பிரேசிலில் இலங்கை ஏற்றுமதிகளுக்கான மேம்படுத்தப்பட்ட சந்தை அணுகலை வெளிநாட்டு அமைச்சர்  பீரிஸ் நாடல்

பிரேசிலில் இலங்கை ஏற்றுமதிகளுக்கான மேம்படுத்தப்பட்ட சந்தை அணுகலை வெளிநாட்டு அமைச்சர்  பீரிஸ் நாடல்

அபிவிருத்தியடைந்துவரும் பிரேசிலிய சந்தையில் இலங்கை ஏற்றுமதிப் பொருட்களுக்கான அதிகரித்த  அணுகலை வெளிநாட்டு அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் நாடினார். இலங்கையில் உள்ள பிரேசில் தூதுவர் செர்ஜியோ லூயிஸ் கேன்ஸுடன் 2021 செப்டம்பர் 29ஆந் திகதி வெளிநாட்டு அமைச்சில் இடம்பெற்ற சந்திப்பின் போது அமைச்சர் இந்தக் கோரிக்கையை விடுத்தார். தூதுவர் கேன்ஸை வரவேற்ற வெளிநாட்டு அமைச்சர் பீரிஸ், இருதரப்பு நலன்கள் சார்ந்த பல்வேறு பகுதிகளில் பிரேசிலுடன் நெருக்கமான உறவை ஏற்படுத்துவதற்கான இலங்கையின் வலுவான உறுதிப்பாட்டைத் தெரிவித்தார்.

காலநிலை மாற்றம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, பல்தரப்பு நிறுவனங்களின் சீர்திருத்தங்கள் மற்றும் தெற்கு-தெற்கு ஒத்துழைப்பு உள்ளிட்ட பரஸ்பர ஆர்வத்தின் பல முக்கிய உலகளாவிய விடயங்களில் பொதுவான அடிப்படையை அடைந்து கொள்வதற்காகப் பணியாற்றுவதற்கு அமைச்சர் பீரிஸ் மற்றும் தூதுவர் கேன்ஸ் ஆகிய இருவரும் இந்த சந்திப்பின் போது ஒப்புக்கொண்டனர். இலங்கையின் நீண்டகால அணிசேரா பாரம்பரியத்தின் பின்னணியில் பிரேசில் மற்றும் முழுமையான தெற்கு மற்றும் மத்திய அமெரிக்கப் பிராந்தியத்துடன் வலுவான உறவுகளைப்  புதுப்பிக்க வெளிநாட்டு அமைச்சர் தனது ஆர்வத்தைத் தெரிவித்தார்.

இரு நாடுகளுக்கிடையே உள்ள ஆராயப்படாத வர்த்தக ஆற்றலை சுட்டிக் காட்டிய அமைச்சர் பீரிஸ், பிரேசிலில்  தேயிலை, சுவையூட்டிகள் மற்றும் பெறுமதி வாய்ந்த மற்றும் அரை பெறுமதி வாய்ந்த இரத்தினக் கற்கள் போன்ற உண்மையான இலங்கைத் தயாரிப்புக்களுக்கான சந்தை வாய்ப்புக்களை கோடிட்டுக் காட்டினார். பிரேசில் பயணிகளிடையே இலங்கையை ஒரு சுற்றுலாத் தலமாக ஊக்குவிப்பதற்காக அவர் தூதுவர் கேன்ஸூக்கு அழைப்பு விடுத்தார்.

வெளிநாட்டு அமைச்சு

கொழும்பு

2021 அக்டோபர் 01

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close