வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர், கௌரவ திலக் மாரப்பன அவர்களின் சிறப்பு பாராளுமன்ற அறிக்கை - 25.07.19

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர், கௌரவ திலக் மாரப்பன அவர்களின் சிறப்பு பாராளுமன்ற அறிக்கை – 25.07.19

ஒன்று கூடுவதற்கான மற்றும் குழுமச் சுதந்திரத்திற்கான சிறப்புச் செய்தியாளர் திரு கிளமென்ட் நியலசோஸி வோல் அவர்களின் வருகை பற்றியும் கௌரவ தலைமை நீதிபதியையும் கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதிகளையும் சந்திக்கவேண்டுமென்ற அவரின் கோரிக்கை பற்றியும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சினால் எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக,  பாராளுமன்றத்தில் செவ்வாய் (23 ஜூலை) மற்றும் புதன் (24 ஜூலை) கிழமைகளில் பல்வேறு பாராளுமன்ற உறுப்பினர்களால் எழுப்பப்பட்ட பிரச்சனை தொடர்பில் எனது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இது பற்றிய கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களால் வெளிப்படுத்தப்பட்ட கருத்துக்கள் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளன என்ற வகையில், நான் பின்வருவனவற்றைத் தெளிவுபடுத்திக்கொள்ள விரும்புகிறேன்:

 • ஐ.நா. சிறப்பு நடைமுறைகள் பணிப்பாணை வைத்திருப்பவர்களால் இதுமாதிரியாக மேற்கொள்ளப்படும் விஜயங்களின் ஒரு பகுதியாக, சிறப்புச் செய்தியாளரின் வருகையும் இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 • இந்த மாதிரியான விஜயங்களை வரவேற்கும் நோக்கம்; ஐ.நா உள்ளடங்கலான சர்வதேச சமூகத்துடன் இலங்கை வெளிப்படையான மற்றும் பேச்சுவார்த்தை உணர்வில் ஒளிவு மறைவற்ற செயன்முறைகளைக் கொண்டிருப்பதற்காகவே.
 • ஒரு சிறப்புச் செய்தியாளர் இலங்கைக்கு வருவது இது முதல் தடவையல்ல; 8 ஜனவரி 2015 இலிருந்து இதுமாதிரியான 8 விஜயங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. அந்த மாதிரியான தருணங்களில், சிறப்புச் செய்தியாளரின் செயற்பாடுகளை ஒருங்கிணைப்பதும் அரச துறைகளுடனான கூட்டங்களை ஒழுங்குசெய்வதும் வெளிநாட்டு அமைச்சின் வழமையான செயற்பாடாகவே இருந்துவந்துள்ளது. இந்த விஜயங்கள் மேற்கொள்ளப்படுவதற்கு முன்பாக, ஐ.நா விடமிருந்து சந்திக்கவிரும்பும் சிறப்புச் செய்தியாளர்களின் பட்டியல் ஒன்று, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்டுக்கு கிடைக்கப்பெறும்.
 • தற்போது கேள்விக்குட்படுத்தப்பட்டுள்ள சிறப்புச் செய்தியாளரின் தற்போதைய விஜயம் தொடர்பில், பிற விஜயங்களைப் போலவே, இந்தச் சந்திப்புக்கான ஏற்பாடுகள் குறித்துக் கலந்தாலோசிப்பதற்கு, இவ்வமைச்சு சம்பந்தப்பட்டவர்களின் ஆயத்தக் கூட்டத்தை கூட்டியது என்பதை இங்கு குறிப்பிடுதல் முக்கியமானதாகும். அதன்பின்னர், சிறப்பு அறிக்கையாளரின் முறையான சந்திப்பு முன்பதிவுகளுக்கான கோரிக்கையை, அமைச்சகம் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அறிவிக்கும். இம்முறையும் அதே நடைமுறையே பின்பற்றப்பட்டது, அதாவது, கௌரவ தலைமை நீதிபதி மற்றும் கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதிகள் உள்ளிட்டவர்களுடனான 20 இற்கும் மேற்பட்ட சந்திப்புக்களைப் பெறுவதற்கு விரும்பப்பட்டது.
 • மேற்குறிப்பிட்ட ஆயத்தக் கூட்டத்தில்; சிறப்பு செய்தியாளரின் விஜயத்தினால் நீதி அமைச்சின் செயலாளருக்கு வெளிநாட்டு அமைச்சினால் அனுப்பப்பட்ட கடித்தத்திலுள்ள பிரச்சனைகள் கொண்டுவரப்படக்கூடிய சாத்தியக்கூறுகள் பற்றி, பொலிஸ் திணைக்களம் மற்றும் சட்டமா அதிபர் திணக்களத்தின் பிரதிநிதிகள் கோடிட்டுக் காட்டினர். அந்த மாதிரியான நிகழ்வுகளின் தற்போதைய நிலைமைகள் பற்றியவற்றை வழங்கும் பணியைச் சட்டமா அதிபர்  திணைக்களம் மேற்கொண்டது.
 • இப்பின்னணியிலேயே, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் பதிலாள் செயலாளர்; நீதி அமைச்சின் செயலாளர், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் கௌரவ சட்டமா அதிபர் ஆகியோருக்கு இந்நிகழ்வுகளைப் பற்றிக் குறிப்பிட்டார். இதன் நோக்கம், குறிப்பிட்ட நிகழ்வுகள் தொடர்பில் சிறப்புச் செய்தியாளர் பிரச்சனைகளை எழுப்பக்கூடிய சாத்தியக்கூறுகள் பற்றி, இந்த நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுப்பதாகும்.
 • கௌரவ தலைமை நீதிபதி மற்றும் கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதிகளுடனான சந்திப்புக்கான முன்பதிவுகள் வழங்கப்படவேண்டுமென்பது, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் பதிலாள் செயலாளரின் கடிதத்தில் எந்த இடத்திலும் பரிந்துரைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இச்சந்திப்புக்களை சிறப்புச் செய்தியாளர் விரும்புகிறார் என்பது மட்டுமே அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டது.
 • அதேபோலவே, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கடிதத்தில் இவ்விடயங்கள் பற்றிய கலந்தாலோசிக்கப்படும் என்பதும் குறிப்பிடப்படவில்லை, ஆனால், அவை பற்றிக் கலந்தாலோசிக்கப்படக்கூடும் என்றே சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு எச்சரிக்கப்பட்டிருந்தது. இதுகூட, குறித்த விஜயத்திற்கு முன்பாக ஜூலை 5 இல் சம்பந்தப்பட்டவர்களுடனான நடைபெற்ற கூட்டத்தின் விளைவே.
 • சிறப்புச் செய்தியாளரின் சந்திப்புக்களுக்கான கோரிக்கையை நீதி அமைச்சு மற்றும் நீதித்துறைச் சேவைகள் ஆணையகத்திடம் தெரிவித்ததன் மூலம், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சானது முறையான நடைமுறைகளையே பின்பற்றியிருக்கிறது. நீதித்துறைச் சேவைகள் ஆணையகமானது, இவ்வமைச்சின் கடிதத்தைக் கருத்தில் கொண்டு, கௌரவ தலைமை நீதிபதியின் ஆலோசனையின் பேரில், அவரால் இந்த சந்திப்புக்கான முன்பதிவு வழங்கப்பட்டது.
 • வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் பதிலாள் செயலாளரின் கடிதமானது, நீதித்துறையில் தலையீடு செய்கிறது மற்றும் நீதிமன்ற அவமதிப்பு என்பது மாதிரியான சில பாராளுமன்ற உறுப்பினர்களின் வெளிப்பாடு குறித்து நான் கவலையடைந்துள்ளேன். இத்துணிபுரைகள் எதுவும் உண்மையல்ல.
 • இக்குறிப்பிட்ட விஜயத்திற்காக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சினால் எடுக்கப்படும் முதல் நடவடிக்கை அல்ல இது என்பதை நான் மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். உண்மையில், முன்பிருந்த இரு வெளிநாட்டு அமைச்சின் செயலாளர்கள், ஜூன் 2017 இலும் அக்டோபர் 2017 இலும், நேரடியாக கௌரவ தலைமை நீதிபதிக்கு எழுத்துமூலமாக அறிவித்து, இதேமாதிரியான சந்திப்புக்களைக் கோரியிருந்தார்கள். ஆனபோதிலும், இச்சந்தர்ப்பத்தில் சிறப்புச் செய்தியாளரின் கோரிக்கையானது நீதி அமைச்சின் செயலாளருக்கு மட்டுமே அறிவிக்கப்பட்டது.
 • முடிவாக, சிறப்பு நடைமுறைகள் பணிப்பாணை வைத்திருப்பவர்களின் விஜயங்களின்போது, ஆலோசனை மற்றும் ஈடுபாட்டு உணர்வில் இவ்வமைச்சு எப்போதுமே இலங்கையின் சம்பந்தப்பட்டவர்களுடன் இணைந்தே பணியாற்றியது என்பதைக் குறிப்பிடவிரும்புகிறேன்.

 

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close