தென் கொரியாவில் நடைபெறவுள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆளுநர் சபையின் வருடாந்தக் கூட்டத்தில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி பங்கேற்பு

தென் கொரியாவில் நடைபெறவுள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆளுநர் சபையின் வருடாந்தக் கூட்டத்தில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி பங்கேற்பு

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி, 2023 மே 2 முதல் 5 வரை நடைபெறவுள்ள  ஆசிய அபிவிருத்தி வங்கியின் 56வது வருடாந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக, ஜனாதிபதி ரணில் விக்கிமசிங்கவைப் பிரதிநிதித்துவப்படுத்தி தென்கொரியாவின் இன்சியான் நகருக்கு விஜயம் செய்யவுள்ளார்.

வருடாந்தக் கூட்டம் நிதி அமைச்சர்கள், மத்திய வங்கிகளின் ஆளுநர்கள், முக்கிய உலகளாவிய வங்கிகள், நிறுவனங்கள் மற்றும் ஊடகங்களின் சிரேஷ்ட அதிகாரிகள் உட்பட சுமார் 3,000 - 4,000 பங்கேற்பாளர்கள் கலந்து கொள்ளும் ஒரு உயர்மட்ட நிகழ்வாகும். இந்தக் காலகட்டத்திலான ஏனைய தலையீடுகளுக்கு மத்தியில், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் 2023 மே 04ஆந் திகதி ஆளுநரின் வணிக அமர்வில் அறிக்கையொன்றை வழங்குவார்.

இந்த நிகழ்வின் பக்க அம்சமாக, இலங்கையின் பொருளாதார மறுமலர்ச்சிக்கான தற்போதைய ஈடுபாடுகள் குறித்து கலந்துரையாடுவதற்காக அமைச்சர் பல நாடுகளின் பிரதிநிதிகளுடன் இருதரப்பு சந்திப்புகளில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த விஜயத்தில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் பணிப்பாளர் நாயகம் அஜித் அபேசேகரவும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சருடன் விஜயம் செய்யவுள்ளார்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு

கொழும்பு

2023 ஏப்ரல் 28

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close