சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இங்கிலாந்து பயணத்துறையினருடன் சந்திப்பு

சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இங்கிலாந்து பயணத்துறையினருடன் சந்திப்பு

அண்மையில் லண்டனுக்கு விஜயம் செய்திருந்த சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் 2022 ஜூன் 16ஆந் திகதி இங்கிலாந்து பயணத்துறையினரை சந்தித்தார். இலங்கை சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகத்துடன் இணைந்து இலங்கை உயர்ஸ்தானிகராலயம் ஏற்பாடு செய்திருந்த இந்த ஊக்குவிப்பு நிகழ்வானது, இலங்கைக்கான அத்தியாவசியமற்ற பயணங்களை மேற்கொள்வதனை தவிர்க்குமாறான ஐக்கிய இராச்சிய அரசாங்கத்தின் ஆலோசனை ஜூன் 11ஆம் திகதி நீக்கப்பட்டதன் பின்னணியில் சரியான நேரத்தில் இடம்பெற்றது. சுற்றுலா நடத்துனர்கள், பயண சங்கங்கள், பயண ஊடக மற்றும் விமான நிறுவனங்கள் மற்றும் விருந்தோம்பல் துறையின் பிரதிநிதிகள் உட்பட 60 க்கும் மேற்பட்ட இங்கிலாந்து பயணத்துறைத் தலைவர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். இலங்கைக்கு விஜயம் செய்யும் சுற்றுலாப் பயணிகளின் 2வது பெரிய பிறப்பிடம் இங்கிலாந்து ஆகும்.

வரவேற்பு உரையை ஆற்றிய உயர்ஸ்தானிகர் சரோஜா சிறிசேன, கடினமான சூழ்நிலைகளை வெற்றி கொண்ட ஒரு மீள்குணமிக்க நாடாக இலங்கை திகழ்வதாகத் தெரிவித்தார். இலங்கையை 'அடுத்த விடுமுறை இடமாக' மேம்படுத்துவதற்கு இலங்கை தனது நட்பு நாடுகளின் ஆதரவை நம்பியுள்ளது. பயணிகளின் ஆறாவது அறிவைத் தட்டிக் கேட்கும் தனித்துவமான ஒன்றை இலங்கை வழங்குகின்றது. இலங்கைக்கு ஒரு முறை விஜயம் செய்யும்  ஒரு பயணி, தன்னுடன் எடுத்துச் செல்லக்கூடிய அளவிலான இலங்கையின் தனித் தன்மையை அனுபவிக்கின்றார்.

உயர்ஸ்தானிகராலயத்தின் அமைச்சர் (வர்த்தகம்) கலாநிதி. லக்மினி மெண்டிஸ் நிகழ்வின் மூன்று சிறப்பு பேச்சாளர்களான ஐக்கிய இராச்சியத்தின் சுதந்திர பயண செயற்படுத்துனர் சங்கத்தின் வர்த்தகத் தலைவர் பாரத் கடோக், வெண்டர்லஸ்ட் இதழின் நிறுவனர் ஆசிரியர் லின் ஹியூஸ் மற்றும் லோன்லி பிளானெட்டின் அனுபவங்களுக்கான துணைத் தலைவர் டொம் ஹோல் ஆகியோரை அறிமுகப்படுத்தினார்.

ஒரு பயணி ஈடுபடக்கூடிய நடவடிக்கைகளின் விரிவான பட்டியல் இருப்பதால், விஷேட பயணிகள் இலங்கை போன்ற தனித்துவமான நாடுகளுக்குச் செல்ல வேண்டும் எனக் கருதுவதாக பாரத் காதோக் குறிப்பிட்டார். கடந்த காலத்தில் செய்தது போல் இங்கிலாந்தின் பயணிகளிடையே இலங்கையை மேம்படுத்துவதற்கு சுதந்திர பயண செயற்படுத்துனர் சங்கம் தயாராக இருப்பதாக அவர் உறுதியளித்தார். வென்டர்லஸ்ட் இதழ் தொடக்கத்தில் இருந்து, இலங்கையை வாசகர்களிடையே மிகவும் பிரபலமான இடமாகக் கருதி வருவதாகவும், கடந்த ஆண்டு வெண்டர்லஸ்ட் விருதுகளின் மூலம், பயணிகளின் முதல் 10 இடங்களில் ஒன்றாக இலங்கை தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் லின் ஹியூஸ் விளக்கினார்.  இலங்கைக்கான அத்தியாவசியமற்ற பயணங்களுக்கான இங்கிலாந்து பயண ஆலோசனையை நீக்கியதன் பின்னர் அவர்களது இணையத்தளத்தில் 'இலங்கை' என்ற தேடுதல் 100மூ அதிகரித்துள்ளது என்பதை அவர் எடுத்துரைத்தார். லோன்லி பிளானட்டில் தனது பயண அனுபவத்தின் மூலம், பயணி ஒருவர் பார்வையிடக்கூடிய சிறந்த தீவு இலங்கை என்பதை தன்னால் உறுதிப்படுத்த முடியும் என டொம் ஹோல் குறிப்பிட்டார். லோன்லி பிளானட் 1973 இல் இதழின் தொடக்கத்திலிருந்து இலங்கையில் 13 பயண வழிகாட்டிகளை வெளியிட்டதுடன், 2019 இல் பயணிப்பதற்கான இலக்கம் 01 என்ற அங்கீகாரத்தைப் பெற்றது.

நாட்டின் தற்போதைய நிலைமையை சமாளிக்க இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ விளக்கமளித்தார். இலங்கையின் விருந்தோம்பல் மற்றும் சுற்றுலாத் துறையில் முதலீட்டு வாய்ப்புக்களையும் அமைச்சர் எடுத்துரைத்தார். சுற்றுலா அமைச்சினால் தயாரிக்கப்பட்ட திட்டத்தின்படி செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதால், இந்த ஆண்டு குளிர்கால விடுமுறைக் காலத்தில் சுற்றுலாப் பயணிகளை வரவேற்க இலங்கை தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இலங்கை உயர்ஸ்தானிகராலயம்,

லண்டன்

2022 ஜூன் 28

 

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close