புது டில்லியை தளமாகக் கொண்ட இலங்கைக்கான ஸ்பெயின் இராச்சியத்தின் முழு அதிகாரமுடைய மற்றும் சிறப்புத் தூதுவராக திரு. ஜோஸ் மரியா டொமிங்குஸ் அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன் ஸ்பெயின் இராச்சியத்தின் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தனது தகுதிச் சான்றுகளை இலங்கை ஜனாதிபதி அதிமேதகு கோத்தாபய ராஜபக்ஷ அவர்களிடம் கொழும்பு 01 இல் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையில் 2021 டிசம்பர் 21 ஆந் திகதி மாலை 5.30 மணிக்கு சமர்ப்பித்தார்.
வெளிநாட்டு அமைச்சு
கொழும்பு
2021 டிசம்பர் 23
Please follow and like us: