யுனெஸ்கோ பணிப்பாளரிடம், தூதுவர் பேராசிரியை திருமதி க்ஷானிகா ஹிரிம்புரகம அவர்கள் சான்றாதாரப் பத்திரம் கையளிப்பு

யுனெஸ்கோ பணிப்பாளரிடம், தூதுவர் பேராசிரியை திருமதி க்ஷானிகா ஹிரிம்புரகம அவர்கள் சான்றாதாரப் பத்திரம் கையளிப்பு

பாரிஸிலுள்ள கல்வி, விஞ்ஞானம் மற்றும் கலாச்சாரத்திற்கான ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் – யுனெஸ்கோ- தலைமையகத்தில் 16 ஏப்ரல் 2021 அன்று இடம்பெற்ற நிகழ்வில், அந்நிறுவனத்திற்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ள தூதுவர்,  பேராசிரியை திருமதி க்ஷானிகா ஹிரிம்புரகம அவர்கள் தனது சான்றாதாரப் பத்திரத்தை, யுனெஸ்கோ பணிப்பாளர் நாயகம் திருமதி ஓட்றி அசௌலே அவர்களிடம் கையளித்தார்.

இந்நிகழ்வினையடுத்து இடம்பெற்ற உரையாடலின்போது, தூதுவர் திருமதி க்ஷானிகா ஹிரிம்புரகம அவர்கள், யுனெஸ்கோவுடனான உறவினை வலுப்படுத்துவதில் இலங்கை அடைந்துள்ள நிலையான வளர்ச்சியைக் கோடிட்டுக்காட்டியதுடன், இலங்கையில் யுனெஸ்கோ ஆதரவளிக்கக்கூடிய பல முக்கியமான கலாச்சார தளங்கள் இருப்பதையும் குறிப்பிட்டார்.

யுனெஸ்கோ பணிப்பாளர் நாயகம், திருமதி திருமதி ஓட்றி அசௌலே தனது உரையில், யுனெஸ்கோவின் ஆதரவின் கீழ், ஆசிரியர் மேம்பாட்டிற்கான தெற்காசியா நிலையமாகவுளள இலங்கை யுனெஸ்கோவிற்கு வழங்கியுள்ள பங்களிப்புக்களைப் பாராட்டினார்.

யுனெஸ்கோவுடன் ஒருங்கிணைப்புக்கான மேலும் வழிகள் குறித்தும் அப்போது கலந்துரையாடப்பட்டது.

இலங்கை தூதரகம்/ யுனெஸ்கோவிற்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதித்துவம்
பிரான்ஸ்

22 ஏப்ரல் 2021

 

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close