இலங்கை - இந்தோனேசியாவின் வரலாற்று உறவுகளை மீட்டெடுப்பதற்கான வெபினார் ஜகார்த்தாவில் உள்ள இலங்கைத் தூதரகத்தினால் ஏற்பாடு

 இலங்கை – இந்தோனேசியாவின் வரலாற்று உறவுகளை மீட்டெடுப்பதற்கான வெபினார் ஜகார்த்தாவில் உள்ள இலங்கைத் தூதரகத்தினால் ஏற்பாடு

இலங்கை - இந்தோனேசியா வரலாற்று உறவுகள் தொடர்பான வெபினாரொன்றை இந்தோனேசியாவிலுள்ள இலங்கைத் தூதரகம், களனிப் பல்கலைக்கழகம் மற்றும் இந்தோனேஷியா பல்கலைக்கழகத்துடன் இணைந்து 2022 பெப்ரவரி 24ஆம் திகதி ஏற்பாடு செய்திருந்தது. பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் கல்விமான்கள் உட்பட 104 பங்கேற்பாளர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். இந்தோனேசியா, இஸ்ரேல் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்த வரலாறு, மொழி மற்றும் மதம் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்ற ஐந்து கல்வியியலாளர்கள் நிகழ்வில் உரையாற்றினர்.

இந்தோனேசியாவுக்கான இலங்கைத் தூதுவர் யசோஜா குணசேகர தனது ஆரம்ப உரையில், இலங்கையும் இந்தோனேசியாவும் பண்டைய காலங்களிலிருந்து சமய, கலாச்சார மற்றும் சமூக பொருளாதார உறவுகளைப் பகிர்ந்துகொள்வதாகவும், 2022ஆம் ஆண்டு இரண்டு நாடுகளும் இராஜதந்திர உறவுகளை ஸ்தாபித்ததன் 70வது ஆண்டு நிறைவைக் குறிக்கின்றது என்றும் குறிப்பிட்டார்.

முதல் அமர்வில், மருத்துவ வரலாற்றாசிரியர் கலாநிதி. ஜமீர் கரீம், இலங்கையின் மலாய் சமூகத்தின் வரலாறு மற்றும் பாரம்பரியம் மற்றும் இலங்கைக்கான அவர்களின் பங்களிப்பு குறித்து கலந்துரையாடினார். இந்தோனேசியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பீட்டர் கேரி பதினெட்டாம் நூற்றாண்டில் சிலோன் மற்றும் டச்சு கிழக்கிந்தியத் தீவுகள் குறித்து விளக்கமளித்தார்.

இரண்டாவது அமர்வில், இஸ்ரேலின் ஹீப்ரு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ரோனிட் ரிச்சி இலங்கையில் உள்ள இந்தோனேசிய மலாய் நாட்டைச் சேர்ந்த நாடுகடத்தப்பட்டவர்கள் குறித்து விரிவாகக் குறிப்பிட்டதுடன், இந்தோனேசியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அஸ்யுமார்டி அஸ்ரா இலங்கை - இந்தோனேசியா வரலாற்று உறவுகள் குறித்து மதக் கண்ணோட்டத்தின் மூலம் கலந்துரையாடினார். களனிப் பல்கலைக்கழகத்தின் கலாநிதி ரொமோலா ரஸோல் இலங்கை மலாய் மொழி குறித்து விளக்கமொன்றை நிகழ்த்தினார்.

மூன்றாவது அமர்வில், இந்தோனேசியா பல்கலைக்கழகத்தின் மனிதநேய பீடத்தின் பீடாதிபதி கலாநிதி பொன்டன் கனுமோயோசோ மற்றும் களனி பல்கலைக்கழகத்தின் சர்வதேச உறவுகள் நிலையத்தின் பணிப்பாளர் பேராசிரியர் நீலாக்ஷி சி. பிரேவர்தன ஆகியோர் இரு பல்கலைக்கழகங்களுக்கிடையில் எதிர்கால கல்வி ஒத்துழைப்பு குறித்து கலந்துரையாடினர்.

இலங்கைத் தூதரகம்,

ஜகார்த்தா

2022 மார்ச் 07

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close