வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சருடன் சீனத் தூதுவர் மரியாதை நிமித்தம் சந்திப்பு

 வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சருடன் சீனத் தூதுவர் மரியாதை நிமித்தம் சந்திப்பு

சீனத் தூதுவர் கி சென்ஹொங்கை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி 2022 ஜூலை 27ஆந்  திகதி அமைச்சில் வைத்து சந்தித்தார். வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சரின் புதிய நியமனத்திற்கு தூதுவர்கி சென்ஹொங்  ஆரம்பத்தில் வாழ்த்துக்களைத் தெரிவித்ததோடு, சீன மாநில அவை உறுப்பினரும், வெளியுறவு அமைச்சருமான வாங் யீயின் வாழ்த்துச் செய்தியைக் கையளித்தார்.

இலங்கையும் சீனாவும் நீண்டகால இருதரப்பு மற்றும் பொருளாதார உறவுகளைக் கொண்ட பாரம்பரிய நட்பு நாடுகளாகும் என வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் தெரிவித்தார். அரசாங்கம் மற்றும் மக்களுக்கு இடையிலான  தொடர்புகள் உட்பட வலுவான இருதரப்பு உறவுகள் குறித்து இரு தரப்பினரும் மிகுந்த திருப்தியை வெளிப்படுத்தினர்.

இந்த சந்திப்பின் போது வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் சீன தூதரக  அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு

கொழும்பு

2022 ஜூலை 28

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close