பயங்கரவாதம் மற்றும் மிலேசத்தனமான தீவிரவாதம் ஆகியவற்றை முறியடிக்கும் ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானங்களுக்கு இலங்கையானது செயல்வடிவம் வழங்கவுள்ளது.

பயங்கரவாதம் மற்றும் மிலேசத்தனமான தீவிரவாதம் ஆகியவற்றை முறியடிக்கும் ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானங்களுக்கு இலங்கையானது செயல்வடிவம் வழங்கவுள்ளது.

Photo 1 new

ஐ.நா உதவிச் செயலாளர் நாயகம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு நிறைவேற்று துறையின் நிறைவேற்று பணிப்பாளருமான மிச்சேல் கொனிங்ஸ் அவர்களின் இலங்கைக்கான விஜயத்தின் போது 2019 யூன் 7-8 ஆம் திகதிகளில்  இடம்பெற்ற கலந்துரையாடல்களில் சர்வதேச விழுமியங்கள் மற்றும் நடைமுறைகள் பிரகாரம் உறுதியான நடவடிக்கைகளை பின்பற்றி ஐ.நா பொறிமுறைகளுக்கு ஒத்துழைப்பை வழங்குதல் பற்றிய விடயம் முதன்மை வகித்தது. இந்தக் கலந்துரையாடலில் உள்ளடக்கப்பட்ட விடயங்களாவன பயங்கரவாதத்திற்கு நிதியுதவியளித்தல் மற்றும் சொத்துக்களை முடக்குதல், வெளிநாட்டு பயங்கரவாத போறாளிகளை கையாள்தல், பயங்கரவாத முறியடிப்பு சட்டவாக்கம்,  அடிப்படைவாதம் மற்றும் மிலேச்சத்தனமான தீவிரவாதம் ஆகியவற்றை முறியடித்தல், பயங்கரவாதிகளின் போக்குவரத்திற்கு எதிராக பயனுறுதியான எல்லை முகாமைத்துவம் மற்றும் தீவிரவாத சித்தாந்தம் மற்றும் மிலேச்சத்தனமான தீவிரவாதம் பற்றிய செய்திகளை இணையம் மற்றும் சமூக ஊடகங்களினூடாக பரப்பி அச்சுறுத்தல் விடுத்தல் போன்றவை ஆகும்.

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னர்  பயங்கரவாதத்தால் விடுக்கப்பட்டுள்ள புதிய அச்சுறுத்தலை முறியடிப்பதற்கு உதவுமாறு ஐ.நா செயலாளர் நாயகம் அன்டோனியோ கட்டர்ஸ் அவர்களுக்கு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் திலக் மாரபன அவர்களின் வேண்டுகோளுக்கு அமைவாக சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களால் ஏப்ரல் 24ஆம் திகதி விடுக்கப்பட்ட அழைப்பிற்கிணங்க ஐ.நா உதவிச் செயலாளர் நாயகம் கொனிங்ஸ் அவர்கள் இலங்கைக்கு வருகை தந்திருந்தார்.

ஐ.நா உதவிச் செயலாளர் நாயகம் சனாதிபதி மைத்திரபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை மரியாதை நிமித்தம் சந்தித்ததுடன் ஏனைய அரசியல் மற்றும்  சிவில் சமூக அமைப்புகளின்  தலைவர்களையும் சந்தித்தார்.

பாதுகாப்பு செயலாளர் சான்த கோத்தாகொட மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் ரவிநாத ஆரியசிங்க ஆகியோரின் இணை தலைமையில்  பாதுகாப்பு அமைச்சில்,  இடம்பெற்ற இருதரப்பு கலந்துரையாடலில், தாக்குதல்களை தொடர்ந்து பாதுகாப்பு படையினரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் பற்றிய விரிவான விளக்கம் அளிக்கப்பட்டதுடன் பயங்கரவாதம் மற்றும் மிலேச்சத்தனமான தீவிரவாதம் ஆகியவற்றை முறியடிப்பதற்கு அவசியமான “ஒட்டுமொத்த அரசாங்க” அணுகுமுறையொன்றின் அவசியம் தொடர்பில் வலியுறுத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு, சட்ட அமுலாக்கம் மற்றும் புலணாய்வு முகவராண்மைகள், சட்டத்துறை தலைமை அதிபதியின் திணைக்களம், சுங்கம், குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்களம் மற்றும் மத்திய வங்கியின்  நிதி புலணாய்வுப் பிரிவு ஆகியவற்றின் அதிகாரிகள் பங்கேற்றனர்.

சமீபத்திய தாக்குதலின் பின்னர், வெளிநாட்டு அமைச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சு ஆகியன தற்கொலை குண்டுத்தாக்குதலில் சம்பந்தப்பட்ட மூன்று குழுக்களான தேசிய தௌஹீத் ஜமாத்,(NTJ) ஜமாஅதே மில்லதே இப்ராஹிம் (JMI) மற்றும் விலாயத் அஸ் ஸைலானி(WAS)  ஆகியவற்றை இலங்கையின் உள்நாட்டு சட்டவாக்கத்தின் கீழ் பாதுகாப்பு சபையின் தீர்மானம் 1373(2001) இன் பிரகாரம் பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளித்தல் மற்றும் சொத்து முடக்குதல் அம்சங்களுக்கு வழியமைத்ததாக அவற்றை “பயங்கரவாத அமைப்புகளாக” வரையறுப்பதில் ஒத்துழைத்தன என்று சுட்டிக்காட்டப்பட்டது.  சம்பந்தப்பட்ட பாதுகாப்பு சபையின் தீர்மானங்களுக்கு அமைவாக, குறிப்பாக  வெளிநாட்டு  பயங்கரவாத போறாளிகளின் வளர்ச்சியை தடுத்தல் மற்றும் மிலேச்சத்தனமான தீவிரவாதத்தை முறியடித்தல் மற்றும் எல்லை பாதுகாப்பின் முக்கியத்தவம் பற்றிய தீர்மானங்களின் 2178(2014) மற்றும் 2396(2017) கீழ் சர்வதேச பயங்கரவாத முறியடிப்பு கடப்பாடுகளுக்கு இசைவாக இலங்கையால் மேற்கொள்ள வேண்டிய மேலதிக நடவடிக்கைகள் பற்றியும் ஐ.நா உதவி செயலாளரின் விஜயத்தின் போது ஆய்வுசெய்யப்பட்டன.

விஜயத்தின் முடிவில் இடம்பெற்ற மீளாய்வு கூட்டத்தில் வெளிநாட்டு அமைச்சர் திலக் மாரபன அவர்கள் ஐ.நா உதவி செயலாளர் நாயகத்திடம் இருந்து ஒரு மதிப்பீட்டையும் பெற்றுக்கொண்டதுடன் அரசாங்கத்துடனான எதிர்கால ஒத்துழைப்பு தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

இலங்கைக்கான  ஐ.நா ஒருங்கிணைப்பாளர் ஹெனா சிங்கர், தொழிநுட்ப பொருளாதார அபிவிருத்தி நிலைய(CTED) உத்தியோகத்தர்கள் மறறும் ஐ.நா நாட்டுக்குழு ஆகியோரும் உதவிச் செயலாளர் நாயகத்துடன் இணைந்திருந்தனர். இலங்கையின் நியூ யோர்கிற்கான நிரந்தர தூதரகமானது தொழிநுட்ப பொருளாதார அபிவிருத்தி நிலையம் (CTED)  உடன் ஒருங்கிணைப்பை மேற்கொண்டு வருகின்றதுடன்  விஜயத்தின் பின்னரான பின்தொடர் நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும்.

தொழிநுட்ப பொருளாதார அபிவிருத்தி நிலையமானது ஐ.நா பாதுகாப்பு சபையின்  பயங்கரவாத முறியடிப்பு குழுவிற்கு(CTC) உதவியளிக்க தாபிக்கப்பட்டதுடன் பயங்கரவாத முறியடிப்பு குழுவின் கொள்கை தீர்மானங்கள் முன்னெடுத்தல், உறுப்பு நாடுகளின் நிபுணத்துவ மதிப்பீடுகளை மேற்கொள்ளல் மற்றும் நாடுகளில் பயங்கரவாத முறியடிப்பு தொழில்நுட்ப உதவிகளுக்கு அனுசரணை வழங்கள் ஆகிய கடப்பாடுகளை கொண்டுள்ளது.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு

கொழும்பு

12 ஜூன் 2019

Photo 2

Please follow and like us:

Close