மியன்மாரில் கைதுசெய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் நாளை நாடு திரும்பல்

மியன்மாரில் கைதுசெய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் நாளை நாடு திரும்பல்

மியன்மாரில் கைதுசெய்யப்பட்ட 12 இலங்கை மீனவர்களை, நாளை (23 ஏப்ரல்) நாட்டுக்குத் திரும்ப அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை வெளிநாட்டமைச்சு முன்னெடுத்துள்ளது.

மியன்மார் அரசாங்கத்துடனான பல்வேறு சுற்றுப் பேச்சுவார்த்தைகளின் பின்னர், இந்த மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டமைச்சு தெரிவித்துள்ளது. இவர்கள், நாளை சிங்கப்பூர் விமானம் SQ761 மூலம் யங்கூனிலிருந்து சிங்கப்பூர் பயணம் செய்து, பின்னர் அங்கிருந்து விமானம் SQ468 மூலமாக கொழும்பை வந்தடைவார்கள்.

மியன்மாரில் கைதுசெய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட நபர்கள் பின்வருமாறு;

ஏ.சி.ஐ ஃபெர்னாண்டோ, எல்.ஏ நிர்மித ஸ்ரீலால், எச் எஸ் சமிந்த, எச்.எஸ் ஜயந்த, டி கே எஸ் எஸ் ஹேமசந்திர, டி எம் கே மதுஷங்க, கே எம் ஃபெர்னாண்டோ, எஸ் நாணயக்கார, டபுள்யு என் ஃபெர்னாண்டோ, டி கே என் பீரிஸ், ஜே கே எஸ் லால் பெரேரா மற்றும் டபுள்யு ஏ எஸ் ஃபெர்னாண்டோ

நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்படும் இந்த மீனவர்களை சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக தனிமைப்படுத்தப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டமைச்சு தெரிவித்துள்ளது.

வெளிநாட்டமைச்சு

கொழும்பு

 

22 ஏப்ரல் 2021

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close