கொழும்பு பல்கலைக்கழகத்தின் வருடாந்த ஆராய்ச்சிக் கருத்தரங்கு 2021 இல் ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை வெளிநாட்டு அமைச்சர் வலியுறுத்தல்

கொழும்பு பல்கலைக்கழகத்தின் வருடாந்த ஆராய்ச்சிக் கருத்தரங்கு 2021 இல் ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை வெளிநாட்டு அமைச்சர் வலியுறுத்தல்

நவம்பர் 23ஆம் திகதி கொழும்பு பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற 2021ஆம் ஆண்டுக்கான வருடாந்த ஆராய்ச்சிக் கருத்தரங்கின் ஆரம்ப நிகழ்வில் வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் விஷேட விருந்தினராகக் கலந்துகொண்டார்.

பல துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் புகழ்பெற்ற கல்வியியலாளர்களை ஒன்றிணைக்கின்ற இந்த ஆராய்ச்சிக் கருத்தரங்கு, 'ஒரு இடைநிலை அணுகுமுறையின் மூலமான பாரபட்சமற்ற ஆராய்ச்சி' என்ற 2021 க்கான கருப்பொருளை எடுத்துக்காட்டுகின்றது.

இலங்கைக்கான பதில் இந்திய உயர்ஸ்தானிகர் வினோத் கே. ஜேக்கப் மற்றும் பல்கலைக்கழக பீடத்தைச் சேர்ந்த குறிப்பிடத்தக்க கல்வியியலாளர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

தொடக்க அமர்வில் உரையாற்றிய அமைச்சர், ஆராய்ச்சிக் கருத்தரங்கின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அதே வேளையில், ஆராய்ச்சிக் கருத்தரங்கின் இரண்டு முக்கிய அம்சங்களான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஆராய்ச்சி மற்றும் பின்பற்றப்படும் வழிமுறைகள் குறித்து பல்துறை அணுகுமுறையின் பரந்த சூழலில் குறிப்பாக கவனத்தை ஈர்த்தார்.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் வகிபாகம் குறித்து விரிவாக விளக்கிய வெளிநாட்டு அமைச்சர், எமது பல்வேறு சமூகங்களுக்குள் தொடர்புகளை வளர்ப்பதில் அதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த அதே வேளையில், இந்த விடயப் பரப்பானது பல்கலைக்கழகம் குறிப்பாக இளங்கலைப் பட்டதாரிகளுக்கு மட்டுமல்லாது, பெருநகரப் பல்கலைக்கழகத்தினால் வழங்கப்படுகின்ற நிபுணத்துவத்தால் பெரிதும் பயனடையும் வல்லுநர்கள் மற்றும் சமூக உறுப்பினர்களுக்கும் பயிற்றுவிக்கும் திட்டங்களை வழங்குவதில் அதிக திறன் கொண்ட ஒரு பகுதியாகும் என மேலும் குறிப்பிட்டார்.

பேராசிரியர் பீரிஸ் பல்துறை ஆராய்ச்சியின் முக்கியத்துவத்தையும், தற்போதைய கட்டத்தில் நாடு எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளை, குறிப்பாக கோவிட்-19 தொற்றுநோயைக் கையாள்வதில் அதன் மகத்தான பங்களிப்பையும் எடுத்துரைத்தார். நெருக்கடி முகாமைத்துவத்திற்கு இன்றியமையாத மற்றும் அவசியமான பல ஆராய்ச்சியாளர்கள், நுண்ணுயிரியலாளர்கள் மற்றும் நிபுணர்களின் கூட்டு முயற்சிகள் இந்த நிலைமையின் போது அவசியமானது. இவ்விடயத்தில் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் அளப்பரிய பங்களிப்பு குறித்து அமைச்சர் விசேடமாகக் குறிப்பிட்டார்.

சமீபத்திய எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் அனர்த்தம் மற்றும் அதன் இணை விளைவுகளை நிவர்த்தி செய்வதில்இடைநிலை அணுகுமுறையொன்றினால் செய்யப்படக்கூடிய விலைமதிப்பற்ற பங்களிப்பை எடுத்துக்காட்டி, நெருக்கடி நிர்வாகத்தில் தயார்நிலையின் முக்கியமான தேவையை வெளிநாட்டு அமைச்சர் அடிக்கோடிட்டுக் காட்டினார்.

தொடர்ந்து உரையாற்றிய பேராசிரியர் பீரிஸ், கொள்கை வகுப்பாளர்களின் முயற்சிகளை தெரிவிக்கக்கூடிய பல துறைகளில் மேற்கொள்ளக்கூடிய நிலையான ஆராய்ச்சியின் அவசியக் குறித்து கவனத்தை ஈர்த்தார்.

இலங்கையில் பல்கலைக்கழக அமைப்பின் தோற்றம் மற்றும் பரிணாமம் குறித்து விரிவாக விளக்கிய பேராசிரியர் பீரிஸ், சமூகத்தின் பரந்த பிரிவைச் சேர்ந்த மாணவர்களை வரவேற்கும் ஒரு உயர்தர அமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்துவது முதல் அனைத்தையும் உள்ளடக்கிய அமைப்பாக மாற்றுவது வரை இந்த அமைப்பின் தோற்றம் மற்றும் அதன் அபிவிருத்தியை நினைவு கூர்ந்தார். முறையான கல்வியின் உள்ளடக்கம் மற்றும் கிடைக்கக்கூடிய வாழ்வாதாரங்கள் ஆகியவற்றுக்கு இடையே உள்ள பொருத்தமின்மையை நிவர்த்தி செய்யும் வகையில், தொழில் சந்தையுடன் பொருந்தக்கூடிய திறன்களைக் கொண்ட தொழில் வாய்ந்த பட்டதாரிகளை உருவாக்குவதற்கு வழிவகை செய்யும் வகையில், சமூகப் பொருத்தமுடையதாக இருக்கின்ற அமைப்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றத்தின் அவசியத்தையும் வெளிநாட்டு அமைச்சர் எடுத்துரைத்தார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் 'அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை' என்ற தொலைநோக்குப் பார்வையையும், அதன் பகிரப்பட்ட வெற்றிக்கான சாத்தியத்தையும் சுட்டிக்காட்டிய வெளிநாட்டு அமைச்சர், இந்தியாவிற்கும் இலங்கைக்கும் அதன் மக்களுக்கும் இடையிலான துடிப்பான உறவை எடுத்துரைத்தார்.

கல்வி மற்றும் தொழிற்பயிற்சி ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பைத் துண்டித்து, தொழிற்பயிற்சி நிறுவனங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டியதன் மூலம், பல்வேறு திறமையான தொழில்கள் மற்றும் தொழில்முறைத் தொழில்களில் தகுதி பெற்ற அதிக எண்ணிக்கையிலான நபர்கள் உயர்கல்வி அமைப்பில் இணைக்கப்படலாம் என்பதனை சுட்டிக்காட்டி பேராசிரியர் பீரிஸ் தனது உரையை நிறைவு செய்தார்.

வெளிநாட்டு அமைச்சு,

கொழும்பு

2021 நவம்பர் 26

...............................................

Videos can be downloaded through the following links:

                                                                                                                      https://we.tl/t-73dIIyNXnr

                                                                                                                      https://we.tl/t-gbtsKNRnHh

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close