தாய்லாந்தில் உள்ள பௌத்த மதத்தின் தேசிய அலுவலகத்தின் பணிப்பாளர் நாயகம் நரோங் சோங்கரோம் மற்றும் தாய்லாந்து இராச்சியத்திற்கான இலங்கைத் தூதுவரும் யுனெஸ்கெப்பின் நிரந்தரப் பிரதிநிதியுமான சி.ஏ. சமிந்த ஐ. கொலொன்ன, இலங்கைக்கும் தாய்லாந்திற்கும் இடையிலான தசாப்தகாலப் பாரம்பரிய பௌத்த மற்றும் கலாச்சார உறவுகள் மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் பயனுள்ள கலந்துரையாடலில் அண்மையில் ஈடுபட்டார்.
பௌத்தத்தின் தேசிய அலுவலகத்தில் தூதுவர் சமிந்த கொலொன்னவை அன்புடன் வரவேற்ற பணிப்பாளர் நாயகம் நரோங் சோங்கரோம், தாய்லாந்தின் மத்திய அரச நிறுவனமாக, தாய்லாந்து பிரதமரின் நேரடி மேற்பார்வையின் கீழ், தாய்லாந்தின் உச்ச சங்க சபை மற்றும் பௌத்தத்தின் தேசிய அலுவலகம் ஆற்றிய பங்கை ஆய்வு செய்ததுடன், நீண்டகால சிறந்த நட்புறவு மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும் ஒருங்கிணைப்பதற்குமான முழுமையான ஆதரவை உறுதிப்படுத்தினார்.
இலங்கையின் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வெளிநாட்டு அமைச்சர் ஆகியோரின் அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்த தூதுவர் கொலொன்ன, 'நாட்டைக் கட்டியெழுப்பும் செழிப்பான பார்வை' மற்றும் தற்போதைய அரசாங்கத்தின் இருபது வெளிநாட்டுக் கொள்கை வழிகாட்டுதல்களின் கீழ், பௌத்தத்தை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும், ஒரே மாதிரியான மதிப்புக்களை மதிக்கும் நாடுகளுடன் நெருக்கமாக தொடர்புகொள்வதன் மூலம் 21ஆம் நூற்றாண்டின் சவால்களை எதிர்கொள்ள ஒன்றுபடுவதனால், பல மத மதிப்புக்களை மதிக்கும் தேரவாத பௌத்த கலாச்சார மையத்தினால் இலங்கையின் அடையாளத்தை உயர்த்துவதற்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டார்.
இக்கலந்துரையாடலில் செயற்குழு மற்றும் தேசிய பௌத்த அலுவலகத்தின் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். இந்த விஜயத்தின் போது, புத்தமந்தோனின் முதன்மை புத்தர் சிலையான ஃபிரா சி சக்காயா தோட்சபாலா யான் பிரதான் புத்தாமொந்தோன் சுதாட் மற்றும் லுவாங் போ வாட் ராய் கிங் சிலை, 14 ஆம் ஆண்டு ராயி கே பிராந்தியத்தின் விகாரையின் பிராந்திய ஆளுநரான ஃபிரா தெப்சாசனாபிபன் மற்றும் நாகோன் பாத்தோம் மாகாணத்தில் உள்ள அரச விகாரையிலுள்ள மடாதிபதி 14 ஆகிய பகுதிகளுக்கு தூதுவர் கொலொன்ன விஜயம் செய்தார்.
பௌத்தத்தின் தேசிய அலுவலகம் மற்றும் பிராந்தியம் 14இன் அரச விகாரையின் பிராந்திய ஆளுநர் மற்றும் வாட் ராய் கிங்கின் மடாதிபதி ஃபிரா தெப்சாசனபிபன் ஆகியோரின் அழைப்பின் பேரில், இலங்கையின் மல்வத்த மகா விகாரையிலிருந்தான புத்தரின் நினைவுச்சின்னங்கள், ஃபிரா ஸ்ரீ சகாய தோசபாலயன சிலை, ஃபிரா உபாலி மஹா மொங்கோன் ஸ்தூபியின் திசை வளைவுகளில் கடல் தோரணையை அமைதிப்படுத்தும் சுகோதாய் புத்தர் படம் ஆகியவற்றை பிரதிஷ்டை செய்யும் நிகழ்வு, அரச விகாரையான வாட் ராய் மன்னரின் முன்னாள் மடாதிபதியான ஃபிரா உபாலி குனுபமச்சனின் (பன்யா இந்தபான்யமஹாதேரா) 99வது ஆண்டு விழாவையொட்டி லுவாங் ஃபோ வாட் ராய் மன்னரின் (மடியின் அளவு 32 அங்குலங்கள்) சிலையை நிறுவும் விழா ஆகியவற்றில் தூதுவர் சமிந்த கொலொன்ன மற்றும் நகோன் பாதோம் மாகாண ஆளுநர் சுராசக் சரோன்சிரிசோட் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த மாபெரும் சமய நிகழ்வின் சங்கத் தலைவராக சங்க உச்ச சபையின் உறுப்பினரும், வாட் ட்ரைமிட்விட்டயாரம் விகாரையின் மத்திய பிரிவின் தலைமைக் கண்காணிப்பாளருமான சோம்டெட் ஃபிரா மஹா ராஜமோங்கொன்முனி கலந்துகொண்டார்.
தாய்லாந்து பான பொது நிறுவனமான தபனா சிறிவதனபக்தியின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியின் அழைப்பின் பேரில், பிர உபாலி மஹா தேரர் தங்கியிருந்து, 1753ஆம் ஆண்டு பொரோமகோட் மன்னரின் உத்தரவு மற்றும் கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்க மன்னரின் வேண்டுகோளின் பேரில் இலங்கைக்கு தனது பயணத்தைத் தொடங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க ஆலயமான அயுதயா மடாதிபதி அதிகரன் பிரசார்ட் கெமபுன்யோட் வட் தம்மராம தலைமையில் நடைபெற்ற கதீன வைபவத்தில் தூதுவர் சமிந்த கொலொன்ன மேலும் கலந்துகொண்டார். வரலாற்றுத் தளத்தை புதுப்பிப்பதற்காக தாய் பான பொது நிறுவனத்தால் முன்முயற்சிகள் எடுக்கப்பட்டதுடன், பிரமஹா போஜ் சுவாஜோ தேரோஹன்ட், மஹாசூலாலோங்கோர்ன்ராஜா வித்யாலயா பல்கலைக்கழகத்தால் அச்சிடப்பட்ட 'வணக்கத்திற்குரிய உபாலி தேரர் - சியம் வம்சவின் ஆபரணம்' என்ற கார்ட்டூன் பிரசுரம் அல்லது சித்திரக்கதைப் புத்தகத்தின் முதலாவது வெளியீட்டை தூதுவர் கொலொன்னவிடம் ஒப்படைத்தார். தற்போதைய ஆளுநர் வீரசை நக்மாஸ், அயுத்யாவின் முன்னாள் ஆளுநர் விதயா பெவ்போங், இலங்கைக்கான தாய்லாந்தின் முன்னாள் தூதுவர் போல்டேஜ் வொராசாட் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் இதில் கலந்துகொண்டனர்.
இலங்கைத் தூதரகம் மற்றும் நிரந்தரப் பணிமனை,
பேங்கொக்
2021 நவம்பர் 26