புதிய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சருடன் ரஷ்யத் தூதுவர்  சந்திப்பு

புதிய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சருடன் ரஷ்யத் தூதுவர்  சந்திப்பு

இலங்கைக்கான ரஷ்யக் கூட்டமைப்பின் தூதுவர் யூரி மேட்டரி புதிதாக நியமிக்கப்பட்ட வெளிநாட்டு அலுவல்கள்  அமைச்சர் அலி சப்ரியை 2022 ஜூலை 28ஆந் திகதி, வியாழக்கிழமை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வைத்து சந்தித்தார். அமைச்சர் சப்ரியின் நியமனத்திற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்த தூதுவர் மேட்டரி, புதிய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சருக்கான ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவின் வாழ்த்துச் செய்தியைக் கையளித்தார்.

இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான பாரம்பரியமான வலுவான பங்காளித்துவத்தின் குறிப்பிடத்தக்க அம்சங்கள் குறித்து ரஷ்யத் தூதுவர் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சருக்கு விளக்கமளித்தார். இருதரப்பு மற்றும் பல்தரப்பு அரங்குகளில் இலங்கைக்கு வழங்கப்பட்ட ரஷ்யாவின் ஆதரவுக்கு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ஆழ்ந்த  பாராட்டுக்களைத் தெரிவித்தார். வணிக உறவுகள், சுற்றுலா மற்றும் இணைப்புக்களை மேம்படுத்துவதில் குறிப்பாக கவனம் செலுத்தி, ஒத்துழைப்பை மேலும் ஒருங்கிணைப்பதற்கு அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

கொழும்பில் உள்ள ரஷ்யத் தூதரகத்தின் பிரதித் தலைவர் மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் சிரேஷ்ட  அதிகாரிகள் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு

கொழும்பு

2022 ஜூலை 31

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close