நமீபியாவுடனான உறவுகளை வலுப்படுத்துவதற்கு தென்னாபிரிக்காவில் உள்ள இலங்கைத் தூதரகம் எதிர்பார்ப்பு

நமீபியாவுடனான உறவுகளை வலுப்படுத்துவதற்கு தென்னாபிரிக்காவில் உள்ள இலங்கைத் தூதரகம் எதிர்பார்ப்பு

தென்னாபிரிக்காவுக்கான நமீபியாவின் உயர்ஸ்தானிகர் மாண்புமிகு வெய்க்கோ கே நஹிவெட்டவை இலங்கை உயர்ஸ்தானிகர் சிறிசேன அமரசேகர அண்மையில் சந்தித்தார். பிரிட்டோரியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் அங்கீகாரம் பெற்ற ஒன்பது நாடுகளில் நமீபியாவும் ஒன்றாகும். ஐ.நா. மனித உரிமைகள் பேரவை உள்ளிட்ட சர்வதேச மன்றங்களில் இலங்கைக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் நமீபிய அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் உயர்ஸ்தானிகர் அமரசேகர ஆரம்பத்தில் நன்றிகளைத் தெரிவித்தார். மேலும், எதிர்காலத்தில் சமூகக் குழுக்களிடையே மோதல்களைத் தடுப்பதற்கும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் நல்லிணக்கத்தில் இலங்கை அரசாங்கம் கடந்த பன்னிரெண்டு வருடங்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளதாக உயர்ஸ்தானிகர் விளக்கினார். மேலும், தேசிய மற்றும் மாகாண சபைத் தேர்தல்களின் மூலம் இந்த முன்னேற்றம் பொதுமக்களால் நன்கு அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும், இரண்டு உயர்ஸ்தானிகர்களும் மீன்பிடி அபிவிருத்தி மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளில் சாத்தியமான வணிக வழிகள் குறித்து கலந்துரையாடினர். கடல் வளங்கள் மற்றும் தெற்கு - தெற்கு ஒத்துழைப்பு ஆகியவற்றின் நிலையான பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக, இலங்கை தனியார் துறை, குறிப்பாக படகுகள் மற்றும் மீன்பிடி சாதனங்கள் உற்பத்தித் தொழில்களில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள், நவீன படகு சவாரி மற்றும் மீன்பிடித் தொழில்நுட்பத்தை நமீபியாவின் கடலோரப் பகுதிகளில் வாழும் விளிம்புநிலை மக்களுக்கு விரிவுபடுத்த தயாராக உள்ளன. நிலையான மீன்பிடித் தொழில்நுட்பங்கள், சமூக அபிவிருத்தி, ஏழைகள் வருமானம் ஈட்டும் வழிமுறைகள் மற்றும் மக்களின் ஊட்டச்சத்து இடைவெளிகளை நிரப்புதல் ஆகியவை முன்மொழியப்பட்ட திட்டத்தில் கருத்தில் கொள்ள வேண்டிய முக்கிய உண்மைகளாகும். மேலும், இலங்கையின் தகவல் தொழில்நுட்ப வர்த்தகமொன்று நமீபிய பங்குச் சந்தையில் தனது தயாரிப்புக்களை விரிவுபடுத்துவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளது.

பனை மரங்களின் பூக்களால் செய்யப்பட்ட விசேட மதுபானமான தென்னங்கள்ளினால் தயாரிக்கப்பட்ட அரக்கை உயர்ஸ்தானிகர் அமரசேகர நமீபிய உயர்ஸ்தானிகருக்கு அறிமுகப்படுத்தினார். மதுபானத்திற்கு தாராளவாத விதிகள் பின்பற்றப்படும் தென்னாபிரிக்கப் பிராந்தியத்தில் இது மிகவும் கவர்ச்சிகரமானதாக இருக்கும். குறைந்த மற்றும் நடுத்தர வருமானப் பிரிவினருக்கு மலிவு விலையில் உயர்தர மதுபானம் கிடைப்பதற்கு இது வாய்ப்பளிக்கின்றது.

இலங்கை உயர்ஸ்தானிகராலயம்,

பிரிட்டோரியா

2021 நவம்பர் 16

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close