பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் ஒருங்கிணைப்புக்களை ஆராய்தல்: இலங்கை 30வது மிண்டானாவோ வணிக மாநாட்டில் காட்சிப்படுத்தல்

பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் ஒருங்கிணைப்புக்களை ஆராய்தல்: இலங்கை 30வது மிண்டானாவோ வணிக மாநாட்டில் காட்சிப்படுத்தல்

நாட்டின் மிகப் பெரிய வணிக ஆதரவு அமைப்பான பிலிப்பைன்ஸ் வர்த்தக மற்றும் தொழில்துறை சங்கத்தின் அழைப்பின் பேரில், 2021 செப்டம்பர் 23 -24 வரை ஸூம் மற்றும் பேஸ்புக் லைவ் வழியாக நடைபெற்ற 30வது மிண்டானாவ் வணிக மாநாட்டின் முதல் நாளில் விருந்தினர் பேச்சாளராக தூதுவர் ஷோபினி  குணசேகர விளக்கக்காட்சியொன்றை வழங்கினார்.

நிகழ்வின் சர்வதேச வர்த்தகம் மற்றும் ஒத்துழைப்புப் பிரிவின் கீழான இந்த விரிவான விளக்கக்காட்சி, இலங்கை  மற்றும் மிண்டானாவோ இடையே பொருளாதார ஒத்துழைப்புக்கான தற்போதைய மற்றும் சாத்தியமான பகுதிகளை காட்சிப்படுத்தியது.

இருநாடுகளின் நீண்டகால உறவுகள், பலங்கள் மற்றும் ஒற்றுமைகளை அங்கீகரிக்கும் வகையில், மிண்டானாவோ  வணிகத் துறையை, குறிப்பாக விவசாயம், உணவு பதப்படுத்துதல், ஐடி-பிபிஎம், கப்பல் பரிமாற்றங்கள், சுரங்கங்கள், கல்வி போன்ற பல தொழில்களிலான கூட்டு முயற்சிகள், கூட்டாண்மை மற்றும் ஒத்துழைப்பு போன்ற பரஸ்பரம் நன்மை பயக்கும் ஈடுபாடுகளின் மூலம் இலங்கையுடன் வர்த்தகம் மற்றும் முதலீட்டு வாய்ப்புக்களை ஆராய்வதற்கு தூதுவர் குணசேகர ஊக்குவித்தார்.

மேலும், வரவிருக்கும் கொழும்பு நிதி நகரத்தில் முதலீட்டு வாய்ப்புக்களையும், இலங்கையின் சுற்றுலா  அம்சங்களையும் பிலிப்பைன்ஸ் பயணிகளுக்கு தொற்றுநோய் மனவழுத்த ஆறுதல் இடமாக இலங்கையை ஊக்குவிப்பதற்காகவும் அவர் காட்சிப்படுத்தினார்.

30வது மிண்டானாவோ வணிக மாநாடு,'மாறும் நேரங்கள், மிண்டானாவோவில் சவாலான பாத்திரங்கள்'  என்ற கருப்பொருளுடன், தற்போதைய சூழ்நிலையில் மிண்டானாவோ வணிக சமூகம் மற்றும் பொருளாதார மீட்புக்கான தீர்வுகள் பற்றிய மிக முக்கியமான விடயங்கள் குறித்து கவனம் செலுத்தியது. இந்த ஆண்டு மாநாட்டை சாரங்கனி சேம்பர் ஒஃப் கொமர்ஸ் அன்ட் இண்டஸ்ட்ரி மற்றும் சவுத் கொட்டபாட்டோ சேம்பர் ஒஃப் கொமர்ஸ் அன்ட் இண்டஸ்ட்ரி ஃபவுண்டேஷன் இன்க் ஆகியவற்றுடன் இணைந்து ஜெனரல் சாண்டோஸ் சேம்பர் ஒஃப் கொமர்ஸ்  அன்ட் இண்டஸ்ட்ரி இன்க் நடாத்தியது.

இரண்டு நாள் நிகழ்வில் பிலிப்பைன்ஸின் அரச நிறுவனங்கள், வணிக ஆதரவு நிறுவனங்கள், தொழிற்சங்கங்கள்,  மிண்டானாவோ வணிக சமூகம் மற்றும் ஏனைய சம்பந்தப்பட்ட பங்குதாரர்கள் சுமார் 1000 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

மிண்டானாவோ பிலிப்பைன் தீவுக்கூட்டத்தின் தெற்குப் பகுதியாகும். மெட்ரோ டவாவோ மற்றும் மெட்ரோ  ககாயன் டி ஓரோ போன்ற பொருளாதார மையங்களின் எழுச்சியுடன் அதன் பொருளாதாரத்தை பல்வகைப்படுத்துகிறது ஆதலால், நாட்டின் முக்கிய உணவுப் பிராந்தியமான மிண்டானாவோவில் பிராந்திய பொருளாதார அபிவிருத்திக்கான வாய்ப்புக்கள் தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றன.

இலங்கைத் தூதரகம்,

மணிலா, பிலிப்பைன்ஸ்

2021 அக்டோபர் 01

 

 

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close