இலங்கை மக்களுக்கான அத்தியாவசிய மருந்துகள் மற்றும் உணவுப் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக, மியன்மாரின் சிதகு சயாதவ் பிரதி சங்க ராஜா அதி வணக்கத்திற்குரிய கலாநிதி அஷின் நயனிஸ்ஸர அவர்கள் 10,000 அமெரிக்க டொலர்களை (அண்ணளவாக இலங்கை ரூபாய் 3,679,200.00) 2022 செப்டம்பர் 09ஆந் திகதி இலங்கை அரசாங்கத்திற்கு நன்கொடையாக வழங்கினார்.

மியன்மாரின் பிரதி சங்க ராஜாவை மியன்மாருக்கான இலங்கைத் தூதுவர் ஜனக பண்டார  மரியாதை நிமித்தம் சந்தித்த போது, சிதகு சயாதவ் அதி வணக்கத்திற்குரிய கலாநிதி அஷின் நயனிஸ்ஸரவினால் யாங்கூனில் உள்ள சிதகு சர்வதேச பௌத்த அகாடமியில் வைத்து பண நன்கொடை தூதுவரிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

நன்கொடையை ஏற்றுக்கொண்ட தூதுவர் ஜனக பண்டார, இந்த கடினமான நேரத்தில்  இலங்கைக்கு 10,000 அமெரிக்க டொலர்களை நன்கொடையாக வழங்கியமைக்காக மியன்மாரின் வணக்கத்திற்குரிய பிரதி சங்க ராஜாவுக்கு தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்தார்.

இலங்கைத் தூதரகம்,

யாங்கூன்

2022 செப்டம்பர் 15

Please follow and like us:

Close