2022ஆம் ஆண்டிற்கான பணியின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் அனைத்து ஊழியர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். தூதுவர் கலாநிதி. பாலித கொஹொன அவர்கள் 2021ஆம் ஆண்டில் தூதரகத்தின் சாதனைகள் (26 மில்லியன் டோஸ் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்ளுதல், முக்கியமான நிதிப் பொதிகள் குறித்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுதல் மற்றும் குறிப்பிடத்தக்க முதலீடுகளுக்கான கடப்பாடுகளைப் பெறுதல்) குறித்து உரையாற்றினார். தூதரக உறவுகளின் 65 ஆண்டுகளைக் கொண்டாடுதல் மற்றும் ரப்பர் - அரிசி ஒப்பந்தத்தின் 70வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுதல் உள்ளிட்ட 2022ஆம் ஆண்டிற்கான செயற்றிட்டம் குறித்தும் அவர் கருத்து வெளியிட்டார். தூதரகத்தின் பணிகளைத் தடுக்கும் வகையில் நிலவுகின்ற கடுமையான பணியாளர்கள் மற்றும் நிதிக் கட்டுப்பாடுகளை உணர்ந்து, பணியின் இலக்குகளை அடைந்து கொள்வதற்காக, குறிப்பாக நாட்டின் தற்போதைய சவால்களை சமாளிப்பதற்கு உதவுவதற்காக, அனைத்து ஊழியர்களும் ஒரு குழுவாகப் பணியாற்றி, ஒன்றிணைந்து செயற்படுமாறு அவர் கேட்டுக் கொண்டார். இருதரப்பு வர்த்தகம், முதலீடுகள் மற்றும் சுற்றுலா உள்வாங்கலை அதிகரிப்பதில் தூதரகம் முக்கிய பங்கு வகிப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
இலங்கைத் தூதரகம்,
பெய்ஜிங்
2022 ஜனவரி 05