இலங்கை தலைமையை ஏற்கும்போது பிம்ஸ்டெக் தலைவர்கள் நிறுவனத்தை மேலும் பலம் வாய்ந்ததாக மாற்றுவதற்கு தீர்மானிக்கிறார்கள்

இலங்கை தலைமையை ஏற்கும்போது பிம்ஸ்டெக் தலைவர்கள் நிறுவனத்தை மேலும் பலம் வாய்ந்ததாக மாற்றுவதற்கு தீர்மானிக்கிறார்கள்

BIMSTEC chair hand over

31 ஆகஸ்ட் 2018 அன்று கத்மண்டுவில் நடைபெற்ற 4வது வங்காள விரிகுடா பல்துறை தொழிநுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு (பிம்ஸ்டெக்) மாநாட்டின் முடிவில் அதன் தலைமைத்துவம் இலங்கைக்கு ஒப்படைக்கப்பட்டது.

நேபாளத்தின் பிரதமர் கே.பி. ஷர்மா ஒலி அவர்களிடமிருந்து பிம்ஸ்டெக்கின் தலைமைத்துவத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்றுக்கொண்டவராக இலங்கை மீது வைத்திருக்கின்ற நம்பிக்கைக்கும் நன்மதிப்பிற்கும் பிம்ஸ்டெக்கின் அனைத்து அங்கத்துவ நாடுகளுக்கும் நன்றி கூறியதோடு கத்மண்டு மாநாட்டில் உருவாக்கப்பட்ட இலட்சிய நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை எத்தணிப்பதாகவும் தெரிவித்தார். புதுத் தலைமையை வாழ்த்தியவர்களாக அனைத்து பிம்ஸ்டெக் தலைவர்களும் ஜனாதிபதி சிறிசேன அவர்களது தலைமையின் கீழ் நிறுவனம் பலமாக முன் நகரும் என்று நம்பிக்கை தெரிவித்தனர்.

ஆகஸ்ட் 31ம் திகதி ஆரம்பத்தில், “அமைதியான செழிப்பான நிலைபேறான வங்காள விரிகுடா பிராந்தியம்” என்ற கத்மண்டு உச்சிமாநாட்டின் பிரகடனத்திற்கு அமைவாக இலங்கை மற்றும் மியன்மாரின்  ஜனாதிபதிகள், இந்தியா, பங்களாதேஷ், நேபாளம் மற்றும் தாய்லாந்து ஆகியவற்றின் பிரதமர்கள் பூட்டான் அரசாங்கத்தின் பிரதம ஆலோசகர் ஆகியோர் பிம்ஸ்டெக்கின் தற்போதுள்ள ஒத்துழைப்புக்கான பகுதிகளை மீளாய்வு செய்வதற்கும் மறுசீரமைப்பு மற்றும் பகுப்பாய்வு செய்வதற்கும் உடன்பட்டதோடு உறுதியான முடிவுகளை அடைவதற்கு நடவடிக்கைகள், திட்டங்கள் மற்றும் திட்டங்களுக்கான செயல்பாட்டு நடைமுறைகளை ஒழுங்குபடுத்துவதற்கும் உடன்பட்டனர். பிரகடனமும் கூட பிம்ஸ்டெக்கின் புதிய தலைமையாக இலங்கையை வரவேற்றது.

இந்த உச்சி மாநாடு பிம்ஸ்டெக் செயல்முறையை விரைவுபடுத்த நிறுவன வழிமுறைகளுக்கு அஸ்திவாரம் அளித்தது. பிம்ஸ்டெக் நிரந்தர வதிவிடக் குழு (BPWC) ஒன்றை நிறுவவும், நிறுவனத்திற்கான வரைவொன்றை தயாரிக்கவும் பிம்ஸ்டெக் வழிமுறைகள் மற்றும் மையங்களுக்கான நடைமுறை விதிகளை உருவாக்கவும் மற்றும் பிம்ஸ்டெக் அபிவிருத்தி நிதியத்தை நிறுவுவதற்கான சாத்தியத்தை ஆராயவும் தலைவர்கள் ஒப்புக்கொண்டனர்.

பிம்ஸ்டெக் உள்ளிணைப்புக்கான வலையமைப்பு தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கை இலங்கை சார்பில் வெளிவிவகார அமைச்சர் வசந்த சேனாநாயக அவர்களினார் கையெழுத்திடப்பட்டது. தலைவர்களது முன்னிலையில் பிம்ஸ்டெக் நாடுகளிகளின் வெளிநாட்டு அமைச்சர்களும் வெளிநாட்டு இராஜாங்க அமைச்சர்களும் கையொப்பமிடும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இந்த உச்சிமாநாட்டின் பிரகடனம் தனது பதவி காலத்தின் போது நிறுவனத்தின் பணியை சிறந்த முறையில் முன்னெடுத்துச் சென்ற பிம்ஸ்டெக்கின் முதல் செயலாளர் நாயகம் இலங்கை தூதுவர் சுமித் நாகந்தளா அவர்களுக்கும் நன்றியை வெளிப்படுத்தியது.

4வது பிம்ஸ்டெக் மாநாட்டுக்கான இலங்கைத் தூதுக்குழு வெளிநாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக, நோபாளத்துக்கான இலங்கைத் தூதுவர் சுவர்ண பெரேரா வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் பதில் மேலதிக செயலாளர்/பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் வர்தகம் ரவிநாதா ஆரியசிங்ஹ மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் பணிப்பாளர் நாயகம் சரோஜா சிறிசேன ஆகியோரை உள்ளடக்கியிருந்தது.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு
கொழும்பு

02 செப்டம்பர் 2018

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close