ஜோர்தானில் உள்ள இலங்கை தூதரகம் அம்மானில் நடைபெற்ற 59 வது ஆண்டு இராஜதந்திர சந்தையில் பங்கேற்பு

 ஜோர்தானில் உள்ள இலங்கை தூதரகம் அம்மானில் நடைபெற்ற 59 வது ஆண்டு இராஜதந்திர சந்தையில் பங்கேற்பு

ஜோர்தானில் உள்ள இலங்கை தூதரகம், 2023 அக்டோபர் 07 அன்று, அல் ஹுசைன் யூத் சிட்டியில் நடைபெற்ற, 59 ஆவது ஆண்டு இராஜதந்திர சந்தையில் பங்கேற்றது. இந்த நிகழ்வு மபரத் உம் அல் ஹுசைன் அனாதை இல்லத்துக்கு உதவும் நோக்கில், 1958 இல் மறைந்த ராணி ஜீன் அல் ஷரஃப் அவர்களால் நிறுவப்பட்டதுடன், HRH இளவரசி பாஸ்மா பின்ட் தலால் அவர்களின் ஆதரவின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டது.

கைவினைப்பொருட்கள், தேங்காய் பொருட்கள், பத்திக், கோரைப்புல் மற்றும் நாணலினாலான பின்னல் பொருட்கள், சிலோன் தேநீர் மற்றும் இலங்கை உணவு வகைகள் மூலம் இலங்கையின் தனித்துவமான கலாச்சார அடையாளத்தை காட்சிப்படுத்த இலங்கை தூதரகம், இரண்டு கூடாரங்களை அமைத்திருந்தது.

ஜோர்தானில் உள்ள Mas Al Safi Apparel Manufacturing LLC இல் இலங்கை ஊழியர்கள் வழங்கிய  துடிப்பான நடன நிகழ்ச்சிகள், நிகழ்வின் சிறப்பம்சங்களில் ஒன்றாகும். நிகழ்ச்சிகளில் உள்ளடங்கியிருந்த இலங்கை பாரம்பரிய நடனம், இலங்கையின் வளமான கலாச்சார பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் நோக்கத்துடன் வழங்கக்கப்பட்டிருந்தது.

இளவரசி பாஸ்மா தூதர்கள் மற்றும் தூதரகப் பணியகங்களின் பிரதிநிதிகளுடன் சேர்ந்து உலகின் பல பகுதிகளிலிருந்தும் கைவினைப் பொருட்கள் மற்றும் பாரம்பரிய உணவுகளின் பரந்த வரிசையைக் கொண்டிருந்த சந்தையைச் சுற்றிப்பார்த்தார்.

இலங்கை  கூடாரங்களை பார்வையிட்ட இளவரசி, சந்தையில் பங்கேற்றதற்காக பணிக்குழுவுக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்ததுடன், இலங்கை பாரம்பரிய உற்பத்திகளை பாராட்டினார்.

இலங்கை கூடாரங்கள் பல ஜோர்டானிய மற்றும் வெளிநாட்டு பார்வையாளர்களை ஈர்த்தது. சிலோன் தேயிலை, தேங்காய் உற்பத்திப் பொருட்கள் மற்றும் மசாலாப் பொருட்களுக்கு அதிக கேள்வி நிலவியது.

அம்மானை தளமாகக் கொண்ட சுமார் 40 தூதரக அதிகாரிகள் இச்சந்தையில்  பங்கேற்றனர்.

இலங்கை தூதரகம்

அம்மான்

 13 அக்டோபர் 2023

 

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close