நியமனம் செய்யப்பட்ட லெபனானுக்கான தூதுவர் கபில ஜயவீர லெபனான் கர்தினாலுடன் சந்திப்பு

நியமனம் செய்யப்பட்ட லெபனானுக்கான தூதுவர் கபில ஜயவீர லெபனான் கர்தினாலுடன் சந்திப்பு

லெபனானில் உள்ள நியமனம் செய்யப்பட்ட லெபனானுக்கான தூதுவர் கபில ஜயவீர 2023 பெப்ரவரி 23ஆந் திகதி பெகெர்கியில் உள்ள மரோனைட் குலபதியின்  ஆசனத்தில் வைத்து, லெபனானில் உள்ள மரோனைட்டுகளின் குலபதியான கர்தினால் பெச்சாரா பூட்ரோஸ் அல் ராஹி அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்.

இந்த சந்திப்பில் இலங்கையின் இன மற்றும் மத அமைப்பு, இலங்கையின் அரசியலமைப்பு மற்றும் மதங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை  உறுதிப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு ஆகியவற்றால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட, அவரவர் விருப்பப்படி ஒரு மதம் அல்லது நம்பிக்கையை வைத்திருப்பதற்கான அல்லது ஏற்றுக்கொள்ளும் சுதந்திரம் உட்பட மத சுதந்திரம் ஆகியன குறித்து நியமனம் செய்யப்பட்ட தூதுவர் ஜயவீர விளக்கினார்.

நியமனம் செய்யப்பட்ட தூதுவரை அன்புடன் வரவேற்ற அவர், இன மற்றும் மத நல்லிணக்கத்தை உறுதிப்படுத்தும் இலங்கையின் முயற்சிகளைப் பாராட்டினார்.  இலங்கைக்கும் அதன் மக்களுக்கும் சமாதானம் மற்றும் செழிப்புக்காக ஆசி வேண்டி பிரார்த்தித்தார்.

இலங்கைத் தூதரகம்,

பெய்ரூட்

23 பிப்ரவரி 2023

Please follow and like us:

Close