ஒஸ்ட்ரியா மற்றும் அங்கீகாரம் பெற்ற நாடுகளில் சுற்றுலாத் தலமாக இலங்கையை ஊக்குவிப்பதற்காக, இலங்கை சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகத்தின் உதவியுடன் தூதரகம் 2023ஆம் ஆண்டிற்கான சுற்றுலா ஊக்குவிப்பு நாட்காட்டிகளை வடிவமைத்து விநியோகித்துள்ளது.
ஒஸ்ட்ரிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், வெளியுறவு அமைச்சு மற்றும் ஏனைய வரிசை முகவரமைப்புக்களின் அதிகாரிகள், ஒஸ்ட்ரிய வர்த்தக சபை, ஊடக மையப் புள்ளிகள், இலக்கு சந்தைப்படுத்தல் நிறுவனங்கள், பயணம் மற்றும் டிக்கெட் வழங்கும் முகவர் மற்றும் வணிக சமூகம் போன்ற ஒஸ்ட்ரிய வெளிச்செல்லும் சுற்றுலாத் துறையின் முக்கிய நபர்களுக்கு இந்த நாட்காட்டிகள் விநியோகிக்கப்பட்டன.
பேரின்பம், சாராம்சம், பண்டிகை, பாரம்பரியம், காடு, அழகு, இயற்கை மற்றும் சிலிர்ப்புகள் போன்ற இலங்கை சுற்றுலாவின் 8 கருப்பொருள்களைத் தொடும் கலாச்சார மற்றும் உயிரியல் பன்முகத்தன்மை, கண்ணுக்கினிய அழகு, கண்கவர் மற்றும் நம்பமுடியாத வளமான இலங்கையின் தாவரங்கள் மற்றும் நிலப்பரப்புகளின் காட்சி விளக்கத்தை இந்த நாட்காட்டி வடிவமைப்பு உள்ளடக்கியுள்ளது.
மத்திய ஐரோப்பாவிலிருந்து உயர்தர சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்கான தூதரகத்தின் இலக்குக்கு மேலும் துணைபுரியும் வகையில், இந்த நாட்காட்டிகளை அச்சடித்து விநியோகிக்கும் முயற்சிக்கு ஒஸ்ட்ரியா மற்றும் அங்கீகாரம் பெற்ற நாடுகளில் உள்ள இலங்கையின் கௌரவத் தூதுவர்கள் ஆதரவளித்தனர்.
இலங்கைத் தூதரகம் மற்றும் நிரந்தரப் பணிமனை,
வியன்னா
2023 ஜனவரி 17