மேன்மைதங்கிய ரவுல் இக்னேசியன் குவாஸ்தாவினோ அவர்களைத் தொடர்ந்து இலங்கைக்கான ஆர்ஜென்டீனா குடியரசின் தூதுவராக திரு. டேனியல் சுபுரு அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன் ஆர்ஜென்டீனா குடியரசின் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தனது தகுதிச் சான்றுகளை இலங்கை ஜனாதிபதி அதிமேதகு மைத்திரிபால சிறிசேன அவர்களிடம் கொழும்பில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையில் 06 மே 2019 அன்று சமர்ப்பித்தார்.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு
கொழும்பு
06 மே 2019
Please follow and like us: