இலங்கைக்கான இறைதூதர் ஜோசப் வாஸ் இன் உருவப்படம் மும்பை பேராயர் இல்லத்தில் திறந்து வைக்கப்பட்டமை

இலங்கைக்கான இறைதூதர் ஜோசப் வாஸ் இன் உருவப்படம் மும்பை பேராயர் இல்லத்தில் திறந்து வைக்கப்பட்டமை

 இந்தியாவிற்கான இலங்கையின் உயர் ஸ்தானிகர் மிலிந்த மொரகொடவினால், திங்கட்கிழமை (14) அன்று மும்பையிலுள்ள பேராயர் இல்லத்தில், மும்பை பேராயர் அருட்திரு ஒஸ்வெல் காடினல் கிரேஷஸ் முன்னிலையில் இலங்கைக்கான இறைத்தூதர் புனித ஜோசப் வாஸ் இன் உருவப்படம் திறந்து வைக்கப்பட்டது.

உயர் ஸ்தானிகரும், மும்பைக்கான பேராயரும் இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான நெருங்கிய மத ரீதியான தொடர்புகள் பற்றியும், குறிப்பாக இரு நாட்டு கத்தோலிக்க மக்களுக்கிடையிலான இடைத்தொடர்புகளுக்கான வழிமுறைகள் பற்றியும் கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர். மும்பையிலுள்ள இலங்கையின் கொன்ஸ்யூல் ஜெனரல் டாக்டர். வல்சன் வெதோடியும் இந்நிகழ்வுக்கு வருகை தந்திருந்தார்.

இந்தியாவின் மாபெரும் நற்செய்தி போதகர் புனித ஜோசப் வாஸ் 1651 இல் இந்தியாவிலுள்ள கோவாவில் பிறந்ததுடன், இலங்கை கத்தோலிக்க சமூகத்திற்கு முன்னோடியான சேவையொன்றை ஆற்றியுள்ளார். அவர் 1987 இல் நாட்டுக்கு நாடு இடம்பெயரும்  ஒரு மறைதொண்டராக மாறுவேடம் பூண்டு, அக்கால யாழ்ப்பாணத்திலிருந்த டச்சு கோட்டையை (இலங்கையின் வட பகுதி),  வந்தடைந்தார்.  அன்று தொடக்கம், இலங்கையின் கண்டியில் 1711 ஜனவரி 16 ஆம் திகதியில் அவர் இயற்கை எய்தும்வரை கத்தோலிக்கர்களுக்கும் ஏனையோருக்கும் ஈடிணையில்லா சேவையை ஆற்றியுள்ளார். இவர் 2015 ஜனவரி 14 இல் பாப்பரசர் பிரான்சிஸ் இனால் இலங்கையின் கொழும்பிலுள்ள காலி முகத்திடலில், புனிதத்துவமடையப்பெற்றார்.

உயர் ஸ்தானிகர் நிலையமானது, திறந்துவைக்கப்பட்ட புனித ஜோசப் வாஸ் இன் உருவபடத்தையொத்த படங்களை புதுடில்லியிலுள்ள கத்தோலிக்க மதத் தலைவர்களுக்கு  வழங்கியதுடன், மேலும் சில  படங்களை சென்னை மற்றும் மங்களூரிலுள்ள கத்தோலிக்க மத தலைவர்களுக்கும் வழங்க திட்டமிட்டுள்ளது.

இலங்கை உயர் ஸ்தானிகர் ஆலயம்

புதுடில்லி

15 ஆகஸ்ட் 2023

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close