி.

மே 17, 2019

----------------------------------------------------------------------------------------------------------------

மூன்றாவது ஐக்கிய அமெரிக்க - இலங்கை பங்காண்மை உரையாடலின் கூட்டறிக்கை

மே 17, 2019

வொஷிங்டன் டி.சி.

பின்வரும் அறிக்கையானது மே 16, 2019 வொஷிங்கடன் டி.சி. இல் இடம்பெற்ற மூன்றாவது ஐக்கிய அமெரிக்க - இலங்கை பங்காண்மை உரையாடலின்போது இலங்கை மற்றும் ஐக்கிய அமெரிக்க அரசாங்கங்களினால் வெளியிடப்பட்டது.

அறிக்கை ஆரம்பிக்கின்றது.

ஜனநாயகம், மனித உரிமைகள், சட்ட ஆட்சிக்கான ஓர் அர்ப்பணிப்பினை பகிர்ந்தவர்களாக ஐக்கிய அமெரிக்கா மற்றும் இலங்கை மூன்றாவது ஐக்கிய அமெரிக்க - இலங்கை பங்காண்மை உரையாடலினை மே 16, 2019 அன்று ஒன்று கூட்டுகின்றது. கூட்டமானது இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் திலக் மாரபன மற்றும் அரசியல் விவகாரங்களுக்கான அமெரிக்காவின் கீழ் செயலாளர் டேவிட் ஹேல் ஆகியோரினால் தலைமை தாங்கப்பட்டது. பங்காண்மையினை மேலும் பலப்படுத்துவதற்காக ஒன்றாக செயற்படுவதற்கும் அர்பணிப்பதற்கும் சக ஜனநாயகத்திற்கான பகிரப்பட்ட பெறுமானங்களை உறுதியாக விதைப்பதற்கும் இருபக்க உறவுகளின் முக்கியத்துவத்தினை இரு அரசாங்கங்களும் மீள வலியுறுத்தின.

ஏப்ரல் 21 கோரமான உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இலங்கையின் பயங்கரவாதத் தடுப்பு முயற்சிகளுக்கு உதவி புரிவதோடு பயங்கரவாதத்திற்கெதிரகாக இலங்கையுடன் அமெரிக்கா கைகோர்க்கின்றது என்ற ஜனாதிபதி ட்ரம்ப் அவர்களின் அறிக்கையினை ஐக்கிய அமெரிக்கா மீள வலியுறுத்துகின்றது. கொழும்பிலுள்ள ஐக்கிய அமெரிக்க தூதரகம் மற்றும் புலன்விசாரனை கூட்டாட்சி பணியகத்தின் விசாரனையாளர்களிடமிருந்து வழங்கப்பட்ட பலதரப்பட்ட உதவிகளுக்கான பாராட்டுக்களை இலங்கை தெரிவித்தது. அத்தோடு, இரு தரப்புக்களும் எதிர்கால உதவிகள் மேற்கொள்ளப்பட முடியுமான பரப்புக்கள் தொடர்பாகவும் கலந்துரையாடினர். உயிர்த்த ஞாயிறன்று இலங்கையை தாக்கிய பயங்கரவாதிகள் ஐ.எஸ்.ஐ.எஸ் இனால் உந்தப்பட்டவர்கள். இச்சூழலில் ஐ.எஸ்.ஐ.எஸ் இனை தோற்கடிப்பதற்கான உலகளாவிய கூட்டு சம்பந்தமாக இலங்கை அறிவுறுத்தப்பட்டது. ஐக்கிய அமெரிக்கா பயங்கரவாத தடுப்பு, கடல்சார் மற்றும் எல்லைப் பாதுகாப்பு தொடர்பாக இலங்கைக்கு அமெரிக்கா தொடர்ந்தும் ஒத்துழைக்கும்.

சர்வதேச சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்கு கௌரவம் செலுத்துவதனை உறுதிப்படுத்தக் கூடிய விதிமுறை அடிப்படையிலான சட்டத்தினூடாக இந்திய மற்றும் பசுபிக் சமுத்திரங்களில் பாதுகாப்பான கடல் பிராந்தியத்தினை உறுதிப்படுத்துவதற்கும் சமாதானத்தினை மேம்படுத்துவதற்கும் ஒன்றாக செயல்படுவதற்கு ஐக்கிய அமெரிக்கா மற்றும் இலங்கை தீர்மாணித்தன. இந்நிலையில், கடல் பயணம், வான்வழி மற்றும் தடையற்ற வணிகம் என்பவற்றை உறுதிப்படுத்தக் கூடிய ஓர் திறந்த செழிப்பான இந்து பசுபிக் பிராந்தியம் நோக்கிய அமெரிக்காவின் மூலோபாயம் மிக முக்கியமான ஓர் ஆரம்பமாகும் என எடுத்துக்காட்டப்பட்டது. கடல்சார் பாதுகாப்பு தொடர்பில் ஒத்துழைப்பு மற்றும் பரிமாற்றல்களை மேலும் மேம்படுத்துவதற்கான விருப்பத்தினையும் அவர்கள் பரிமாறிக்கொண்டதுடன் ஒக்டோபர் 2018 இல் இலங்கையால் நடாத்தப்பட்ட இந்து சமுத்திர மாநாடு தொடர்பான திருப்தியையும் தெரிவித்தனர். மேலும் பரஸ்பர பயனுக்காக பாதுகாப்பு, ஸ்திரதன்மை, வெளிப்படை, பொருளாதார வாய்ப்பு என்பவற்றை மேம்படுத்துவதற்காக இணைந்த முன்னெடுப்புக்களை தொடர்வதற்கும் உடன்பட்டனர்.

இந்து சமுத்திரத்தில் இலங்கையின் அனர்த்த எதிர்கொள்ளல் இயலுமை மற்றும் அதன் மனிதாபிமான உதவிகளை வலுப்படுத்துவதற்கும் கடத்தல், மற்றும் ஏனைய சட்டத்திற்கு முரணான செயற்பாடுகளை தடுப்பதற்கும் இலங்கையின் நீர்ப்பரப்பினை மேற்பார்வை செய்வதற்குமான இலங்கையின் இயலுமையை கட்டியழுப்புவதில் பரஸ்பர ஆர்வங்களை மேம்படுத்துவதற்கான ஐக்கிய அமெரிக்க அதியுயர் பாதுகாப்பு உபகரண நிகழ்ச்சியினூடாக செயலாளர் தர உயர் கப்பலின் வருகை இலங்கையின் வரவேற்புக்குற்பட்டது. கண்ணி வெடி அகற்றுவதற்கான உதவி, இணைந்த இராணுவ ஈடுபாடுகள், இலங்கையின் அமைதி காக்கும் செயல்பாடு, இலங்கை உத்தியோகத்தர்களுக்கான மனித உரிமைகள் பயிற்றுவிப்பு போன்றவற்றுக்கான அமெரிக்காவின் உதவி மற்றும் இராணுவ உத்தியோகத்தர்கள் மற்றும் ஐக்கிய அமெரிக்க கப்பல்களின் வருகை உள்ளடங்களாக தொடர்கின்ற இருதரப்பு பாதுகாப்பு துறை ஒத்துழைப்புக்களை இரு அரசாங்கங்களும் வரவேற்றது. இலங்கை மற்றும் ஐக்கிய அமெரிக்கா பரஸ்பர இராணுவ ஒத்துழைப்புக்கு உடன்பட்டன.

நீடித்த சமாதானம் மற்றும் செழுமையைத் தொடர்வதில் நல்லிணக்கம், வகைகூறுதல், நீதி மற்றும் மனித உரிமைகள் என்பவற்றை மேம்படுத்துவதற்காக இலங்கையின் அர்ப்பணிப்பை புதுப்பிப்பதனை ஐக்கிய அமெரிக்க அரசாங்கம் வரவேற்றது. காணமல் போனோர் அலுவலகத்தின் கட்டளைகள்,இழப்பீட்டுக்கான அலுவலகம் ஒன்றை ஸ்தாபிப்பதற்கான சட்டவாக்க நடவடிக்கை மற்றும் பாதுகாப்பு படைகளால் பயன்படுத்தப்பட்ட தனியார் காணிகளை திருப்பி ஒப்படைத்தல் உள்ளடங்களாக இப்பரப்புகளிலுள்ள முன்னேற்றங்களையும் ஐக்கிய அமெரிக்கா நினைவூட்டியது.

ஜனநாயகம், ஜனநாயக நிறுவனங்கள் மற்றும் நடைமுறைகள், நல்லாட்சி, சட்ட ஆட்சி, நீதி மற்றும் பாராளுமன்ற ஒழுங்குகள் என்பவற்றை பலப்படுத்துவதற்கான இலங்கையின் அர்ப்பணிப்பை இலங்கை அரசாங்கம் வலியிறுத்தியது. இவ்வர்ப்பணிப்புக்களை நடைமுறைப்படுத்;துவதில் தொடர் உத்வேகத்திற்கு ஐக்கிய அமெரிக்கா இலங்கையை வலியுறுத்தியது.

நியாயம் மற்றும் மறுபரிசீலனையின் கொள்கைகளின் அடிப்படையிலான வளர்ந்து வருகின்ற இருபக்க வர்த்தகம் மற்றும் உறுதியான பொருளாதார பங்காண்மைக்கான உதவியை ஐக்கிய அமெரிக்கா மற்றும் இலங்கை வெளிப்படுத்தின. புத்தாயிர சவால் ஒத்துழைப்பு சபையால் ஓர் 480 மில்லியன் உடன்படிக்கைக்கான அனுமதியை இரு நாடுகளும் கண்டுகொண்டனர். உடன்படிக்கையின் கைச்சாத்து ஐக்கிய அமெரிக்காவின் காங்கிரஸ் அனுமதி மற்றும் இலங்கை அரச சபை அனுமதி என்பவற்றுக்காக நிலுவையிலுள்ளது.

இருபக்க உறவின் முக்கியத்துவத்தினை இலங்கை மற்றும் ஐக்கிய அமெரிக்கா நாடுகள் ஒன்றாக வலியுறுத்தியதோடு பரஸ்பர பயனுக்காக ஐக்கிய அமெரிக்கா-இலங்கை பங்காண்மையை மேலும் வலுப்படுத்துவதற்கான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியது.

அறிக்கை முடிவு.

Hon. MFA with U.S. National Security Advisor John Bolton Hon. MFA with U.S. Under Secretary of State for Political Affairs David Hale

Please follow and like us:

Close