சோங்கிங் ஹூவாயன் கலாச்சாரம் மற்றும் கல்வி அறக்கட்டளை சர்வதேச பரிமாற்ற மையத்துடன் வீடியோ மாநாடு

 சோங்கிங் ஹூவாயன் கலாச்சாரம் மற்றும் கல்வி அறக்கட்டளை சர்வதேச பரிமாற்ற மையத்துடன் வீடியோ மாநாடு

இராஜதந்திர உறவுகளை நிறுவியதன் 65வது ஆண்டு நிறைவையும், ரப்பர் - ரைஸ் ஒப்பந்தத்தின் 70வது ஆண்டு நிறைவையும் கொண்டாடும் சந்தர்ப்பத்தில், இலங்கை தூதரகம் சோங்கிங் ஹூயான் கலாச்சாரம் மற்றும் கல்வி அறக்கட்டளை சர்வதேச பரிமாற்ற மையத்துடன் இணைந்து 2022 பிப்ரவரி 21ஆந் திகதி வீடியோ மாநாட்டை ஏற்பாடு செய்தது. இரு நாடுகளுக்கும் இடையிலான கலாச்சார, கல்வி மற்றும் மத ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகளை ஆராய்வதே இந்த மாநாட்டின் நோக்கமாகும். சோங்கிங் ஹூவாயன் கலாச்சாரம் மற்றும் கல்வி அறக்கட்டளை சர்வதேச பரிமாற்ற மையம் மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு ஆகியவற்றால் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டது.

சோங்கிங் தரப்பு பேச்சாளர்களுக்கு மேலதிகமாக வஜிராராம பௌத்த விகாரையைச் சேர்ந்த வணக்கத்திற்குரிய பாந்தே நானாசிஹ தேரர், தூதுவர் கலாநிதி பாலித கொஹொன மற்றும் திரு. சிரஞ்சய உடுமுல்லகே ஆகியோர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றினர்.

அநுராதபுரத்தில் இரண்டு வருடங்கள் தங்கியிருந்த சீன பௌத்த பிக்கு ஃபாக்சியனின் விஜயம் உறவுகளை வலுப்படுத்துவதற்கான அடித்தளத்தை வழங்கியதாக தூதுவர் குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், சீனாவில் பௌத்த மதத்தை மேம்படுத்துவதற்கு, குறிப்பாக பிக்குனி சாசனத்தை ஸ்தாபிப்பதில் இலங்கை பெரிதும் பங்களிப்புச் செய்துள்ளதாகக் குறிப்பிட்டார். மக்களுக்கிடையிலான தொடர்புகளை மேம்படுத்துவதற்கு பங்களிக்கும் முக்கிய துறைகளில் பௌத்த சுற்றுலாவும் ஒன்று என அவர் வலியுறுத்தினார்.

இலங்கைத் தூதரகம்

பெய்ஜிங்

2022 மார்ச் 0​7

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close