இந்த விஜயத்தின் போது, இலங்கை ஜனாதிபதி மற்றும் வெளிநாட்டு அமைச்சர் ஆகியோருடன் திரு. பொம்பியோ அதிகாரபூர்வ கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளார்.
இந்த விஜயத்தின் போதான கலந்துரையாடல்கள் இரு நாடுகளுக்குமிடையிலான பன்முக ஈடுபாட்டின் பல பகுதிகளை உள்ளடக்கும்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அவர்களின் ஆட்சிக் காலத்தில் இலங்கைக்கு விஜயம் செய்யும் மிக உயர்ந்த அமெரிக்கப் பிரமுகர் இராஜாங்க செயலாளர் பொம்பியோ ஆவார்.
வெளிநாட்டு அமைச்சு
கொழும்பு
24 அக்டோபர் 2020
Please follow and like us: