பொது மக்களுக்கு தடையின்றி திறமையான சேவைகளை வழங்குவதனை உறுதி செய்வதற்காக, அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சுகாதாரப் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு அமைவாக, அமைச்சின் கொன்சியூலர் விவகாரப் பிரிவினால் வழங்கப்படும் ஆவணங்களை சான்றளிக்கும் சேவைகளை கட்டாயமாக முன் நியமனங்களை ஒதுக்கிக் கொள்வதன் அடிப்படையில் ஒரு நாளைக்கு குறைந்த எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் வகையில் மீண்டும் ஆரம்பிப்பதற்கு வெளிநாட்டு அமைச்சு தீர்மானித்துள்ளது.
அந்த வகையில், கொன்சியூலர் விவகாரப் பிரிவுக்கு வருகை தருவதற்கு முன்னர் பின்வரும் வலை இணைப்பு அல்லது தொலைபேசி இலக்கத்தினூடாக தொடர்பு கொண்டு, முன் நியமனத்திற்கான நேரத்தை ஒதுக்கிக் கொள்ளுதல் வேண்டும் என்பதுடன், குறித்த முன் நியமனங்களை வேலை நாட்களில் காலை 10.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை மட்டுமே மேற்கொள்ள முடியும்:
வலை இணைப்பு: http://consular.mfa.gov.lk/ONLINEBOOKING
தொலைபேசி இல.: +94 112 338 812
இந்த முறையில் முன் நியமனங்களை ஒதுக்கிக் கொள்ளாத நபர்கள் கொழும்பு 01 இல் உள்ள செலின்கோ கட்டிடத்தில் அமைந்துள்ள அலுவலக வளாகத்திற்குள் நுழைவதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பதுடன், தனிமைப்படுத்தப்பட்ட / ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ள பகுதிகளிலுள்ள மக்கள் இந்த நேரத்தில் அலுவலகத்திற்கு வருகை தருவதனைத் தவிர்த்துக் கொள்ளுதல் வேண்டும்.
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் இறப்பு, இழப்பீடு, மீள அழைத்து வருதல் மற்றும் இதர விடயங்கள் தொடர்பான கோரிக்கைகளுக்காக, தயவுசெய்து பின்வரும் தொலைபேசி இலக்கங்களில் தொடர்பு கொள்ளவும்:
தொலைநகல்:+94 112 473 899 மின்னஞ்சல்: consular@mfa.gov.lk
பிரிவு
|
தொலைபேசி
|
இறப்பு | +94 112 338 836 +94 113 136 715 +94 776 032 252 +94 773 586 433 +94 718415 623 +94 701428 246 |
இழப்பீடு | +94 112 437 635 +94 117 101 193 |
மீள அழைத்து வருதல் | +94 112 338 837 |
இதர விடயங்கள் | +94 112 338 843 +94 117 101 162 |
மாத்தறை மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள பிராந்திய கொன்சியூலர் அலுவலகங்களும் பொது மக்களுக்காக வேலை நாட்களில் திறக்கப்படும் என்பதை தயவு செய்து கவனத்தில் கொள்ளவும். பின்வரும் தொலைபேசி இலக்கங்கள் வாயிலாக முன் நியமனங்களை ஒதுக்கிக் கொள்ளலாம்:
மாத்தறையிள்ள பிராந்திய கொன்சியூலர் அலுவலகம்: +94 412 226 697
யாழ்ப்பாணத்திலுள்ள பிராந்திய கொன்சியூலர் அலுவலகம்: +94 212 215 972
வெளிநாட்டு அமைச்சு
கொழும்பு
10 நவம்பர் 2020