இலங்கை மக்களுக்கு அமெரிக்காவில் உள்ள ஹார்ட் டு ஹார்ட் இன்டர்நெஷனல் நிறுவனத்திடமிருந்து 7.2 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான அவசர மருந்துப் பொருட்களுக்கான மற்றுமொரு நன்கொடை

இலங்கை மக்களுக்கு அமெரிக்காவில் உள்ள ஹார்ட் டு ஹார்ட் இன்டர்நெஷனல் நிறுவனத்திடமிருந்து 7.2 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான அவசர மருந்துப் பொருட்களுக்கான மற்றுமொரு நன்கொடை

 வொஷிங்டன் டி.சி.யில் உள்ள இலங்கைத் தூதரகம் மற்றும் அமெரிக்காவில் உள்ள ஹார்ட் டு ஹார்ட் இன்டர்நெஷனல் ஆகியவற்றின் கூட்டு ஊடக வெளியீடு

அதிமேதகு தூதுவர் மஹிந்த சமரசிங்கவின் வழிகாட்டுதலின் கீழ், ஹார்ட் டு ஹார்ட் இன்டர்நெஷனல், தற்போது 7,270,756.31 அமெரிக்க டொலர்கள் (அதாவது, 2.7 பில்லியன் ரூபாய்) பெறுமதியான அவசர மருத்துவ உதவிகளை வழங்குவதற்குத் தேவையான இலங்கை அரசாங்கத்தின் அனைத்து அனுமதிகளையும் பெற்றுள்ளது. உயர் இரத்த அழுத்தம் மற்றும் ஏனைய இதயப் பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான ப்ராப்ரானோலோல் ஹைட்ரோகுளோரைட் மற்றும் லேபெடலோல் எச்.சி.எல், உடலில் குறைந்த அளவு பொட்டாசியத்தை குணப்படுத்துவதற்கான பொட்டாசியம் குளோரைட், மனச்சோர்வு, ஸ்கிசோஃப்ரினியா, இருமுனைக் கோளாறுகள் போன்ற சில மன / உள நிலைகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான குட்டியாபைன் ஃபுமரேட் மற்றும் உயர் இரத்த யூரிக் அமில அளவைக் குறைத்து, கீல்வாதத்தைத் தடுப்பதற்கான (கீல்வாதத்தின் ஒரு வடிவம்) அலோபுரினோல் போன்ற அவசர மருந்துகள் சமீபத்திய நன்கொடையில் உள்ளடங்கியுள்ளன.

இந்த இக்கட்டான தருணத்தில் இலங்கை மக்களுக்கு வழங்கிய தாராளமான நன்கொடைகளுக்காக வொஷிங்டன் டி.சி.யில் உள்ள இலங்கைத் தூதரகம் ஹார்ட் டு ஹார்ட் இன்டர்நெஷனல் நிறுவனத்திற்கு என்றென்றும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றது. இலங்கையில் உள்ள சுகாதார அமைச்சு மற்றும் இந்த தூதரகத்தின் ஒருங்கிணைப்பில், மூன்றாவது நன்கொடையானது 2022 டிசம்பர் 29ஆந் திகதி விமானம் மூலம் இலங்கையின் கொழும்பை சென்றடையவுள்ளது. முந்தைய நன்கொடைகளைப் போலவே, அனைத்து செலவுகளும் ஹார்ட் டு ஹார்ட் இன்டர்நெஷனல் நிறுவனத்தால் ஏற்கப்படுவதுடன், சுகாதார அமைச்சு நன்கொடையை இலங்கை மக்களுக்கு எந்தக் கட்டணமும் இன்றி உடனடியாக விநியோகிக்கும்.

இதுவரை, ஹார்ட் டு ஹார்ட் இன்டர்நெஷனல் இலங்கை மக்களுக்கு வழங்கிய மொத்த நன்கொடையானது அண்ணளவாக மொத்தம் 19,915,909.38 அமெரிக்க டொலர்கள் (அதாவது, 7.4 பில்லியன் இலங்கை ரூபா) ஆகும்.

கன்சாஸ், லெனெக்சாவை தலைமையிடமாகக் கொண்ட ஹார்ட் டு ஹார்ட் இன்டர்நெஷனல், ஆரோக்கியத்திற்கான அணுகலை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் உலகளாவிய மனிதாபிமான அமைப்பாகும். 1992 இல் தொடங்கப்பட்டதிலிருந்து, ஹார்ட் டு ஹார்ட் இன்டர்நெஷனல் மருத்துவ உதவி மற்றும் 2.5 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியிலான பொருட்களை அமெரிக்காவிற்குள் உட்பட 130 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு வழங்கியுள்ளது. உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் இயற்கை அனர்த்தங்களுக்கு மருத்துவ நிவாரணம் வழங்குவதன் மூலமும் தன்னார்வலர்களை அணிதிரட்டுவதன் மூலமும் ஹார்ட் டு ஹார்ட் இன்டர்நெஷனல் பிரதிபலிக்கின்றது. இந்த அமைப்பு, 4 நட்சத்திர வழிசெலுத்துனர் தொண்டு நிறுவனம், பி.பி.பி. அங்கீகாரம் பெற்ற தொண்டு நிறுவனம் போன்ற அந்தஸ்த்துக்களையுடைய 'பரோபகாரம் 400' இல் உள்ள அமைப்பாகும்.

 

இலங்கைத் தூதரகம்,                                                                                                    ஹார்ட் டு ஹார்ட் இன்டர்நெஷனல்,                                                                                                           கன்சாஸ்

வொஷிங்டன், டி.சி.

 

2022 டிசம்பர் 28

Please follow and like us:

Close