டொரன்டோ ஸ்ரீ வரசித்தி விநாயகர் இந்து ஆலய வருடாந்த தேர் திருவிழா

 டொரன்டோ ஸ்ரீ வரசித்தி விநாயகர் இந்து ஆலய வருடாந்த தேர் திருவிழா

இந்து ஆலயத்தின் பிரதான பூசாரி மற்றும் அறங்காவலர் சபையின் அழைப்பின் பேரில், ஸ்ரீ வரசித்தி விநாயகர் இந்து ஆலயத்தின் வருடாந்த தேர் திருவிழாவில் டொரன்டோவிலுள்ள இலங்கையின் துணைத் தூதரகம் 2022 ஜூலை 23ஆந் திகதி பங்கேற்றது.

இந்த விழாவில் 10,000 க்கும் மேற்பட்ட இலங்கை கனேடிய தமிழர்கள் கலந்து கொண்டதுடன், இவ்விழாவில் பல கனேடிய மாகாண அரசியல் பிரமுகர்கள் மற்றும் கனடாவின் பொது மற்றும் தனியார் துறையின் சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர். கனடாவின் கலாச்சார பன்முகத்தன்மை மற்றும் சமூகப் பொருளாதார மேம்பாட்டிற்காக இலங்கை கனேடிய தமிழ் சமூகத்தின் பங்களிப்பை கனேடிய அரசியல் தலைவர்கள் பாராட்டினர். உலகிலேயே அதிகளவான இலங்கைப் புலம்பெயர் தமிழர்களின் தாயகமாக கனடா மாறியுள்ளதாக அவர்கள் எடுத்துரைத்தனர்.

இலங்கை கனேடிய தமிழ் சமூகம் அவர்களின் பன்முகக் கலாச்சாரப் பாரம்பரியத்துடன் தொடர்புடைய நிகழ்வுகளில் ஆக்கபூர்வமான ஈடுபாட்டை பிரதிபலிக்கின்றது. டொரன்டோவில் உள்ள துணைத் தூதரகம் இலங்கை கனேடிய சமூகத்திற்கு கொன்சியூலர் மற்றும் ஏனைய சேவைகளை வழங்கும் அதே வேளையில், இலங்கையின் அபிவிருத்திக்கு ஆதரவளிக்கும் நோக்கில் ஆக்கபூர்வமான உரையாடலை தொடர்ந்தும் பேணி வருகின்றது.

இலங்கையின் துணைத் தூதரகம்,

டொராண்டோ

2022 ஜூலை 28

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close