கொழும்பைத் தளமாகக் கொண்ட இலங்கைக்கான பிரான்ஸ் குடியரசின் முழு அதிகாரமுடைய மற்றும் சிறப்புத் தூதுவராக திரு. ஜீன்-பிரான்கோயிஸ் பேக்டெட் அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன் பிரான்ஸ் குடியரசின் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தனது தகுதிச் சான்றுகளை இலங்கை ஜனாதிபதி அதிமேதகு ரணில் விக்கிரமசிங்க அவர்களிடம் கொழும்பு 01 இல் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையில் 2022 நவம்பர் 11ஆந் திகதி காலை 10.00 மணிக்கு சமர்ப்பித்தார்.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,
கொழும்பு.
2022 நவம்பர் 11
.
Please follow and like us: