துர்க்கியேவுக்கான இலங்கைத் தூதுவரின், துர்க்கியே கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சருடனான சந்திப்பு

துர்க்கியேவுக்கான இலங்கைத் தூதுவரின், துர்க்கியே கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சருடனான சந்திப்பு

துருக்கிக்கான இலங்கைத் தூதுவர் ஹசந்தி உருகொடவத்த திஸாநாயக்க . துர்கியே குடியரசின் கலாச்சாரம் மற்றும் சுற்றுலா அமைச்சர் மெஹ்மத் நூரி எர்சோய் ஐ, 19 செப்டம்பர் 2023 அன்று, அங்காராவில் உள்ள கலாச்சார மற்றும் சுற்றுலா அமைச்சகத்தில் சந்தித்தார். மேலும், தூதுவர் அமைச்சருக்கு, கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டதற்கு ,  வாழ்த்து தெரிவித்ததுடன், பொலட்லியில் உள்ள, பழங்கால தொல்பொருள் தளமான கோர்டியன் கல்வெட்டு, யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக, 18 செப்டம்பர் 2023 அன்று, அறிவிக்கப்பட்டதற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

தூதுவர் துர்கியே மற்றும் இலங்கைக்கிடையே நிலவிவரும், நீண்டகால உறவை எடுத்துரைத்தத்துடன், கடலின் பட்டுப் பாதையால் , கலாச்சார தாக்கங்கள் வர்த்தக சமூகங்களுக்கிடையே, பரவி செல்வாக்கு செலுத்துகின்றமையை இன்றும், சில இலங்கை முஸ்லிம்கள், தமிழில் "துர்க்கி தொப்பி" என்று அழைக்கப்படும், Fez Cap ஐ, திருமண விழாக்களில்அணிவதைக் குறிப்பிட்டார். மேலும், வர்த்தக மையங்களின் அடிப்படையில், பண்டைய காலத்தில் மட்டுமல்ல, நவீன காலத்திலும், இரு நாடுகளின் தொடர்புகளின், முக்கியத்துவத்தை அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார்.

இலங்கை தனது 75 வது சுதந்திர தினத்தையும், துர்கியே தனது குடியரஷிற்கான 100வது ஆண்டு விழாவையும், இருநாடுகளும் தங்களுக்கிடையிலான இராஜதந்திர உறவுகளை நிறுவி, 75  ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுவதையும்  குறிப்பிட்டு, இரு நாடுகளுக்கும் 2023 ஆம் ஆண்டின் முக்கியத்துவத்தை தூதுவர் வலியுறுத்தினார். கொண்டாட்டத்திற்கான முக்கிய செயல்பாடுகளில் ஒன்றாக, இலங்கை தூதரகம் இருநாடுகளினதும், வெளிநாடு அலுவல்கள் அமைச்சகங்களுடன் ஒன்றிணைந்து 2023, அக்டோபர் 29 அன்று, இரு நாட்டு தொடர்புகளின் ஆண்டுப்பூர்த்தியை நினைவுகூறும்பொருட்டு,  தபால் தலைகளை வெளியிட உத்தேசித்துள்ளது.  அவர் மேலும், இலங்கையின் புகழ்பெற்ற கலைஞர் வசந்த பெரேரா முத்திரைகளை வடிவமைக்க ஒப்புக்கொண்டதையும், ஆண்டின் பிற்பகுதியில் துர்கியேவுக்கு விஜயத்தை மேற்கொண்டு, ஓவியக்கண்காட்சித்தொடரொன்றை நிகழ்த்துவதற்கும் இணங்கியுள்ளாரென தெரிவித்தார்.

தூதுவர் ஏற்கனவே, ஒரு குறுகிய காலத்திற்குள் துர்கியேவிலுள்ள, 25க்கும் மேற்பட்ட, பண்டைய தொல்பொருள் தளங்களை பார்வையிட்டதை அமைச்சர் பாராட்டினார். தூதுவர் மற்றும் அமைச்சர், இருதரப்பு சுற்றுலா ஊக்குவிப்புகளை எவ்வாறு அதிகரிப்பது என்பது குறித்து  கருத்துக்களை பரிமாறிக் கொண்டதுடன், இஸ்தான்புல்லுக்கும் கொழும்புக்கும் இடையிலான நேரடி விமான சேவையானது,  விமான கட்டணத்தை கணிசமான அளவில் குறைத்துள்ளதையும் அதனால் இருதரப்பு சுற்றுலாத்துறை சாதகமான விளைவுகளை கொண்டு வரலாமெனவும் குறிப்பிட்டார்.

"காடின்"(பெண்கள்), போன்ற புகழ்பெற்ற துருக்கிய தொலைகாட்சி நாடகங்களை தூதுவர் முன்னிலைப்படுத்தியதுடன், அவை சிங்களத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்டன என்பதையும்,   இதுபோன்ற தொலைக்காட்சித் தொடர்கள் மக்களிடையே புரிதலை எவ்வாறு அதிகரிக்கும் என்பதையும், வலியுறுத்தி, கலாச்சார இராஜதந்திரத்தின் ஒரு பகுதி சுற்றுலா, பொருளாதாரம்  மற்றும் அரசியல் ஆகியவற்றிற்கு பங்களிக்கிறது என்பதையும் குறிப்பிட்ட்டார்.

2024 இல், துர்க்கியேவில், ஒளிப்பதிவாளர் அனோமா ராஜகருணா, புகழ்பெற்ற இலங்கை எழுத்தாளரும் கவிஞருமான சுனேத்ரா ராஜகருணாநாயக்க மற்றும் சுயாதீன திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் எழுத்தாளரும், தற்போது, இஸ்தான்புல் மெடெனியேட் பல்கலைக்கழகத்தில் தனது பட்டப்படிப்பை தொடரும் எரந்த மஹாகமகே ஆகியோரின் பங்களிப்புடன் இலங்கை திரைப்பட விழா ஏற்பாடு செய்யப்படுவதாக தூதுவர் குறிப்பிட்டார். அவர் மேலும், இலங்கை வெளிநாட்டு சேவையிலுள்ள, அதிகாரி நிலுக கதுருகமுவ, தற்போது துணை உயர் ஸ்தானிகராகாவுள்ளார் என்பதுடன், துருக்கிய எழுத்தாளர் ஓர்ஹான் பாமுக் - "சிவப்பு முடி கொண்ட பெண்" மற்றும் "என் பெயர் சிவப்பு", ஆகிய இரண்டு நாவல்களை மொழிபெயர்த்துள்ளார் என்பதையும் நினைவு கூர்ந்தார்.

எதிர்வரும் இலங்கை தின நிகழ்வுகள் அடானா, ஆண்டலியா, பர்சா மற்றும் இஸ்மிர் ஆகிய இடங்களில் நடைபெறுமெனவும், அவை  இலங்கைக்கான வர்த்தகம் மற்றும் கலாச்சார மேம்பாட்டை நோக்காகக் கொண்டிருக்குமெனவும்  தூதுவர் அமைச்சரிடம் விளக்கினார். அமைச்சர், தூதரகம் மூலம் திட்டமிடப்பட்ட நடவடிக்கைகளில் ஆர்வம் காட்டியதுடன், கலாச்சாரம் மற்றும் சுற்றுலா அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட அவை பரந்த பார்வைக்காக, சர்வதேச நிகழ்வுகளுடன் இணைப்பது குறித்து பரிசீலிக்குமாறு கோரினார். கலாச்சாரத்தில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த தனது முழு ஆதரவையும் வழங்குவதாக அமைச்சர் உறுதியளித்தார்.

இலங்கை தூதரகம்

அங்காரா

2023, செப்டம்பர் 21

  

Please follow and like us:

Close