தூதுவர் விஸ்வநாத் அபோன்சு டெஹ்ரானிலுள்ள IORA -அயோராவின் விஞ்ஞானம் மற்றும் தொழிநுட்ப பரிமாற்றத்திற்கான பிராந்திய நிலையத்திற்கு(RCSTT)  விஜயமளித்தமை

தூதுவர் விஸ்வநாத் அபோன்சு டெஹ்ரானிலுள்ள IORA -அயோராவின் விஞ்ஞானம் மற்றும் தொழிநுட்ப பரிமாற்றத்திற்கான பிராந்திய நிலையத்திற்கு(RCSTT)  விஜயமளித்தமை

ஈரான் இஸ்லாமியக் குடியரசிற்கான இலங்கை தூதுவரான ஜி.எம்.வி.விஸ்வநாத் அபோன்சு டெஹ்ரானிலுள்ள இந்து சமுத்திர எல்லை(IORA) அமைப்பின் விஞ்ஞானம் மற்றும் தொழிநுட்ப பரிமாற்றத்திற்கான பிராந்திய நிலையத்திற்கு (RCSTT), 2023 ஆகஸ்ட் 09 அன்று விஜயமளித்திருந்தபோது, ஆயோராவின் விஞ்ஞான மற்றும் தொழிநுட்பட்ப பரிமாற்றத்திற்கான பிராந்திய நிலைய தலைமைப்பணிப்பாளர் டாக்டர் மொஹமட் ரேசா சஞ்ஜாபி,  விஞ்ஞான, ஆராய்ச்சி மற்றும் தொழிநுட்பத்துறை அமைச்சின் பிரதி அமைச்சரும், விஞ்ஞான மற்றும் தொழிநுட்பத்திற்கான ஈரானிய ஆராய்ச்சி நிலைய (RCSTT) தலைவருமான பேராசிரியர் ஹசன் சமானியன், ( பொருளாதார கூட்டுத்தாபனம்) வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் பணிப்பாளர்  பெஹ்ஸாட் அசார்சா, IROST சர்வேதேச கூட்டுத்தாபன பணிப்பாளர்  டாக்டர். அன்வர் ஷல்மாஷி ஆகியோருடன் கலந்துரையாடலொன்றை மேற்கொண்டார். RCSTT இன் தலைவர் வருகையளித்திருந்த கௌரவ விருந்தினர்களுக்கான வரவேற்புரையை நிகழ்த்துகையில், பொறுப்பானை, RCSTT இன் உத்தியோகத்தர்கள், ஏனைய தரகர் நிறுவனங்களுடனான பங்குடைமை, RCSTT இன் அண்மைக்கால புத்தாக்கங்கள், நடவடிக்கைகள் மற்றும் எதிர்கால நிகழ்வுகள், நிறுவன ரீதியாக இலங்கையுடனான தொடர்பை வலுவூட்டுவதற்கான ஆயத்த நிலை போன்றவற்றை வெளிப்படுத்தியிருந்தார்.

தூதுவரின் அயோரா-RCSTT இற்கான விஜயமானது, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் எம். யு.எம்.அலி சப்ரி அண்மையில் ஈரானிற்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தை தொடர்ந்து இடம்பெற்றதுடன், அமைச்சரின் அவ்விஜயத்தின்போது ஈரானிய ஜனாதிபதி டாக்டர். இப்ராஹிம் ரைஸி தனது நாட்டின் கொள்திறன்களை இலங்கையுடன்  பகிர்ந்து கொள்வதாக சம்மதம் தெரிவித்திருந்தார். அவ்விஜயமானது IORA செயற்பாட்டு திட்டத்தின் கீழ், இலங்கை, ஈரான் ஆகிய இரு நாடுகளுக்கிடையிலும் பரஸ்பரமான விஞ்ஞான, தொழிநுட்ப மற்றும் புத்தாக்க ஊக்குவித்தலுடனான அபிவிருத்தியை கூட்டாக ஏற்படுத்துவதற்கான ஊக்கப்படுத்துவதையே மையமாக கொண்டிருந்தது.

சந்திப்பின் போது, தூதுவர் விஸ்வநாத் அபொன்சு RCSTT இன் குறிப்பிட்டு கூறத்தக்க பங்கானது, அயோரா அங்கத்துவ நாடுகளின் பதிலீட்டு ஆய்வு, கொள்கை, மனிதவள அபிவிருத்தி நிகழ்ச்சி, நவீன தொழிநுட்ப மேம்பாடு, இணைந்த கூட்டுறவு, அங்கத்துவ நாடுகள் மற்றும் பங்குதாரர்களுக்கிடையிலான தொழிநுட்ப பரிமாற்றம் போன்ற ஒத்துழைப்பை வழங்குவதற்காக விளங்குகிறது. மேலும் விஞ்ஞானம், தொழிநுட்பம் மற்றும் புத்தாக்கம் போன்றவை அயோரா அங்கத்துவ நாடுகளுக்கிடையில் பகிரப்பட்டுக்கொல்வாதற்கான  அவசியத்தை வலியுறுத்திய இலங்கை தூதுவா, அவ்வாறான சகல முயற்சிகளுக்கும் இலங்கையானது, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு மற்றும் தொழிநுட்பத்துறை அமைச்சுடன் இணைந்து தனது முழுமையான ஒத்துழைப்பை வழங்குமென உறுதி கூறினார்.

"பிராந்திய கட்டமைப்பை வலுப்படுத்தல்: இந்து சமுத்திர அடையாளத்தை வலுவூட்டல்", என்ற தொனிப்பொருளின் கீழ் 2023 அக்டோபர் 09-10 தினங்களில் நடைபெறவுள்ள 25 ஆவது வருடாந்த சிரேஷ்ட அதிகாரிகளின் சந்திப்பைத்தொடர்ந்து, 2023 அக்டோபர் 11 அன்று கொழும்பில் நடைபெறவுள்ள 23 ஆவது அயோரா அமைச்சர் கூட்டமன்றத்தின் இலங்கையின் தலைமைத்துவத்திற்கான ஆயத்தநிலையை தூதுவர் தெரிவித்திருந்தார். மேலும் பிராந்திய ரீதியான கூட்டுறவை வலுப்படுத்துதற்கும், தொடர்ச்சியானதும் நிலையானதுமான அபிவிருத்தியை உறுதிசெய்துகொள்வதற்கும் அயோரா தலைமைப்பொறுப்பிலிருக்கும்போது ஈரானின் ஒத்துழைப்பை நாடுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

தூதுவர் அபொன்சு, இலங்கை காலநிலை மாற்றங்கள் மற்றும் கடல்சார் பாதுகாப்பு ஆகிய இரு முக்கிய விடயங்களில் கவனம் செலுத்துவதாக வலியுறுத்துவதுடன் RCSTT யுடனான கூட்டுறவை விரிவுபடுத்திக்கொள்வதற்கான ஆர்வத்தை பற்றியும் கருத்து தெரிவித்திருந்தார். மேலும், RCSTT மற்றும் இலங்கையின் விஞ்ஞானம், ஆராய்ச்சி  மற்றும் கல்விசார் நிறுவனங்களுக்கு இடையிலான பயனுறுதிப்பாடுடையதும் வினைத்திறனானதுமான கூட்டுத்தொடர்புகளின் சாத்தியப்பாடுகளை இனங்கண்டு அவற்றை முன்னெடுத்து செல்வதே முதன்மை நோக்கமாக கருதப்பட்டது. மேலும் IROST மற்றும் இலங்கை பல்கலைக்கழகங்களுக்கிடையிலான கூட்டுறவுக்கான கொள்திறன்களும் கலந்துரையாடப்பட்டது.

ஈரான் இஸ்லாமிய குடியரசினதும், RCSTT இனதும் இலங்கைக்கான ஒத்துழைப்பை உறுதி செய்ததுடன், RCSTT இன் தலைவர், அயோராவிற்கான இலங்கையின் தலைமைத்துவத்தில் டெஹ்ரானுக்கான இலங்கை தூதுவர் RCSTT இன் ஆலோசனை மன்ற தலைவராக செயற்படுவாரென்றும், அவருக்கு அயோரா மற்றும் RCSTT இனது   கவனத்திற்குரிய விடயங்கள், RCSTT இன் ஈராண்டு மற்றும் ஒவ்வொரு  கால எல்லைகளுக்கான சந்திப்புக்களை ஒழுங்குபடுத்தல், அயோரா நிகழ்வுகளுக்கான நீடித்த உதவியளித்தல் போன்றவற்றில் கவனம் செலுத்துவாரென எதிர்பார்க்கப்படுகிறார் என்றும் குறிப்பிட்டார். தூதுவர் இது தொடர்பான ஒத்துழைப்பை ஈரானிய பணிப்பாளர், RCSTT இன் செயலகம், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு, விஞ்ஞானம், ஆராய்ச்சி மற்றும் தொழிநுட்ப அமைச்சு, ஏனைய பங்குதாரர்கள் போன்றோரிடம் வேண்டினார்.

RCSTT இன் பணிப்பாளர் தூதுவருக்கான RCSTT செயலக கட்டிட வளாகத்தில் தள சஞ்சாரம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்ததோடு, அவருடைய இச்சந்திப்பு வினைத்திறனாக அமைந்தது எனவும் பாராட்டினார். தூதுவரின் இவ்வருகையானது, தூதர் அயோராவின் விசேடத்துவம் பெற்ற நிறுவனங்களின் தொலைநோக்குகளையும் இலக்குகளையும் நடவடிக்கைகளையும் அறிந்துகொள்வதற்கான சிறந்த வாய்ப்பாக அமைந்தது.

இலங்கை தூதரகம்

டெஹ்ரான்

14 ஆகஸ்ட் 2023

 

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close