பிரான்ஸ் - இலங்கை நட்புறவுச் சங்கம் ஆரம்பம்

பிரான்ஸ் – இலங்கை நட்புறவுச் சங்கம் ஆரம்பம்

பிரான்ஸ் - இலங்கை நட்புறவுச் சங்கத்தின் தொடக்கம் தொடர்பான முதலாவது கூட்டம் 2022 நவம்பர் 03ஆந் திகதி பாரிஸில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் பிரெஞ்சு சமூகத்தின் பல்வேறு பிரிவுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நலன் விரும்பிகளின் பங்கேற்புடன் நடைபெற்றது.

பங்கேற்பாளர்களை வரவேற்ற தூதுவர் பேராசிரியர் ஷானிகா ஹிரிம்புரேகம, இரு நாடுகளுக்கும் இடையிலான நட்பு, சமூக, கலாச்சார மற்றும் பொருளாதார உறவுகளை மேம்படுத்துவதற்காக பிரான்ஸ் - இலங்கை நட்புறவுச் சங்கம் ஸ்தாபிக்கப்படுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

பிரான்ஸ் சமூகத்தின் சார்பாக மாயா ஜிட்டிங் அவர்களின் ஆதரவுடன் பிரான்ஸ் - இலங்கை நட்புறவுச் சங்கத்தை தூதரகம் துவக்கியது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜிட்டிங், சங்கத்தின் வெற்றி மற்றும் நீண்ட கால நிலைத்தன்மையை உறுதி செய்வதற்காக, சிறிய - நடுத்தர நிறுவனங்கள், அரச சாரா நிறுவனங்கள், தனிநபர்கள் மற்றும் மாணவர்கள் சங்கத்தின் நோக்கங்களில் பொதுவான ஆர்வமுள்ள பிரஞ்சு சமூகத்திற்கான உறுப்பினர்களை வழங்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது எனக் குறிப்பிட்டார்.

பங்கேற்பாளர்களில் பெரும்பாலோர், பிரான்ஸ் - இலங்கை நட்புறவுச் சங்கத்தின் முக்கியத்துவத்தைப் பாராட்டியதுடன், பிரான்சுக்கும் இலங்கைக்கும் இடையிலான பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்துவதற்கும், பிரான்சுக்கும் இலங்கைக்கும் இடையிலான மக்கள் தொடர்புகளை மேலும் வலுப்படுத்துவதற்கும் சங்கம் உதவும் என நம்பிக்கை வெளியிட்டனர். .

அடுத்த கூட்டத்தில் சங்கத்தின் அலுவலக நிர்வாகிகள் நியமிக்கப்படுவார்கள்.

 

இலங்கைத் தூதரகம்,

பாரிஸ்

2022 நவம்பர் 11

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close